என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய பகவான்"

    • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
    • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

    நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

    1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

    2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

    3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

    4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

    5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

    6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

    7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

    8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

    9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

    • உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.
    • இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.

    நோயற்ற வாழ்வு தரும் சூரிய வழிபாடு

    தேவர்களுக்கு மனிதர்களின் ஒரு வருஷத்தில், ஆறுமாதம் பகல், ஆறு மாதம் இரவு.

    உத்தராயணம் என்னும் தைமாதம் முதல் ஆனி மாதம் முடிய ஆறுமாத காலம் தேவர்களுக்கு பகல்.

    ஆகவே இந்த மாதங்களில் தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யவும் வீட்டில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை நடத்தவும் மிகச் சிறந்தகாலமாக கருதப்படுகிறது.

    உத்தராயணம் தொடங்கும் நாள் அனைவரும் சூரியனை பூஜிக்க வேண்டும்.

    அனைத்து தெய்வங்களையும் சூர்ய மண்டலத்தின் நடுவில் தியானம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்ரம்.

    இதனால் நோயற்ற வாழ்வை சூர்யனிடத்திலிருந்து நாம் பெறலாம்.

    • இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.
    • இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார். இறைவி பெரியநாயகி அம்பிகை.

    சென்னையில் சூரிய கோவில்

    சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள கொளப்பாக்கத்தில் சூரியனுக்கு என்றே சிறப்புத் தலம் உள்ளது.

    இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது.

    போரூரில் இருந்து மியாத் மருத்துவமனை எதிரே செல்லும் சாலை வழியாக, கெருகம்பாக்கம் சென்றால் கொளப்பாக்கத்தை எளிதில் சென்று சேரலாம்.

    அங்கு ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார்.

    இறைவி பெயர் பெரியநாயகி அம்பிகை.

    இது 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவிலாகும்.

    இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தபடி மேற்கு நோக்கிய திசையில் சூரியன் உள்ளார்.

    தனி சன்னதியில் உள்ள சூரியன், இங்கு சிவனை வணங்குவதாக ஐதீகம்.

    இங்கு சூரிய பகவானுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் உள்ள அனைத்து கடவுள்களும் சூரியனை நோக்கியே உள்ளன.

    சூரியனுக்கு உகந்த நிறமான சிவப்பு வஸ்திரம் சார்த்தி இங்கு வழிபடுகிறார்கள்.

    கோதுமை பொருட்கள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    இங்கு வழிபாடுகள் செய்ய ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும்.

    இத்தலத்தில் சூரியனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

    உடலில் அழகு உண்டாகும்.

    அகத்திய முனிவர் இத்தலத்தில் சிறப்பு வழிபபாடுகள் செய்ததால், இறைவன் அகத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

    ராஜகணபதி, காசி விசுவநாதர், சுப்பிரமணியர், தனி சன்னதிகளில் உள்ளனர்.

    சுப்பிரமணியர் தலத்தில் உள்ள மயில் மரகதக் கல்லால் (பச்சை) உருவாக்கப்பட்டதாகும்.

    இங்குள்ள கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

    ஞாயிறு தோறும் ராகு காலத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    6 வாரம் தொடர்ந்து பைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும்.

    ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், சுந்தரபபாண்டியன், வீரராஜேந்திர சோழன் உள்பட பல அரசர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர்.

    சுமத்ராதீவு மன்னன் இங்கு வழிபாட்டு சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டதாக கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

    சமீப காலமாகத்தான் சென்னையில் உள்ள இந்த சூரிய தலம் பக்தர்களிடம் பிரபலமாகி வருகிறது.

    சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால் அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திலேயே பரிகார பூஜைகளை செய்யலாம்.

    • சூரியன் வழிபட்ட தலம் என்பதால் ஞாயிறு தலம் எனவும் அழைக்கப்படுகிறது.
    • முஸ்லிம், கிறிஸ்துவ அன்பர்களும் இப்பெருமானை தரிசித்து தொண்டு புரிகின்றார்கள்.

    சனி தோஷம் நீங்க திருநள்ளாறு செல்வது போல், களத்திர தோஷம், விவாஹப் பிரபந்திர தோஷம், புத்திர தோஷம்,

    உத்தியோகப் பிரபந்திர தோஷம் உள்ளவர்களும், கண் பார்வை குறை உள்ளவர்களும், உடல் ரோகம் உள்ளவர்களும்,

    சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வந்து

    சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கி நவக்கிரக நாயகர்களின் அனுக்கிரகம் உண்டாகும்.

    சூரியன் வழிபட்ட தலம் என்பதால் ஞாயிறு தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

    முஸ்லிம், கிறிஸ்துவ அன்பர்களும் இப்பெருமானை தரிசித்து தொண்டு புரிகின்றார்கள்.

    இவ்வாலயம் சகல மதத்தினரும் போற்றிப் புகழ்பாடும் ஒரு புராதனமான வரலாற்று புண்ணிய தலம் ஆகும்.

    மத ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த தலமாக விளங்குகிறது.

    இதற்கு சான்றாக 1933ல் ஞாயிறு கிராமம் நாட்டாமைக்காரரும், செம்பியம் மாஜிஸ்திரேட்டுமாகிய எம்.எஸ்.காதர் முஹைதீன் சாஹிப்பால் இயற்றப்பட்டு,

    அவரது சகோதரர் எம்.எஸ்.ஷேக் முஹைதீன் சாஹிப்பால் பதிப்பிக்கப்பட்ட "ஞாயிறு நாட்டு ஸ்ரீ சங்கிலி நாச்சியார் சரித்திரம்" என்னும் நூலே ஆதாரமாக உள்ளது.

    கிறிஸ்துவ அன்பர்களில் ஒருவர் திருவிளக்கு ஏற்ற எண்ணெயையும், மற்றொருவர் ஓர் பசுவினையும் தானமாக வழங்கியுள்ளார்கள்.

    • தானியம் - கோதுமை
    • வஸ்திரம் - சிவப்பு நிற ஆடை

    தானியம்- கோதுமை

    மலர்- செந்தாமரை

    வஸ்திரம்- சிவப்பு நிற ஆடை

    ரத்தினம்- மாணிக்கம்

    நிவேதனம்- கோதுமைச் சக்கரான்னம்

    சமித்து- வெள்ளளெருக்கு

    உலோகம்- செம்பு

    தூப தீபம்- சந்தனம்

    • ஞாயிறு திருத்தலத்தில் மொத்தம் 4 விநாயகர்கள் இருக்கிறார்கள்.
    • பல்லவ விநாயகர், ஆலயத்தின் உள்ளே சூரியனுக்கு நேரே அமர்ந்துள்ளார்.

    ஞாயிறு திருத்தலத்தில் மொத்தம் 4 விநாயகர்கள் இருக்கிறார்கள்.

    பல்லவ விநாயகர், துவார கணபதி, நர்த்தண விநாயகர், கமல விநாயகர் ஆகியோரே அந்த 4 விநாயகர்கள் ஆவார்கள்.

    இவர்களில் நுழைவு வாயிலில் துவார கணபதி இருக்கிறார்.

    கருவறை கோஷ்டத்தில் நர்த்தண விநாயகர் உள்ளார்.

    கமல விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

    பல்லவ விநாயகர், ஆலயத்தின் உள்ளே சூரியனுக்கு நேரே அமர்ந்துள்ளார்.

    பொதுவாக விநாயகர் சிலைகள் தலையில் கிரீடத்துடன் காணப்படும்.

    ஆனால் பல்லவ விநாயகர் கிரீடம் இல்லாமல் இருக்கிறார்.

    தனது தந்தையான சிவபெருமானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் இவ்வாறு இருப்பதாக கூறப்படுகிறது.

    பல்லவ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

    எனவே இவரை பல்லவ விநாயகர் என்றே அழைக்கிறார்கள்.

    இவரை வழிபட்டால் பொருட்கள் சேர்க்க வேண்டும் என்ற ஆசை குறையும்.

