search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவோ"

    • ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Y300 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் விவோ Y300 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டுள்ளது.

     


    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ Y300 5ஜி மாடல் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் விவோ Y300 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் பர்ப்பிள், எமிரால்டு கிரீன் மற்றும் டைட்டானியம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடலின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • விவோ V40e 5G -யில் 50 MP Sony IMX882 பிரதான சென்சார் 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • விவோ V40e 5G தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

    விவோ V40 மற்றும் V40 Pro வெளியிட்ட பிறகு, தற்போது விவோ V40e-ஐ அறிமுகப்படுத்த விவோ நிறுவனம் தயாராகி வருகிறது. இது செப்டம்பர் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    SmartPrix இன் படி, இது V40 சீரிஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பு, விவோ T3 அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது, இது V40 இன் அதே வடிவமைப்பைபுடன் ஆனால் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்டுள்ளது.

    V40e வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களில் சமரசம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ப வழங்குவதை விவோ நோக்கமாகக் கொண்டுள்ளது. விவோ V40e 5G ஆனது 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை 120 Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது முந்தைய மாடல்களில் காணப்பட்ட அதே பிரீமியம் டிஸ்ப்ளே தரத்தை வழங்குகிறது. இது 4,500 Nits பீக் பிரைட்னஸ் மற்றும் 1,200 Nits ஹை பிரைட்னஸ் (HBM), மென்மையான ஸ்க்ரோலிங் ஆகியவற்றை உறுதி செய்யும். விவோ V40e 5ஜி மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் வழங்கப்படுகிறது.

    இது ஒப்போ ரெனோ 12 போன்ற சாதனங்களில் காணப்படும் திறன் வாய்ந்த போன்றதாக இருக்கும். விவோ V40e 5ஜி-யை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ V40e 5G -யில் 50MP Sony IMX882 பிரதான சென்சார் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    5500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். சரியான சார்ஜிங் வேகம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், IP65 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். இது தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டிருக்கும் என தெரிகிறது.

    விவோ V40e மான்சூன் கிரீன் (Monsoon Green) மற்றும் ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. விவோ V40e 5G ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி-யில் கிடைக்கிறது. இது OPPO F27 Pro+ மற்றும் Reno 12 போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    • விவோ ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • விவோ ஸ்மாரட்போன் மாடல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அறிமுக சலுகைகளுடன் துவங்கியுள்ளது.

    இந்தியாவில் விவோ T3 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    புதிய விவோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 3 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்டுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை விவோ T3 ப்ரோ 5ஜி மாடலில் 6.77 இன்ச் 2392x1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 720 GPU, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள விவோ T3 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டை் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, 5500எம்ஏஹெச் பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • விவோ T3 லைட் 5ஜி மாடல் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. விவோ T3 லைட் 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டுள்ள விவோ T3 லைட் 5ஜி மாடலில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்பி கேமரா உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் விவோ T3 லைட் 5ஜி மாடல் வைப்ரண்ட் கிரீன் மற்றும் மஜெஸ்டிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் விலை 19499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • ஒரு TB வரை ஸ்டோரேஜ்-ஐ நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

    ஸ்மார்ட்போன் விற்பனையில் விவோ நிறுவனம் முன்னணியாக திகழ்ந்து வருகிறது. விவோவின் புதுவகை ஒய் சீரிஸ் போன் விரைவில் இந்தியாவிற்கு வருவதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் விவோ ஒய்58 5ஜி செல்போன் நாளை விற்பனைக்கு வருகிறது.

    இந்த போன் 8GB RAM உடன் Snapdragon 4 Gen 2 SoC கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6,000mAh பேட்டரியும், 44W பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்வதாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் விலை 19499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    6.72-inch LCD full-HD+ டிஸ்பிளே உடன் 120Hz and 1,024nits peak brightness கொண்டதாக இருக்கும். ஒரு டிபி வரை ஸ்டோரேஜ்-ஐ நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 50 மெகா பிக்சல் கொண்ட கேமரா மற்றும் 2 egapixel shooter கேமராவில் அடங்கியுள்ளது. 7.99மி.மீ. தடிமன், 199 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

    • இந்தியாவில் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X போல்டு 3 ப்ரோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஜூன் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வரவிருக்கிறது.

    புதிய விவோ X போல்டு 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், செய்ஸ் பிராண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     


    இந்தியாவில் விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X போல்டு 3 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சீனாவில் விவோ X போல்டு 3 ப்ரோ மாடலின் விலை CNY 9,999 இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் இந்திய விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது விவோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



    • இந்த ஸ்மார்ட்போனில் 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 கொண்டிருக்கும் விவோ Y200 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்டட் ரேம், 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     விவோ Y200 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ கர்வ்டு AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    8 ஜ.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14

    64MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய விவோ Y200 ப்ரோ ஸ்மார்ட்போன் சில்க் கிரீன் மற்றும் சில்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • இவற்றில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    • ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டுள்ளது.

    விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. விவோ Y18 மற்றும் Y18e என அழைக்கப்படும் இரு மாடல்களிலும் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.

    டிசைனை பொருத்தவரை இரு மாடல்களும் விவோ Y03 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. விவோ Y03 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

     


    விவோ Y18 மற்றும் Y18e மாடல்களில் 6.56 இன்ச் HD+ 1612x720 பிக்சல் LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி G85 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க Y18 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 0.08 சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. விவோ Y18e மாடலில் 13MP பிரைமரி கேமரா, 0.08MP சென்சார் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், IP54 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 4ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை விவரங்கள்:

    விவோ Y18 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ Y18e ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களும் ஜெம் கிரீன் மற்றும் ஸ்பேஸ் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இவை விவோ இந்தியா இ ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. 

    • ஏற்கனவே விற்பனை செய்யப்படும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன்.
    • ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 உள்ளது.

    விவோ நிறுவனத்தின் V30e ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிட் ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விவோ V30e ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    புதிய விவோ V30e ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், 6.78 இன்ச் Full HD+ கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட்அவுட், அட்ரினோ GPU கிராஃபிக்ஸ், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க விவோ V30e மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், ஆரா லைட் அம்சம், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் விவோ V30e ஸ்மார்ட்போன் வெல்வெட் ரெட் மற்றும் சில்வர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 2 ஆயிரத்து 500 வரை எக்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.

    • காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்தது.
    • இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.

    விவோ நிறுவனம் உருவாக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டிரோன் கேமரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் விவோ ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்த சாதனத்திற்கு காப்புரிமை கோரி விவோ விண்ணப்பித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக வெளியான தகவல்களில் விவோ உருவாக்கும் புது ஸ்மார்ட்போனில் உள்ள டிரோன் கேமரா, ஆக்டிவேட் செய்ததும் ஸ்மார்ட்போனில் இருந்து தனியே பிரிந்து காற்றில் மிதக்க துவங்கிவிடும். அதன்பிறகு, பயனர்கள் கேமரா எவ்வளவு தூரம் பறக்க வேண்டும் என்றும், கேமரா எந்த கோணத்தில் இருந்து படம்பிடிக்க வேண்டும் என்பதை இதற்காக உருவாக்கப்படும் செயலி மூலம் கட்டுப்படுத்தலாம்.

     


    இந்த சாதனம் எப்போது பொது மக்கள் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இத்தகைய சாதனம் விற்பனைக்கு வந்ததும், ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் முறை முற்றிலுமாக மாறிவிடும். வானில் இருந்து எடுக்கக்கூடிய ஏரியல் ஷாட்களை ஸ்மார்ட்போன் மூலமாகவே எளிதில் எடுத்துவிட முடியும்.

    டிரோன் கேமரா கொண்ட புதிய விவோ ஸ்மார்ட்போனில் தலைசிறந்த புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்ட அதிநவீன கேமரா சென்சார்கள் வழங்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனினும், இந்த சாதனத்தில் எவ்வளவு பெரிய பேட்டரி வழங்கப்படும் என்பது மர்மமாகவே உள்ளது.

    அசத்தலான கேமரா சிஸ்டம், ஸ்மார்ட்போன் துறையில் முற்றிலும் புதிய முயற்சியாக இந்த மாடல் வெளியாகும் போதிலும், இதன் பேட்டரி திறன் தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களை விட குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது. மேலும், அடிக்கடி டிரோன் கேமராவை இயக்கும் போது ஸ்மார்ட்போனின் சார்ஜ் வேகமாக குறையவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

    • மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய விவோ T3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட விவோ T2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை நீட்டிக்கப்பட்ட ரேம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஒ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, EIS, 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் பேக் மற்றும் அழகிய டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     


    விவோ T3 5ஜி அம்சங்கள்:

    6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர்

    மாலி G610 MC4 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. , 256 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    50MP பிரைமரி கேமரா, OIS, EIS

    2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP54)

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ T3 5ஜி ஸ்மார்ட்போன் காஸ்மிக் பிளாக் மற்றும் க்ரிஸ்டல் ஃபிளேக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் மார்ச் 27-ம் தேதி துவங்குகிறது.

    • இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    விவோ நிறுவனத்தின் X ஃபோல்டு 3 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீரிசில் விவோ X ஃபோல்டு 3 மற்றும் விவோ X ஃபோல்டு 3 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக விவோ சீனா வலைதளம் மற்றும் வெய்போ பதிவுகளில் விவோ நிறுவனம் தனது விவோ X ஃபோல்டு 3 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. புது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களுடன் விவோ வாட்ச் 3, விவோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 4 மற்றும் விவோ பேட் 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     


    டீசர்களின் படி புதிய விவோ X ஃபோல்டு 3 மாடல்கள் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடல்கள் இதுவரை வெளியானதில் குறைந்த எடை மற்றும் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4 வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 64MP பெரிஸ்கோப் கேமரா, OIS, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ×