search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பர்ஃபி"

    • பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    என்னது பிஸ்கெட்டை வைத்து சாக்லேட் பர்ஃபியா, அதெப்படி என்று தானே யோசிக்கிறீங்க... நம்ம வீட்டில் இருக்கும் பிஸ்கெட்டை வைத்து எளிமையா செய்யலாம் பிஸ்கெட் பர்ஃபி. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்ல குழந்தைகளே எளிமையா இதனை செய்ய முடியும். அரைமணிநேரத்திலேயே இதனை செய்து முடித்துவிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    பிஸ்கெட்- ஒரு பாக்கெட்

    கோ கோ பவுடர்- அரைகப்

    பொடித்த நட்ஸ்- ஒரு கப்

    வெண்ணெய்- 50 கிராம்

    சர்க்கரை- அரைகப்

    செய்முறை:

    இந்த சாக்லேட் பர்ஃபி செய்வதற்கு கிரீம் இல்லாத பிஸ்கெட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பிஸ்கெட்டை எடுத்து அதனை சிறிது சிறிதாக உடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பு மிக்சியில் போட்டு பொடித்துவிடக்கூடாது.

    அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பிடித்த சர்க்கரை, கோ கோ பவுடர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை கெட்டியாகும் போது வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

    வெண்ணெய் சேர்த்தவுடன் இந்த கலவை சிறிது கெட்டியாகத்தொடங்கும். இந்த நேரத்தில் இந்த கலவையை எடுத்து நாம் ஏற்கனவே உடைத்து வைத்துள்ள பிஸ்கெட் கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

    இந்த கலவையை வெண்ணெய் தடவிய கேக் மோல்டில் கொட்டி சரி சமமாக சமப்படுத்த வேண்டும். பின்னர் இதனை மூடி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து பரிமாறலாம். கோடை விடுமுறையை கொண்டாடும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள். 

     

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் மிகவும் பிடிக்கும்.
    • இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,

    கேரட் துருவல் - 1 கப்,

    சர்க்கரை - 2 கப்,

    ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,

    நெய் - 1 டேபிள்ஸ்பூன்,

    அலங்கரிக்க :

    பிஸ்தா, பாதாம் - சிறிது.

    செய்முறை

    கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.

    பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும்.

    சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை கொட்டி நன்றாக அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இப்போது ராஜஸ்தான் ஸ்பெஷல் கேரட் கோவா பர்ஃபி ரெடி.

    குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன் கடைசியாக சேர்க்கலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • எள்ளில் இரும்புச்சத்து, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
    • வேர்க்கடலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    வறுத்த வேர்க்கடலை - 1 கப் 

    எள் - அரை கப் 

    உலர்ந்த தேங்காய் பொடி - 4 டேபிள் ஸ்பூன் 

    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்

    பால் பவுடர் - 6 டேபிள் ஸ்பூன்

    நெய் - 4 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - முக்கால் கப்

    தண்ணீர் - 1 கப்

    செய்முறை

    எள்ளை வெறும் கடாயில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் வறுத்தெடுத்து கொள்ளவும். ஆறிய பின் இதனை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    அடுத்ததாக வறுத்த வேர்க்கடலையும் பொடியாக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த வேர்க்கடலை மற்றும் எள்ளுடன் உலர்ந்த தேங்காய் பொடி சேர்க்கவும். இவை மூன்றையும் ஒன்று சேர நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி லேசாக சூடானவுடன் கலந்து வைத்துள்ள வேர்க்கடலை கலவையை சேர்த்து கிளறவும்.

    நெய் எல்லாம் உறிஞ்சி கலவை நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து, பால் பவுடர் மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

    மற்றொரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கலவை சேர்த்து கைவிடாமல் நன்கு கிளறவும்.

    இவை எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு திரண்டு வரும்போது, இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும்.

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு பர்ஃபியை துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

    குறிப்பு: உலர்ந்த தேங்காய் பொடிக்கு பதிலாக தேங்காய் துருவலை ஈரம் போகும் வரை வறுத்தும் பயன்படுத்தலாம்.

    • இந்த இனிப்பை 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    பால் பவுடர் - 2 கப்

    பால் அரை கப்

    பொடி செய்யப்பட்ட சர்க்கரை - அரை கப்

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    விருப்பமான நட்ஸ் - விருப்பத்திற்கேற்ப

    குங்குமப்பூ - 4 சிட்டிகை

    செய்முறை

    நட்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும், பாலை ஊற்றவும்.

    பின்னர் அதில் மெதுவாக பால் பவுடரையும் சேர்த்து கட்டி சேராதவாறு கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

    இடையிடையே நெய்யை சேர்த்துக்கொண்டே வர வேண்டும்.

    பின்பு பொடி செய்யப்பட்ட சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    கலவையானது கெட்டியாக ஆரம்பித்து, ஓரங்களில் நெய் பிரிந்து வாணலியில் ஒட்டாமல் வர ஆரம்பிக்கும்.

    அப்படி நன்கு கெட்டியாகி வரும் போது, சிறிது கலவையை எடுத்து உருட்டி பார்க்கவும். அவ்வாறு உருட்டும் போது, எளிதில் பந்து போலானால், சரியான பதத்தில் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

    பின் ஒரு அகலமான தட்டில் நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி பரப்பி விட்டு, அதன் மேல் குங்குமப்பூ மற்றும் நறுக்கிய நட்ஸ்களை தூவி, ஒரு நெய் தடவிய ஸ்பூன் கொண்டு லேசாக அழுத்தி விட்டு, 30 நிமிடம் அறை வெப்பநிலையில் அப்படியே வைக்க வேண்டும்.

    இறுதியில் ஒரு கத்தியால் அதை சதுர துண்டுகளாக வெட்டினால், சுவையான பால் பவுடர் பர்ஃபி தயார்.

    • குழந்தைகளுக்கு பர்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும்.
    • இன்று பிஸ்தா பர்ஃபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பிஸ்தா பருப்பு (உப்பில்லாதது) - 1 டம்ளர்

    சர்க்கரை - 2 1/2 டம்ளர்

    நெய் - 1/4 டம்ளர்

    நீர் - 3/4 டம்ளர்

    ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

    செய்முறை:

    ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். ஆற வைத்துப் பிஸ்தாவை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

    பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும். அடிக்கடி சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

    ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.

    சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.

    • இது வறுத்த நிலக்கடலை மற்றும் வெல்லப் பாகு சேர்த்து செய்யப்படும் ரெசிபி.
    • நிலக்கடலை மிட்டாய் எல்லா குழந்தைகளும் எப்பவும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.

    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - 200 கிராம்,

    நெய் - 200 கிராம்,

    சர்க்கரை - 300 கிராம்,

    முந்திரி, பாதாம் - தேவையான அளவு,

    ஏலக்காய் தூள் - சிறிதளவு,

    தேங்காய்த் துருவல் - சிறிதளவு.

    செய்முறை :

    வேர்க்கடலையை ஒரு மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும்.

    பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க வைத்து, கம்பி பாகு பதம் வந்தவுடன், அதில் அரைத்த வேர்க்கடலை விழுதைச் சேர்த்துக் கிளறவும்.

    சிறிது சிறிதாக நெய் சேர்த்தபடி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    அடுத்து தேங்காய்த் துருவல், பாதாம், முந்திரி, ஏலக்காய் தூள் கலந்து, கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியவுடன் வில்லைகள் போட்டுப் பரிமாறவும்.

    சூப்பரான தித்திப்பான வேர்க்கடலை பர்ஃபி ரெடி.

    • குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • வீட்டிலேயே சாக்லேட் பர்ஃபி செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க.

    தேவையான பொருட்கள்:

    பால் பவுடர் - 1/4 கப்

    கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி

    சர்க்கரை - 1/3 கப்

    தண்ணீர் - 1/4 கப்

    நெய் - 2 தேக்கரண்டி

    முந்திரி, பாதாம் - தேவையான அளவு

    செய்முறை :

    அச்சு தட்டில் நெய் தடவி தயாராக வைக்கவும்.

    முந்திரி, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சக்கரையுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .

    ஒரு நூல் பதம் வந்ததும் முன்பே கலக்கி வைத்துள்ள பால் பவுடர் கலவையை சேர்த்து கலக்கவும். இதனை மிதமான சூட்டில் இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் இல்லையேல் அடிபிடித்து விடும்

    இதனுடன் நெய் சேர்த்து கிளறி ஓரங்களில் ஒட்டாமல் ஒன்று திரண்டு வரும் பொழுதுமுன்பு நெய் தடவி வைத்துள்ள தட்டில் ஊற்றி நறுக்கிய பாதாம், முந்திரியை மேலே தூவி அலங்கரிக்கவும். பாதாம், முந்திரியை லேசாக தட்டி விடவும் அப்பொழுது தான் சாக்லேட் துண்டுகளில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். சிறிது ஆறியவுடன் கத்தி கொண்டு வில்லைகள் போடவும்.

    இப்போது சுவையான சாக்லேட் பர்ஃபி தயார்

    ×