    சிலர் எப்போதும் பதவி பதவி என்று ஆசையோடு அலைவார்கள்.

    இவரை வழிபட்டால் அந்த பதவி ஆசையும் நிவர்த்தி ஆகும்.

    பொருள், பதவி ஆகியவற்றின் மீதுள்ள மோகத்தை குறைப்பதால் இவர் முக்திக்கு வழிகாட்டும் முதல் கடவுளாகவும் வணங்கப்படுகிறார்.

    • சைவ திருமுறை புத்தகங்கள் மொத்தம் 12 பாகங்களாக இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும்.
    • இவர்கள் 27 பேரும் மொத்தம் 18 ஆயிரத்து 360 பாடல்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சைவ திருமுறை புத்தகங்கள் மொத்தம் 12 பாகங்களாக இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

    சைவ திருமுறைகளை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்கோவையார், மாணிக்க வாசகர்,

    திருமூலர், திருமாளிகை தேவர், சேந்தனார், கருவூர் தேவர், பூந்துருத்தி நம்பிகா நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள்,

    திருவாலியமுதனார், புருடோத்த நம்பி, சேதியராயர், திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், ஐயடிகள் காடவர்கோன்,

    சேரமான் பெருமாள், நக்கீரதேவ நாயனார், கல்லாடதேவ நாயனார், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார்,

    இளம்பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்துப்பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய 27 பேர் பாடியுள்ளனர்.

    இவர்கள் 27 பேரும் மொத்தம் 18 ஆயிரத்து 360 பாடல்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    12 திருமுறைகளாக வெளியாகி உள்ள இந்த பாடல்களை ஞாயிறு திருத்தலத்தில் போற்றி பாதுகாத்து வருகிறார்கள்.

    அங்குள்ள சொர்ணாம்பிகை சன்னதியில் இதற்காக தனி கண்ணாடி கூண்டுக்குள் சைவ திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன.

    • ஒவ்வொரு சிவ தலத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார்.
    • சூரியனின் பிரதான சீடராக கருதப்படுபவர் யக்ஞவல்கியர்.

    ஒவ்வொரு சிவ தலத்திலும் ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார்.

    அவர்களது அருள் ஆற்றல் ஆலயத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.

    அந்த வகையில் ஞாயிறு திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்த புருஷராக கண்வ மகரிஷி திகழ்கிறார்.

    இவர் சகுந்தலம் காவியத்தில் வரும் சகுந்தலையின் தந்தை ஆவார்.

    சூரியனின் பிரதான சீடராக கருதப்படுபவர் யக்ஞவல்கியர்.

    இவரது முதன்மை சீடராக திகழ்ந்தவர்தான் கண்வமகரிஷி ஆவார்.

    சூரியனின் தலம் என்பதால் இந்த மகரிஷி இந்த தலத்தில் அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    இவருக்கு ஞாயிறு திருத்தலத்தின் கருவறைக்குள் ஜீவசமாதி இருப்பதாக ஒருசாரார் கூறுகிறார்கள்.

    ஆனால் மற்றொரு சாரார் கண்வமகரிஷி ஜீவசமாதி சூரிய தீர்த்தம் குளத்துக்குள் இருப்பதாக சொல்கிறார்கள்.

    இதில் மாறுபட்ட தகவல்கள் இருந்தாலும் கண்வமகரிஷி இந்த தலத்தில்தான் ஒடுங்கி இருக்கிறார் என்பது உறுதியாகிறது.

    கண்வமகரிஷியை வழிபட்டால் பல் தொடர்பான நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

    இவரை பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

    • ஞாயிறு திருத்தலத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.
    • இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிடைப்பது என்பது ஐதீகம் ஆகும்.

    ஞாயிறு திருத்தலத்தில் ஞாயிற்றுகிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

    அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரை வரும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும்

    மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் வழிபாடு செய்வது

    மிக சிறப்பான நேரமாக கருதப்படுகிறது.

    இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் ஜென்ம பாவம் நீங்கி மோட்சம் கிடைப்பது என்பது ஐதீகம் ஆகும்.

