search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாலட்சுமி"

    • குளிர்சாதன பெட்டி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் வயாலிகாவல் பகுதியில் மகாலட்சுமி (24) என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் ததேதியில் இருந்து அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் நெலமங்களா பகுதியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் மகாலட்சுமி வசித்த வீட்டிற்கு வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது மகாலட்சுமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    பிரேதப் பரிசோதனையில் கொடூரமான ஆயுதத்தால் மகாலட்சுமி கொலை செய்யப்பட்டு பின்னர் அவரது உடல் பாகங்களை 50 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குறிப்பிட்ட சிலர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்,

    மேலும் மகாலட்சுமியை தினமும் அவருடன் மாலில் ஆண்கள் அழகு நிலையத்தில் வேலைப்பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒரு வாலிபர் அழைத்து சென்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த வாலிபர் யார்? என்று விசாரணை தொடங்கினர். அப்போது அவரது செல்போன் எண் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    மேலும் போலீசார் கொலை செய்யப்பட்ட மகாலட்சுமியின் செல்போன் எண்ணை கைப்பற்றினர். மேலும் 4 சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    அப்போது அடிக்கடி மகாலட்சுமியின் செல்போன் எண்ணில் இருந்து தலைமறைவான மேற்கு வங்க வாலிபரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. எனவே காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது குறித்து கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா கூறும் போது, பெண் கொலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    இதேபோல் போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது:-

    கொலை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார். மகாலட்சுமியை கொலை செய்த பிறகு இறைச்சி வெட்டுவது போல் வெட்டி உள்ளார். பின்னர் அவரது உடல் உறுப்புகளை ஒரு சூட்கேசில் ஏற்றிச் செல்ல கொலையாளி முயற்சி செய்து உள்ளார்.

    ஆனால் இது முடியாததால் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். மகாலட்சுமி உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன பெட்டி சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலையாளியை தேடி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று கூறினார்.

    • கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
    • நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.

    கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.

    விளக்கேற்றும் முகத்தின் பலன்

    குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்

    குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை

    குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்-புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி

    குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால்- பசு, பால், பூமி, சேர்க்கை

    குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

    • குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.
    • வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டாகும்.

    குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.

    மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.

    வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டாகும். 

    தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.

    தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்

    பசு நெய்: செல்வம் பெருகும்

    நல்லெண்ணெய்: உடல்,ஆரோக்கியம்

    விளக்கெண்ணெய்: புகழ்,தாம்பத்திய சுகம்

    இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்

    புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.

    மேற்கூறிய ஐந்து வகையான எண்ணெய்கள் கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

    • ஏகாதசியில் உபவாசம் இருந்து இரவு விழித்து வைகுண்டம் பற்றிய விஷ்ணுவின் புராணங்களைப் படிக்க வேண்டும்.
    • தசமியிலும், துவாதசியிலும் ஒரே வேளைதான் உண்ண வேண்டும்.

    ஓர் ஆண்டில் மொத்தம் இருபத்தைந்து ஏகாதசிகள் வரும்.

    மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது. இதுவே வைகுண்ட ஏகாதசி எனப்பெறும் சிறப்புடையதாகும்.

    ஏகாதசியில் உபவாசம் இருந்து இரவு விழித்து வைகுண்டம் பற்றிய விஷ்ணுவின் புராணங்களைப் படிக்க வேண்டும்.

    தசமியிலும், துவாதசியிலும் ஒரே வேளைதான் உண்ண வேண்டும்.

    ஏகாதசியன்று காலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று தீர்த்தம், துளசி ஆகியவற்றுடன் அர்ச்சனை செய்த தேங்காய், பழம், பிரசாதங்களை வாங்கி வந்து அவற்றையே உட்கொள்ள வேண்டும்.

    அன்று திவ்ய தேசங்களில் திறக்கப்படும் வைகுண்ட வாசலில் சென்று, கருட சேவையை தரிசனம் செய்து புண்ணியம் அடையலாம்.

    அடுத்த நாள் துவாதசியில் காலையில் பச்சரிசி அன்னமும், அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் சமைத்து உண்ணலாம்.

    மதியம் பலகாரம் சாப்பிடுவார்கள்.

    மன்னர்களான அம்பரீஷன், ருக்மாங்கதன் ஆகியோர் ஏகாதசி விரதம் அனுஷ்டித்துப் பலன் அடைந்தவர்கள்.

    ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம், புகழ், செல்வம், ஆரோக்கியம் முதலியன உண்டாகும்.

    வைகுண்டம் கிட்டும்.

