என் மலர்
நீங்கள் தேடியது "விஜய் ஆண்டனி"
- தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி.
- பஹல்காம் தாக்குதலை குறித்து விஜய் ஆண்டனி அவரது கருத்தை பதிவிட்டார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் தற்பொழுது சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய பஹல்காம் தாக்குதலை குறித்து விஜய் ஆண்டனி அவரது கருத்தை பதிவிட்டு ஒரு அறிக்கையாக நேற்று வெளியிட்டார். அதில் அவர் "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.
வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்." என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து நெட்டிசன்கள் விஜய் ஆண்டனி மீது கடும் எதிர்ப்பை முன்வைத்து அவர்களது கருத்துகளை பதிவு செய்தனர். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் "என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு
காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும்.
இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்." என கூறியுள்ளார்.
- தற்பொழுது சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
- பஹல்காம் தாக்குதலை குறித்து விஜய் ஆண்டனி அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான ரோமியோ மற்றும் மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இவர் தற்பொழுது சக்தி திருமகன் மற்றும் ககன மார்கன் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய பஹல்காம் தாக்குதலை குறித்து விஜய் ஆண்டனி அவரது கருத்தை பதிவிட்டு ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் "காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும், நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள்.
வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்." என தெரிவித்துள்ளார்.
- விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் .
- இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
`நான்' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.
இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சக்தித் திருமகன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசையமைப்பாளர் நடிகர் என பண்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.
- சங்கரதாஸ் சுவாமிகள் 100வது நினைவு நாளில் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துக் கொண்டார்.
2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.

விஜய் ஆண்டனி
இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

குத்தாட்டம் போட்ட விஜய் ஆண்டனி
இந்நிலையில் சங்கரதாஸ் சுவாமிகளின் 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் நாடகக்கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு நடிரோட்டில் நடனமாடி உற்சாகப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் இணைந்து ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர்.
- 'உச்சிமலை காத்தவராயன்' என்ற இந்த பாடலை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் நடிகர்களுமான மா.கா.பா.ஆனந்த் மற்றும் ஆர்.ஜே.விஜய் ஆகியோர் ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இதில் நடிகை ஆஷ்னா சவேரி இணைந்து நடனமாடியுள்ளார். 'உச்சிமலை காத்தவராயன்' என்ற இந்த பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார். இதன் நடனத்தை நடன இயக்குனர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் இந்த பாடலை அவரே எழுதி, ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார்.

மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய்
இந்நிலையில் 'உச்சிமலை காத்தவராயன்' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மா.கா.பா.ஆனந்த், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஆஷ்னா ஜாவேரி இணைந்து நடனமாடியுள்ள இந்த பாடல் வைரலாகி வருகிறது.
Glad to launch #SaregamaOriginals #UchimalaiKaathavaraayan music video ! 🔥 Watch now ➡️ https://t.co/38VgOxi8vpAll the best team 👍🏼An @AniVee13 Musical!@BeReadyFilms @makapa_anand @ashnazaveri @RJVijayOfficial @DONGLI_JUMBO @iamSandy_Off @MallikaArjunDOP @saregamasouth
— vijayantony (@vijayantony) November 21, 2022
- இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது.
தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன்
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

ரத்தம்
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ரத்தம்' திரைப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
. @csamudhan இயக்கத்தில்
— vijayantony (@vijayantony) December 2, 2022
நண்பர்கள் @VetriMaaran, @vp_offl & @beemji சிறப்பு தோற்றத்தில் #ரத்தம் #rathamteaser டிசம்பர் 5 மாலை 5 மணிக்கு release ஆகிறது☄️
பாசப்பறவைகள் கீழை📺⚒💣🔥⬇️ pic.twitter.com/byll8BdLEG
- சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி ரத்தம் படத்தில் நடித்து வருகிறார்.
- ‘ரத்தம்’ திரைப்படத்தின் டீசரில் 3 முன்னனி இயக்குனர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வெற்றிமாறன் - பா.இரஞ்சித் - வெங்கட் பிரபு
இந்த படத்தின் டீசர் வரும் 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் முன்னனி இயக்குனர்களான வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் 'ரத்தம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.
- இதில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
நடிகர் சிவா நடிப்பில் வெளியான 'தமிழ்படம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். மேலும் மின்னலே, அனேகன் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படத்திற்கு 'ரத்தம்' என பெயரிடப்பட்டுள்ளது.

ரத்தம்
இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வெற்றிமாறன், பா.இரஞ்சித், வெங்கட் பிரபு ஆகிய 3 பேரும் சிறப்பு தோற்றத்தில் இடம் பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- நடிகர் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
- இவர் நடித்துள்ள தமிழரசன் படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தமிழரசன்
தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜய் ஆண்டனியின் தமிழரசன் திரைப்படத்தை இயக்குனர் பாபு யோகிஸ்வரன் இயக்கி உள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ராமயா நம்பீசன் நடித்துள்ளார்.

தமிழரசன்
மேலும் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாலிவுட் நடிகர் சோனு சூட், யோகி பாபு, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிச்சைக்காரன்
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிச்சைக்காரன் -2 படக்குழு
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை அனுமதி பெறாமல் ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக கூறி 'பிச்சைக்காரன் -2' படக்குழுவினர் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் ஆண்டனி தற்போது இயக்கி வரும் திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிச்சைக்காரன்
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிச்சைக்காரன் -2 படக்குழு
இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???" என்று பதிவிட்டு இன்று மாலை 5 மணிக்கு அப்டேட் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இவன் பிச்சைக்காரந்தான்னு சாதாரணமா நெனச்சியா???
— vijayantony (@vijayantony) December 20, 2022
మీరు అతన్ని కేవలం మరో బిచ్చగాడు అనుకుంటున్నారా???
Today Evening 5pm💣#Pichaikkaran2 #Bichagadu2 #ANTIBIKILI 👺
- விஜய் ஆண்டனி தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிச்சைக்காரன் -2 படக்குழு
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிச்சைக்காரன் -2 போஸ்டர்
இந்நிலையில், விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும்'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#ANTIBIKILI 👺#Pichaikkaran2 #Bichagadu2 #Bhikshuka2 #Bhikshakkaran2
— vijayantony (@vijayantony) December 20, 2022
Satellite & Digital rights acquired by Star Network 🔴
Summer 2023 🔥@vijaytelevision @StarMaa @asianet @StarSuvarna @DisneyPlusHS @mrsvijayantony @vijayantonyfilm @DoneChannel1 @gskmedia_pr @gobeatroute pic.twitter.com/w0YPShC1xy