search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கூட்டர்"

    • தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார்.
    • 'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை கொள்ளையடித்தது'

    ஷோரூமிற்கு வெளியே ஓலா [OLA] மின்சார ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஓலா ஷோரூமில் சாகர் சிங் என்ற அந்த நபர் மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஆனால் அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாகி பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஓலா நிறுவனத்தின் மீது அதிருப்தியிலிருந்த சாகர் சிங், தள்ளுவண்டியில் அந்த மின்சார ஸ்கூட்டரை மாலை மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நேராக ஓலா ஷோரூம் வந்துள்ளார். ஷோரூமின் முன்னாள் நின்றுகொண்டு மைக்கில் சோகப் பாடல்களைப் பாடத்தொடங்கினார்.

    இதனால் அவரை சூழ்ந்து மக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சல்மான் கான் படத்தில் வரும் பிரபல சோகப் பாடலான Hum Dil De Chuke Sanam பாடலை சோகமான குரலில் ஓலா ஸ்கூட்டரை நோக்கி அவர் பாடியது அங்கிருந்தவர்களைச் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

    'ஏங்கும் இந்த இதயத்திலிருந்து பெருமூச்சு வெளியேறுகிறது, நான் என்ன குற்றம் செய்தேன், ஓலா என்னை தண்டித்தது, கொள்ளையடித்தது' என்று பொருள்படும்படி அவர் அந்த பாடலை பாடியதே மக்களின் சிரிப்பலைக்குக் காரணம் ஆகும். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்று தெரியாத நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மின்சார வானங்கள் பழுது பட்டும், திடீரென வெடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.
    • Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் மாதங்களில் புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அதிக திறன் கொண்ட புதிய ஹீரோ Xoom மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாடல் மேக்சி ஸ்கூட்டர் மற்றும் அட்வென்ச்சர் மாடலின் இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் சற்றே வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.

     


    அந்த வகையில், புதிய ஹீரோ Xoom மாடலில் கீலெஸ் இக்னிஷன், ரிமோட் மூலம் சீட்-ஐ திறக்கும் வசதி, ஹீரோ காப்புரிமை பெற்ற i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் 156சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 14 ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர ஹீரோ நிறுவனம் Xoom 125R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும். இதுதவிர எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம்.

    ஹீரோ Xoom 125R மாடலில் ஏர் கூல்டு, 124.6சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 9.5 ஹெச்.பி. பவர், 10.14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க், சுசுகி அவெனிஸ் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • டி.வி.எஸ். நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்.
    • உள்நாட்டு விற்பனையில் டி.வி.எஸ். நிறுவனம் 25.01 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச விற்பனையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது.

    2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிருவனம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 292 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு விற்பனையான 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதுதவிர மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 3 லட்சத்து 85 ஆயிரத்து 443 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

    இதன் மூலம் டி.வி.எஸ்.-இன் உள்நாட்டு விற்பனை 25.01 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்பனையான மாடல்களில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாடல் 91 ஆயிரத்து 824 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 19.19 சதவீதம் அதிகம் ஆகும். 

    • புதிய மேக்சி ஸ்கூட்டரில் கீலெஸ் இக்னிஷன், டூரிங் திறன் வழங்கப்படலாம்.
    • ஹீரோ மேக்சி ஸ்கூட்டருக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய மேக்சி ஸ்கூட்டர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் 2023 EICMA நிகழ்வில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதற்கான டீசரை ஹீரோ நிறுவனம் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் கரிஸ்மா XMR மாடலில் மட்டும் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கி இருக்கிறது. புதிய மேக்சி ஸ்கூட்டரிலும் இதுபோன்ற என்ஜின் வழங்கப்படுமா அல்லது முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    புதிய மேக்சி ஸ்கூட்டரின் டிசைன் ஏற்கனவே வெளியான டிசைன் பேடன்டில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. ஹீரோவின் புதிய மேக்சி ஸ்கூட்டரில் உள்ள அன்டர்போன் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வேறு ஸ்கூட்டர்களில் இதுவரை அதிகளவில் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற அம்சம் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் மேக்சி மற்றும் ஸ்போர்ட் ஸ்கூட்டர்களில் வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டரில் கீலெஸ் இக்னிஷன், டூரிங் திறன் வழங்கப்படலாம். இந்த மாடலில் பெரிய விண்ட்-ஸ்கிரீன் மற்றும் டாப் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய மேக்சி ஸ்கூட்டருடன் ஹீரோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.

    • எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது.
    • சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையை உயர்த்தியது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த முறை ஹீரோ இருசக்கர வாகனங்கள் விலை 1 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

    ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வில் வேறுபாடு இருக்கும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வில் ஸ்பிலெண்டர் மற்றும் பேஷன் உள்ளிட்டவைகளின் விலை குறைந்த அளவிலேயே உயரும் என்று கூறப்படுகிறது. மாறாக எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்பட இருக்கிறது.

    சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையில் ரூ. 7 ஆயிரத்தை உயர்த்தியது. அந்த வகையில், தற்போதைய விலை உயர்வில் இந்த மாடல் சேர்க்கப்படாது என்று கூறப்படுகிறது. பண்டிகை காலம் துவங்க இருப்பதை தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகன விலையை அதிகப்படுத்தி வருகின்றன.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் விற்பனையை அதிகப்படுத்தும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களை வாகன விற்பனையாளர்கள் அறிவிப்பர் என்று தெரிகிறது.

    • மணல் லாரி எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
    • மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம் நகரைச் சேர்ந்தவர் அப்துல் காதர்.

    இவரது மனைவி ஜெரினா பேகம் (வயது 36).

    இவர் இன்று காலை ரெட்டிபாளையம் சாலையிலுள்ள தனியார் பள்ளியில்

    படிக்கும் தனது மகள் சபிகா (14) , மகன் முகமது சைபு (4) ஆகியோரை விடுவதற்காக ஸ்கூட்டரில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெரினாபேகம் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    குழந்தைகள் சபிகா, முகமது சைபு ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், அங்கு வேகத்தடை அமைக்க கோரி மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்கள் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மருத்துவக் கல்லூரி போலீசார், போக்குவரத்து காவல் ஒழுங்கு பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்ப ட்டது.

    இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • ஹீரோ டெஸ்டினி 125 மாடலில் அன்டர் சீட் சார்ஜிங் போர்ட், ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி உள்ளது.
    • புதிய டெஸ்டினி 125 மாடலிலும் 124.6சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஸ்கூட்டர் மாடலின் குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கூட்டர் டெஸ்டினி 125 பிரைம் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 71 ஆயிரத்து 499, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது LX மற்றும் VX வேரியன்ட்களை விட முறையே ரூ. 7 ஆயிரத்து 749 மற்றும் ரூ. 14 ஆயிரத்து 239 வரை குறைவு ஆகும்.

    புதிய டெஸ்டினி மாடல் பழைய ஸ்கூட்டரை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. எனினும், இதில் பெரிய ஹெட்லேம்ப், பாடி நிறத்தால் ஆன மிரர்கள், ஒற்றை கிராப் ரெயில், சிங்கில் டோன் சீட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதே ஸ்கூட்டரின் எக்ஸ்-டெக் வேரியன்டில் உள்ள ப்ளூடூத் கனெக்டிவிட்டி இந்த வேரியன்டில் வழங்கப்படவில்லை.

     

    ஆனாலும், புதிய வேரியன்டில் அன்டர் சீட் சார்ஜிங் போர்ட், அன்டர் சீட் லேம்ப், ஆட்டோ ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், செமி டிஜிட்டல் கன்சோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ஹீரோ டெஸ்டினி 125 பிரைம் மாடலில் 10-இன்ச் ரிம்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன.

    இத்துடன் 124.6சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9 ஹெச்.பி. பவர், 10.36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT ரியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் உள்ள ஃபியூவல் டேன்க் ஐந்து லிட்டர்கள் கொள்ளளவு கொண்டிருக்கிறது. 

    • சுசுகி அக்சஸ் 125 புதிய நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    • புதிய நிறம் தவிர சுசுகி அக்சஸ் 125 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது.

