என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொடுகு"
- சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம்.
ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கேரட் ஹேர் மாஸ்கை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள்.
உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால்தான், தலைமுடி ஆரோக்கியத்தை இழக்கும். எனவே, அதற்கேற்றவாரு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல், நாம் வீட்டில் இருந்தப்படியே கூந்தலை கவனிப்பது மிகவும் அவசியம். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நல்ல முடி வளர்ச்சியைத் தூண்டவும் கேரட் உதவும். ஒருவேளை உங்களுக்கு கேரட் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். இது அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
கேரட் மாஸ்க் செய்ய தேவையானப் பொருட்கள்:
கேரட் – 1 அல்லது 2
வாழைப்பழம் – 1
தயிர் – மூன்று டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை:
முதலில் கேரட்டுகளின் தோல்களை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தை உரித்து, அதனையும் ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியாக அந்தக் கலவையில், தயிர் மற்றும் பாதாம் சேர்த்து தலை முடியில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் வாரம் ஒருமுறை தொடர்ந்து இதனை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த கேரட் மாஸ்க், உங்கள் முடி வறட்சி ஆகாமல் தடுக்கும். அதேபோல் உச்சந்தலையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சியை போக்கி, பொடுகை நீக்கும். மேலும் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதோடு, முடி உதிராமாலும் பாதுகாக்கும்.
- மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
- ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் பாதிக்கப்படும்.
பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் பாராமரிப்பில் கூடுதல் சுவனம் செலுத்த வேண்டும். கோடை காலத்தில் கடுமையான தணித்து குளிர்ச்சியை தந்தாலும் உடல் நலத்தை பொறுத்தவரையில் மழைக்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. ஈரப்பதம் நிறைந்த வானிலை காரணமாக சருமமும், கூந்தலும் அதிகமாக பாதிக்கப்படும். தலைமுடி எளிதில் வலுவிழக்கும். தலையில் அரிப்பு, பொடுகு, முடி உதிர்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். இவற்றை தவிர்ப்பதற்கான டிப்ஸ் இதோ...
மழைக்காலமாக இருந்தாலும், சில சமயங்களில் தலை பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த ஈரத்தால் தலையில் அரிப்பு. பொடுகு, பிசுபிசுப்பு என பல பிரச்சினைகள் ஏற்படும். இதை தவிர்க்க தினமும் தலைமுடியை சுத்தமான வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதற்கு ரசாயனம் கலக்காத மென்மையான ஷாம்புவை மட்டும் பயன் படுத்தலாம்.
தலைக்கு குளிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தலைமுடியை பிரி-கண்டிஷனிங் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய் அல்லது எசன்ஷியல் எண்ணெய்யை உச்சந்தலை முதல் முடியின் வேர்க்கால்கள் வரை முடியின் நுனி என அனைத்து பகுதியிலும் விரல் நுனியால் தடவி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இது தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
மழைக்காலத்தில் தலைமுடியில் இருக்கும் ஈரம் எளிதில் உலராது. இதனால் சளி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே தலைமுடி தானாக உலரும் வரை காத்திருக்காமல், தலைக்கு குளித்த பின்பு ஹேர் டிரையரை பயன்படுத்தி உலர்த்தலாம். இதில் குறைந்த அளவு வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தி முடியை உலர்த்துவது நல்லது.
இவ்வாறு செய்யும்போது பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சினைகளையும் தடுக்க முடியும். மழைக்காலத்தில், தலைமுடியை இறுக்கி கட்டாமல், காற்றோட்டமான வகையில் தளர்வாக பின்னிக்கொள்வது நல்லது. இது உச்சந்தலையில் வியர்வையால் ஏற்படும் கிருமித்தொற்றை தடுக்க உதவும்.
தலைமுடியை சீரான இடைவெளியில் டிரிம் செய்ய வேண்டும். இது முடியின் நுனியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், தலைமுடிக்கு சீரான வடிவத்தையும் தரும். இதனால் கூந்தலை பராமரிப்பதும் எளிதாகும்.
