search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226851"

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாசர்.
    • இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார். அதன்பின் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர் என பண்முகத்தன்மை கொண்டவர்.


    நாசர்

    இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா போலீஸ் அகாடமியில் நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்து படிகட்டுகளில் அவர் இறங்கி வந்த போது கால் வழுக்கி கீழே விழுந்ததில் நாசருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நடிகர் நாசர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாசர்.
    • நாசர் சினிமாத்துறையில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியானது.

    இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1985-ஆம் ஆண்டு வெளியான கல்யாண அகதிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாசர் அறிமுகமானார். அதன்பின் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய், பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்க தலைவர் என பண்முகத்தன்மை கொண்டவர்.

    நாசர் தற்போது இரண்டாவது முறையாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பு வகிக்து வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நாசர், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது.

    இந்நிலையில் நாசர் பல வெப் சீரிஸ்களிலும், சில படங்களில் பிசியாக நடித்து வருவதாகவும் இது போன்ற வீண் வதந்திகளை ஏன் பரப்புகிறார்கள் என்று கண்டுபிடிக்க கூட அவருக்கு நேரம் இல்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக நடிகர் சங்க கட்டிடப் பணியை விரைவில் கட்டிமுடிப்பதாக சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி முதல்வரின் கரங்களால் திறந்து வைக்க முழு வீச்சில் அவர் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார்.
    • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார்.

    தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு இவர் காலமானார். அவருக்கு வயது 48. மீனா, கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகாவும் குழந்தை நட்சத்திரங்களாக 'தெறி', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    சுந்தர்.சி  - நாசர்

    சுந்தர்.சி  - நாசர்

    அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா உள்ளிட்ட பலர் நேரில் சென்று வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர்கரும் இயக்குனருமான சுந்தர்.சி மற்றும் நடிகர் நாசர் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ளனர்.

    ×