    சுசுகி நிறுவத்தின் அதிகம் விற்பனையாகி வரும் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று அக்சஸ் 125. இந்திய சந்தையில் சுசுகி அக்சஸ் 125 மாடல் ஏற்கனவே பல்வேறு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. எனினும், இதன் மற்றொரு புதிய நிற வேரியன்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நிறம் கொண்ட வேரியன்டின் விலை ரூ. 85 ஆயிரத்து 300, எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    புதிய நிறம் கொண்ட சுசுகி அக்சஸ் பியல் ஷைனிங் பெய்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் வைட் மற்றும் பெய்க் என இரண்டு நிறங்களில் பெயின்ட் செய்யப்பட்டு, சீட் மட்டும் ரெட் நிறம் கொண்டிருக்கிறது. புதிய நிறம் டாப் என்ட் வேரியன்ட் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட்களிலும் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர சுசுகி அக்சஸ் 125 மாடல் 13 நிறங்களில் கிடைக்கிறது.

     

    சுசுகி அக்சஸ் 125 புதிய நிறம் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஸ்கூட்டரில் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் 124சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 8.5 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேரிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் சிங்கில் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் அல்லது டிரம் பிரேக் என வேரியன்டிற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் அக்சஸ் 125 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 889 என்று துவங்குகிறது. இந்த மாடல் யமஹா பசினோ 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் உள்ளது.
    • டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கி இருக்கிறது. இந்த வெர்ஷனின் விலை ரூ. 84 ஆயிரத்து 468, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி இல்லாத வேரியன்டை விட ரூ. 2 ஆயிரத்து 300 வரை விலை அதிகம் ஆகும்.

    ப்ளூடூத் வசதி கொண்ட இரண்டாவது ஜூப்பிட்டர் வேரியன்ட் இது ஆகும். ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ஜூப்பிட்டர் ZX ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் வேரியன்ட் விலை இதைவிட அதிகம் ஆகும். இந்த வேரியன்டிற்கு அதிக வரவேற்பு கிடைத்த காரணத்தால், தற்போது இந்த வேரியன்டிலும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய அப்டேட் காரணமாக ஜூப்பிட்டர் ZX டிரம் வேரியன்டில் டிவிஎஸ் டிரேட்மார்க் செய்திருக்கும் ஸ்மார்ட் எக்சோ-னெக்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், வாய்ஸ் அசிஸ்ட், எஸ்எம்எஸ் மற்றும் கால் அலெர்ட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பில்ட்-இன் யுஎஸ்பி மொபைல் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    மற்ற வேரியன்ட்களை போன்றே டிவிஎஸ் ஜூப்பிட்டர் ZX வேரியன்டிலும் 109.7சிசி, ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.77 ஹெச்பி பவர், 8.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் வேரியன்ட் விலை ரூ. 73 ஆயிரத்து 240 என்றும் கிளாசிக் வேரியன்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 648 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடல் ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் உள்ளது.
    • ஹோன்டா டியோ 125 மாடல் ஒட்டுமொத்தமாக ஏழு வித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது டியோ 125 சிசி ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியோ 125சிசி மாடல் ஸ்டான்டர்டு மற்றும் ஸ்மார்ட் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ. 83 ஆயிரத்து 400 முதல் துவங்குகிறது.

    புதிய ஹோன்டா டியோ 125 மாடலில் OBD2 விதிகளுக்கு பொருந்தும் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் eSP வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் செயல்திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதே என்ஜின் ஹோன்டா கிரேசியா 125 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    அந்த மாடலில் இந்த யூனிட் 8.14 ஹெச்பி பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடல் தோற்றத்தில் 110சிசி ஹோன்டா டியோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலின் அப்ரனில் ஹெட்லைட், முன்புற இன்டிகேட்டர்கள், கூர்மையான டிசைன், ஸ்ப்லிட் ஸ்டைல் கிராப்ரெயில், டூயல் அவுட்லெட் எக்சாஸ்ட் உள்ளது.