ஈரமான கூந்தலுடன் வெளியே செல்லும்போது, தூசி, அழுக்கு ஆகியவை எளிதாக கூந்தலில் படியக்கூடும். இது தலைமுடியின் தன்மையை பாதிப்பதோடு முடி உதிர்வு பிரச்சினையையும் உண்டாக்கும். எனவே கூந்தலை நன்றாக உலர்த்திய பின்பு வெளியில் செல்வது நல்லது.
தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நாம் பயன்படுத்தும் ஷாம்புவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலக்காத கடினத்தன்மை இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது நல்லது. மழையில் நனைந்தால் வீட்டிற்கு வந்தவுடன் மிருதுவான ஷாம்பு கொண்டு உடனடியாக தலைமுடியை கழுவ வேண்டும்.
முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்கு உண்டு. வாரத்திற்கு ஒருமுறை, கற்றாழை ஜெல்லை தலையில் மாஸ்க் போல பூசவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும். இதனால் பொடுகுத்தொல்லை, முடி உதிர்வும் குறையும், முடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
- வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.
- வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேம்பு ஃபேஸ்பேக் பயன்படுத்துவது இயற்கையான சிறந்த வழியாகும். வேப்பம்பூ ஃபேஸ்பேக்கை வழக்கமாகப் பயன்படுத்துவது சரும வீக்கத்தைக் குறைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.
வேப்பம்பூ அல்லது வேப்பம் இலைகளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாகவும் தயாரித்து முகப்பரு உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை அடிக்கடி போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை நீங்கள் பார்ப்பீர்கள்.
வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.
- பொடுகுதானே என்று அலட்சியமாக இருக்க முடியாது.
- ஒருசில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும்.
பொடுகு... இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக, இளம் வயதினருக்கு பல நேரங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது இந்தப் பொடுகுத் தொல்லை.
பொடுகுதானே என்று அலட்சியமாகவும் இருக்க முடியாது. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படலாம். அதோடு ஒருசில தோல் வியாதிகள் உருவாகவும் இது வழிவகுக்கும். முகத்தில் பருக்கள் உருவாகலாம்; கழுத்திலும், காதின் பின்புறத்திலும் தோல் தொடர்பான நோய்கள் ஏற்படலாம்.
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.
`இயற்கையாக மரம், செடி, கொடிகளிலிருந்து கிடைக்கக் கூடியவை, நம் வீட்டுச் சமையல் அறையில் இருக்கும் பொருள்களும்கூட பொடுகுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு தரக்கூடியவை' என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். அப்படி பொடுகை விரட்ட உதவும் எளிதான 10 வழிகள் இங்கே....
* இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவும்.
* ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும்.
* வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
* தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.
* ஈரமான தலைமுடியில் சிறிது பேக்கிங் சோடாவைத் தேய்க்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தலையை அலசவும். பேக்கிங் சோடா பொடுகுக்கு மிகச் சிறந்த நிவாரணி. இது, தலையில் உள்ள இறந்த செல்கள் நீங்கவும், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவும். பேக்கிங் சோடாவை அதிக நேரம் தலையில் வைத்து இருந்தால் தலைமுடி வறண்டு விடும்... கவனம்!
* எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.
* ஆப்பிள் சிடர் வினிகர் பெரிய கடைகளில் கிடைக்கும். சிறிது ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்து, அதனுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும். இதை தலையில் தேய்த்து ஊறவைக்க வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து தலையை அலசிவிட வேண்டும். இது பொடுகுக்கு சிறந்த மருந்து; முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும்.
* கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்பு தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தலைமுடிக்குத் தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.
* டீ ட்ரீ எண்ணெய் பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எதிர்த்து போராடக்கூடியது. கூந்தலுக்கு ஊட்டச்சத்தை அளித்து, முடி உதிர்வையும் தவிர்க்க உதவும். டீ ட்ரீ எண்ணெயைச் சில துளிகள் எடுத்து, தலை முழுக்கத் தடவி, ஐந்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம்.
* கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை ஆகியோர் தவிர்க்கவும்.
குறிப்பு: பராமரிப்பின்மை, வியர்வை, அழுக்கு போன்ற வெளிப்புற காரணங்களால் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு இந்த வீட்டு வைத்தியம் கைக்கொடுக்கும். அதுவே, ஹார்மோன் பிரச்னை உள்ளிட்ட உடல்நிலைக் காரணங்களால் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு பெற மருத்துவ ஆலோசனை அவசியம்.
- பொடுகு தொல்லை அனைத்து வயதினரையும் பாடாய் படுத்துகிறது.
- பொடுகு பிரச்சனைக்கு சித்த மருத்துவம் நிரந்தர தீர்வை தரும்.
இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் கவலை கொள்ளும் விஷயம் பொடுகு தொல்லை. இயற்கை முறையில் பொடுகு தொல்லையை போக்க பல்வேறு சித்த மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* வாதம் அதிகமாக இருந்தால் பொடுகு உண்டாகும். இதனால், முடியின் வேர்ப்பகுதியில் வெடிப்பு ஏற்படும். 500 மி.லி தேங்காய் எண்ணெயில் 100 மி.லி அறுகம்புல் சாறு, அதிமதுரம் கலந்து செய்யப்படுவது அறுகன் தைலம். இதைத் தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்துவந்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். இது, அனைத்துச் சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
* வேப்பிலையில் வைரஸ், பாக்டீரியா ஒவ்வாமைகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மை உள்ளது. வேப்பிலையை ஒரு கப் நீரில் போட்டு, நீர் பாதியாக வற்றும் வரை நன்கு கொதிக்கவிட்டு, அந்த நீரைக்கொண்டு வாரம் ஒரு முறை தலை முடியை அலச, பொடுகு, அழுக்கு அனைத்தும் வெளியேறி, தலை சுத்தமாக இருக்கும்.
* கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை, கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகைச் சம அளவு எடுத்துக்கொண்டு, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அடுத்த நாள் அரைக்க வேண்டும். இதற்கு, 'பஞ்சகல்பம்' என்று பெயர். இதை மிதமான சூடுகொண்ட பசும்பாலில் கலந்து, தலையில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பின்னர், சிகைக்காய் போட்டுத் தலைக்குக் குளிக்க வேண்டும். இதனால், பொடுக்குத் தொல்லை நீங்கும். உடல் வெப்பம் தணியும்.
* கசகசா, தேங்காய், பாதாம் பருப்பு, குறைந்த அளவில் சீரகம், மிளகு ஆகியவற்றை இரவு, தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அரைத்து, பாலில் கலந்து தலைக்குத் தடவினால் முடி வறட்சி நீங்கும். பொடுகுத் தொல்லை நீங்கும்.
* ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைக்கவும். இதனுடன், சிறிது ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்துக்கொள்ளலாம். அரைத்த விழுதைத் தலைமுடியில் நன்கு பரப்பி, இரண்டு மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். பின்னர், வெதுவெதுப்பான நீரைக்கொண்டு, தலையை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்துவந்தால், முடி இயற்கையாகவே, வலிமை அடைவதுடன், அடர்கறுப்பு நிறத்திலும் மிருதுவாகவும் இருக்கும்.
* கறிவேப்பிலை, கருஞ்சீரகம், வெந்தயத்தை சேர்த்து நன்கு அரைத்து விழுதாகிக் கொள்ள வேண்டும். வேப்ப இலைகளையும் சேர்த்துக்கொள்ளவும். இந்த விழுதை வழக்கமாக உபயோகிக்கும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து உபயோகிக்கலாம். இதை, தலையில் தேய்த்து எட்டு மணி நேரம் கழித்து, ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டுக் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். இதனால் முடி உதிர்வைத் தடுப்பதுடன், தலைமுடியைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம். பொடுகுப் பிரச்னையும் தீரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்