    சிலருக்கு பக்கத்து வீட்டுக்காரர்களால் அடிக்கடி தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

    சிலருக்கு தொழில் ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக கண் தெரியாத எதிரிகள் இருப்பார்கள்.

    அத்தகைய எதிரிகளால் ஏற்படும் துன்பத்தை விரட்டும் சக்தி இந்த ஆலயத்துக்கு உண்டு.

    ஞாயிற்றுக்கிழமை இந்த ஆலயத்தின் வளாகத்தில் ஏதாவது பகுதியில் அமர்ந்து ஆதித்த இருதயம் நூலை பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

    • ஞாயிறு திருத்தலத்தில் திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
    • சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

    ஞாயிறு திருத்தலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்தாலும்

    திருமண தடை நீங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

    சமீப காலமாக திருமணம் கை கூடாமல் தவிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

    அத்தகைய நிலையில் இருப்பவர்கள் 11 வாரங்கள் ஞாயிறு தலத்துக்கு சென்று

    உரிய வழிபாடு செய்தால் திருமணம் யோகம் கைகூடும்.

    சிவபெருமானுக்கும், சூரிய பகவானுக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் அர்ச்சனை செய்து வழிபட

    நினைத்த இடத்தில் இருந்து மணமகன் அல்லது மணமகள் கிடைப்பார்.

    • 11 வாரங்கள் இந்த தலத்துக்கு சென்று தயிர் சாதம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
    • அப்படி செய்தால் தொழில் பிரச்சினைகள் மற்றும் சொத்து பிரச்சினைகளும் தீரும்.

    தொழில் செய்பவர்களில் சிலருக்கு எப்போதும் இடையூறுகள் இருந்து கொண்டே இருக்கலாம்.

    பண ரீதியாக, வியாபார ரீதியாக, தொழிலாளர்கள் ரீதியாக என்று பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்.

    இது வியாபாரிகளின் நிம்மதியை அடியோடு கெடுப்பதாக இருக்கும்.

    வியாபாரம் சம்பந்தமான பிரச்சினை இல்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த தலத்தை நாடலாம்.

    11 வாரங்கள் இந்த தலத்துக்கு சென்று தயிர் சாதம் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    அப்படி செய்தால் தொழில் பிரச்சினைகள் தீரும். சொத்து பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு ஏற்படும்.

    • இதனால் ஞாயிறு தலம் கண் நோய்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.
    • இந்த வழிபாட்டின் போது கோதுமை பிரசாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது.

    ஞாயிறு தலத்துக்கு வந்த சோழ மன்னன், சிவபெருமான் உறைந்திருந்த தாமரை மலரை வாளால் வெட்டியதால் தனது கண் பார்வை இழந்தான்.

    அந்த ஆலயத்தை கட்டி பிறகுதான் அவனுக்கு பார்வை கிடைத்தது.

    இதனால் ஞாயிறு தலம் கண் நோய்களுக்கு மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது.

    கண்களில் பிரச்சினை இருப்பவர்கள் இந்த தலத்துக்கு வந்து கோதுமை, சிவப்பு துணி, தாமரை பூ,

    தாமிர உலோகம் ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை இந்த வழிபாடு செய்வது நல்லது.

    அப்படி முடியாதவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இந்த வழிபாட்டை செய்யலாம்.

    இந்த வழிபாட்டின் போது கோதுமை பிரசாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது.

    கோதுமை கேசரி, கோதுமை பொங்கல் ஆகியவற்றை படைக்கலாம்.

    இந்த கேசரி, பொங்கலை பக்தர்கள் வீட்டில் இருந்தே தயார் செய்து கொண்டுவந்து சூரியனுக்கு படைக்கலாம்.

    வழிபாடு முடிந்த பிறகு இந்த பிரசாதங்களை ஆலயத்தில் உள்ள ஏழை எளியவர்களுக்கு விநியோகம் செய்யலாம்.

    இப்படி செய்தால் நிச்சயம் கண் பிரச்சினைகள் தீரும்.

    ×