என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துவையல்"
- மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும்.
- இந்த இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - ஒரு கப்,
பூண்டு - 2 பல்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 5,
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.
இப்போது சத்தான சுவையான வல்லாரை துவையல் ரெடி.
குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது.
- வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - அரை கட்டு,
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
தேங்காய் துருவல், - கால் கப்,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக்கீரையை முள் நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி.
குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மாங்காயில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று மாங்காய் வைத்து சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் - ஒரு கப்,
தோல் நீக்கி வெட்டிய மாங்காய் - 4 துண்டுகள்,
பச்சை மிளகாய் - 2,
கடுகு - கால் டீஸ்பூன்,
தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மாங்காய், தேங்காய், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வழித்தெடுக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி கலந்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான தேங்காய் மாங்காய் சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
- அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கைப்பிடி
தேங்காய் - கால் மூடி
சிவப்பு மிளகாய் - 7
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
- இந்த சட்னி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப),
கறிவேப்பிலை - கால் கப்,
தனியா - 2 டேபிள்ஸ்பூன்,
கருப்பட்டி - சிறிய துண்டு,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை
செய்முறை:
கடாயில் சிறிது 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தனியா சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி ஆற விடவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி, கருப்பட்டி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கினால்... புளிப்பு, காரம், இனிப்புச் சுவையுடன் வித்தியாசமான சட்னி தயார்!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
தேவையான பொருட்கள்:
எள்ளு - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - 1 துண்டு
வரமிளகாய் - 7
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு-1 /2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு-1 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளு விதைகளை சேர்த்து தீயினை சிம்மில் வைத்து வதக்கி விட வேண்டும்.
எள் வதங்கி நன்றாக வாசனை வந்த பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு பற்களை சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை சென்ற பிறகு,புளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
இப்போது இதில் வரமிளகாய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். பின்னர் வதக்கிய பொருட்களை நன்றாக ஆறியதும் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொஞ்சம் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறினால் ருசியான எள்ளு தேங்காய் சட்னி ரெடி!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த துவையல் தோசை, சப்பாத்திக்கு சிறந்த காம்பினேஷன்.
- சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 200 கிராம்,
காய்ந்த மிளகாய் - 3,
உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் - 4 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியா போட்டு வறுக்கவும்
அடுத்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
பிறகு, எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து, உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
இப்போது ருசியான வெங்காய துவையல் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
- கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 10
கொத்தமல்லித்தழை - 1 கப்
கறிவேப்பிலை - ¼ கப்
பச்சை மிளகாய் - 7
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய் - சிறு துண்டு
கடுகு - ½ டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.
பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.
கலவை ஆறியதும் பசை போல அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.
இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி' தயார்.
- வயிறு தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும்.
- இந்த கீரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை - 2 கட்டு,
வெங்காயம் - 1,
தக்காளி - 2,
இஞ்சி - ஒரு துண்டு,
காய்ந்த மிளகாய் - 8,
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - சிறிதளவு,
கறிவேப்பிலை
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தை சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்க வேண்டும்.
இப்போது சூப்பரான வெந்தயக்கீரை துவையல் ரெடி.
- முருங்கை கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி துவையல் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
துளிர் முருங்கைக் கீரை - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 8
புளி - நெல்லிக்காய் அளவு
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
முருங்கைக் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்த பின்னர் அதில் பூண்டு, வெங்காயம், முருங்கைக் கீரை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து கிளறி கொள்ளவும்.
10 நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து வாணலியை இறக்கி விட வேண்டும்.
வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இந்த துவையலை சூடான சாதம், இட்லி, தோசை ஆகியவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- இந்த சட்னி இரண்டு நாட்கள் வரை கெட்டு போகாது.
- இட்லி தோசைக்குக் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
வரமிளகாய் - 7 அல்லது மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
புளி - சிறிது,
பூண்டு - 5 பல்
உப்பு- 1 /2 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
வெங்காயம் தோல் உரித்து பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
தக்காளியைக்கழுவி பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் என ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிச்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த அரைத்த சட்னியில் ஊற்றி கிளறி பரிமாறவும்.
இப்போது காரசாரமான மிளகாய் சட்னி தயார்.
இது இரண்டு நாட்கள் வரை கெடாதிருக்கும் ஆகையால் சுற்றுலா பயணத்திற்கு கூட எடுத்துச்செல்லலாம்.
- அதிக நார்ச்சத்து உள்ள வாழைப்பூ மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது.
- மூலநோய், மூல புண்கள், இரத்தம் வெளியேறுதல் பிரச்சனைகளுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய் - கால் கப்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத்தூள், புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதனை ஆற வையுங்கள்.
அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.
மிக்சியில் முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
கடைசியாக பின் வாழைப்பூ, சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டி கலந்து விடவும்.
இப்போது சுவையான வாழைப்பூ துவையல் தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்