    • சிவாலயங்களிலும், முருகனின் குன்றுகளிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படும்.
    • பங்குனி உத்திரத்தில்தான் பார்வதி பரமேஸ்வரனின் திருக்கல்யாணம் நடந்தது.

    சிவாலயங்களிலும், முருகனின் குன்றுகளிலும் பங்குனி உத்திரம் கொண்டாடப்படும்.

    பங்குனி உத்திரத்தில்தான் பார்வதி பரமேஸ்வரனின் திருக்கல்யாணம் நடந்தது.

    பங்குனி உத்திரத்தன்று காவடிகளும், பால்குடங்களும் எடுத்து முருகனை வழிபடுவது மரபாகும்.

    அன்று உபவாசத்துடன் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு, அவனுக்குரிய ஸ்லோகங்களை பாடிப்பரவி இரவில் பால், பழம் சாப்பிடலாம்.

    பழ ஆகாரங்கள் சாப்பிடலாம்.

    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது.

    அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். பழத்தை உணவாகக் கொள்வதே பழ ஆகாரம் அதாவது பலகாரம் ஆகும்.

    ஆனால் சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் "பலகாரம்' என்று தவறாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது உண்மையான விரதம் ஆகாது.

    ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

    • புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும்.
    • இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும்.

    புரட்டாசி பௌர்ணமியை தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மாஹாளயபக்ஷம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து வரும் அமாவாசை மாஹாளய அமாவாசை எனப்படும்.

    இந்த காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

    தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ, அதை தானம் அளிக்கலாம். தானம் பெறுபவர்களுக்கு தாம்பூலமும் தட்சிணையும் கண்டிப்பாக தருதல் வேண்டும்.

    தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

    அதேபோல், வாய்ப்பு இருப்பவர்கள், கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே ப்ரசித்தி பெற்ற தலங்களில், அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

    • இந்த விரத நாளில், அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும்.
    • இதனால் குடும்பம் செழிக்கும்.

    மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது.

    ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.

    ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப் படும் விரதம் இது. 'எங்களை நீ பீடிக்காதே!' என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.

    தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.

    கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. ஸித்திகளைத் தரும்.

    அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது.

    அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

    ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.

    பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும்.

    • இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும்.
    • சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    ஸித்தி விநாயக விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதம் இது.

    பிருகஸ்பதியால் உபதேசிக்கப்பட்டது. இந்நாளில் உடல்-உள்ள சுத்தியோடு விரதம் இருந்து, பிள்ளையாரை வழிபட, காரிய ஸித்தி உண்டாகும்.

    சஷ்டி - லலிதா விரதம்:

    புரட்டாசி மாத வளர் பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதம் சர்வமங்கலங்களையும் அருளும்.

    அமுக்தாபரண விரதம்:

    புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக் கையில் கட்டிக் கொள்வார்கள்.

    இந்த விரதம் சந்ததி செழிக்க அருள் செய்யும். பிள்ளை - பேரன் எனப் பரம்பரை தழைக்கும்.

    சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    • 21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.
    • பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    இதுகுறித்து கௌதமுனிவர் உமையவளுக்குக் கூறிய விவரம்: ''புரட்டாசி மாத வளர் பிறை தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாத தேய்பிறைச் சதுர்த்தசி அல்லது அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை நடத்த வேண்டும்.

    சிவபெருமானைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதத்தை பக்தியுடன் செய்தால், ரிஷப வாகனனான ஸ்வாமி காட்சி தருவார்.

    உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்!" என்றார்.

    வழிமுறை: பூஜை செய்ய வேண்டிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு, தலை வாழையிலையில் அட்சதையைக் கொட்டிப் பரப்பி, அதன் மேல் பூரண கும்பத்தை வைத்து அலங்கரிக்க வேண்டும். கும்பத்தில் கேதாரீஸ் வரரை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    21 இழைகள் - 31 முடிச்சுகள் கொண்ட நோன்புக் கயிறை, அந்தக் கும்பத்தின் மேல் சார்த்தி 21 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.

    பூ, பழம் முதலான பூஜைப் பொருட்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வேத வல்லுநர்கள் 21 பேரை வரவழைத்து, அவர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபட வேண்டும். மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் விரதம் இது.

    • அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.
    • அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும்.

    பிருங்கி என்றொரு முனிவர், தீவிரமான சிவபக்தர்.

    ஒருமுறை, திருக்கயிலையில் அம்மையும் அப்பனும் அமர்ந்திருக்க, பிருங்கி முனிவரோ வண்டாக வடிவெடுத்து, ஸ்வாமியை மட்டும் வலம் வந்து வணங்கிச் சென்றார்.

    இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் தேக ஆற்றலை நீங்கச் செய்தாள்.

    அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து திருவருள் புரிந்தார்.

    இதையடுத்து, தான் வேறு சிவன் வேறு அல்ல என்பதை உலகத்தவருக்கு உணர்த்த விரும்பிய அம்பிகை, அதன் பொருட்டு பெரும் தவம் செய்ய முடிவெடுத்து பூமிக்கு வந்தாள்.

    வனம் ஒன்றில் கௌதம மஹரிஷியைச் சந்தித்தாள். அவரிடம் நடந்த யாவற்றையும், தனது விருப்பத்தையும் விவரித்து, விருப்பம் நிறைவேற வழிகேட்டாள்.

    அவளுக்கு கேதாரீஸ்வர விரத மகிமையை எடுத்துக் கூறிய கௌதமர், அந்த விரதத்தைக் கடைப்பிடித்து சிவனாரை வழிபடும்படி கூறினார்.

    அம்பிகையும் அதன்படியே விரதம் இருந்து, சிவனாரின் தேகத்தில் இடபாகத்தை பெற்றாள்.

    அவள் வழியில் நாமும் கேதாரீஸ்வர விரதம் கடைப்பிடித்து உமா மகேஸ்வரரை வழிபட தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.

    குடும்பத்தில் சுபிட்சம் மேலோங்கும்.

    • பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும்.
    • இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    திருப்பதி பிரம்மோற்சவம் வைபவத்தில் மற்ற ஸேவைகளைத் தரிசிக்காவிட்டாலும், கருடசேவையை மட்டுமாவது அவசியம் தரிசிக்கவேண்டும். ஏன் தெரியுமா?

    செய்த பாவத்தின் காரணமாக நரகத்தில் உழலும் ஆத்மாக்கள், மோட்சப் பிராப்தி இருந்தும் ஊழ்வினை காரணமாக மோட்சத்தை எட்ட இயலாத ஆத்மாக்கள், கருட ஸேவையைத் தரிசிக்க திரள்வார்கள் என்கின்றன புராணங்கள்.

    அந்த ஒருநாள் மட்டும், அவர்கள் தங்களின் துயரத் தளைகளில் இருந்து விடுபடுவதற்கான அனுமதியை பெருமாளிடம் கருட பகவானே கேட்டுப் பெற்றாராம்.

    அதேபோல், அன்று பெருமாளைத் தரிசிக்க வரும் பூலோக மாந்தர்களுக்கும் திருவருள் புரியும்படி வரம் கேட்டு வாங்கினாராம் கருடன்.

    அப்படி, கருடசேவையைத் தரிசிக்க வரும் பித்ருக்கள், தங்களின் சந்ததியினர் வந்திருக்கிறார்களா என்று தேடுவர்.

    அவர்களை தியானிப்பதுடன், அவர்களின் விமோசனத்துக்காகவும் ஸ்வாமியிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்' என்பது ஐதீகம்.

    இன்றைக்கும், கருடஸேவையைத் தரிசித்த கையோடு சிறிது நேரம் வானத்தை உற்று நோக்கி தியானிக்கும் வழக்கம், பக்தர்கள் சிலரிடம் உண்டு.

    இதனால் ஸ்வாமியின் திருவருளோடு, தங்கள் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

    பித்ரு தோஷம் உள்ளவர்கள் கருட சேவையைத் தரிசித்து வந்தால், அந்த தோஷம் நீங்கும்; சந்ததி செழிக்கும்.

    தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். ஏழுமலையானுக்கு உகந்த புரட்டாசியில், திருப்பதிக்குச் சென்று பிரம்மோஸ்வத்தில் கலந்துகொள்வதுடன், கருடசேவையையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்.

    • கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோவில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும்.
    • அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது.

    முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மஹாளயபட்சம் வருவதும் புரட்டாசி மாதத்தில்தான்.

    ஆகவேதான், புரட்டாசி வழிபாடுகள் இரட்டிப்பு பலன் தரும் எனச் சொல்லிவைத்தார்கள் பெரியோர்கள்.

    மகத்துவமான அந்த விரத வழிபாடுகளை நாமும் விரிவாக அறிவோமா?

    கருடசேவையும் முன்னோர் ஆசியும் புரட்டாசியில் எண்ணற்ற கோவில்களில் பிரம்மோற்ஸவம் நிகழும்.

    அதிலும் திருப்பதி பிரம்மோற்ஸவம் மிகப் பிரசித்திப் பெற்றது.

    வாழ்வில் ஒருமுறையேனும் அந்த வைபவத்தைத் தரிசிப்பதை பெரும் கொடுப்பினையாகச் சொல்வார்கள் நம் பெரியவர்கள். 

    ×