    இத்துடன் புதிய கிராஃபிக்ஸ், பிரம்மான்ட லோகோ வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹோன்டா டியோ 125சிசி ஸ்கூட்டர்- பியல் சைரன் புளூ, பியல் டீப் கிரவுன்ட் கிரே, பியல் நைட் ஸ்டார் பிளாக், மேட் மார்வல் புளூ மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், மேட் சங்கரியா ரெட் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஹோன்டா டியோ 125சிசி மாடலில் எல்இடி ஹெட்லைட், ஐட்லிங் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர் மற்றும் என்ஜின் இன்ஹிபிட்டர், இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் பீம், பாசிங் ஸ்விட்ச், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் ஸ்மார்ட் கீ வேரியண்டில் H ஸ்மார்ட் தொழில்நுட்பம், ஸ்மார்ட் ஃபைன்ட், கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சஸ்பென்ஷனுக்கு- முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் பிரீ-லோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சிங்கில் ரியர் ஸ்ப்ரிங் உள்ளது. இதன் பேஸ் வேரியண்டில் டிரம் பிரேக்குகள், ஸ்மார்ட் வேரியண்டில் பெட்டல் ரக முன்புற டிஸ்க் பிரேக் உள்ளது.

    • சுசுகி அக்சஸ் 125 மாடல் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் உள்ளது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 125சிசி ஸ்கூட்டர், அக்சஸ் 125 உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் 50 லட்சமாவது அக்சஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள கெர்கி டௌலா ஆலையில் இருந்து வெளியானது.

    இருசக்கர வாகன சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும், சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் அக்சஸ் 125 இருக்கிறது. இந்திய சந்தையில் சுசுகி அக்சஸ் 125 மாடல்- ஸ்டான்டர்டு, ஸ்பெஷல் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

     

    இதன் டாப் என்ட் வேரியன்ட் பெயருக்கு ஏற்றார்போல் ப்ளூடூத் மாட்யுல் மூலம் மிஸ்டு கால் அலெர்ட்கள், போன் பேட்டரி லெவல் இன்டிகேட்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் போன்ற அம்சங்களை வழங்குகிறது.

    சுசுகி அக்சஸ் 125 மாடலில் 124சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.58 ஹெச்பி பவர், 10 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடலில் ஸ்டீல் வீல்கள், டிரம் பிரேக்குகள் உள்ளன.

    இதன் டாப் என்ட் வேரியன்ட்களில் அலாய் வீல்கள், முன்புறம் டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய இருசக்கர வாகன சந்தையின் 125சிசி ஸ்கூட்டர்கள் பிரிவில் அக்சஸ் 125 மட்டுமின்றி பர்க்மேன் ஸ்டிரீட், பர்க்மேன் ஸ்டிரீட் EX மற்றும் அவெனிஸ் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்து வருகிறது. 

    • பியஜியோ வெஸ்பா GTV மாடலில் 300சிசி சிங்கில் சிலண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வெஸ்பா GTV மாடலில் கீலெஸ் ஸ்டார்ட் ஸ்டாப், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் போன்ற அம்சங்கள் உள்ளது.

    பியஜியோ நிறுவனம் தனது சக்திவாய்ந்த வெஸ்பா ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெஸ்பா GTV மாடல் முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 2023 மாடலில் ஏராளமான மாற்றங்கள், சிறு அப்கிரேடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதன்படி இந்த மாடலில் 300சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 23.4 ஹெச்பி பவர், 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ரெட்ரோ ஸ்கூட்டரில் ஃபுல் எல்இடி லைட்கள், மேட் பிளாக் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

     

    இத்துடன் அலாய் வீல்கள், எக்சாஸ்ட் கவர், கிராப்ரெயில், ரியர்வியூ மிரர்கள் மற்றும் ஃபூட்ரெஸ்ட் உள்ளிட்டவை மேட் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. புதிய வெஸ்பா GTV மாடலில் கீலெஸ் ஸ்டார்ட் ஸ்டாப், டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஏபிஎஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    2023 பியஜியோ வெஸ்பா GTV மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எனினும், இரண்டு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இந்தியா இதுபோன்ற மாடல்களுக்கான சந்தை இல்லை என்பதே காரணம் என்று தெரிகிறது.

    ×