search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோகேஷ் கனகராஜ்"

    • லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் மற்றொரு திரைப்படம் 'மிஸ்டர் பாரத்'
    • நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியானது.

    நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். கட்சி சேர பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பால சரவணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாரத்தின் மீது சம்யுக்தா படுத்துள்ளார். பாரத் கையில் குழந்தைகள் விளையாடும் துப்பாக்கி. அவரை சுற்றி குழந்தைகள் விளையாடும் பொருட்கள் என நிறைந்துள்ளது. இதனால் இப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிரஞ்சன் இயக்கம் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
    • கட்சி சேரா பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாக நடிக்கிறார்.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் வரும் லோகேஷ் கனகராஜ், அவரது படங்களில் வழக்கமாக வரும் துப்பாக்கி, பவுடர் என எதுவும் இதில் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

    நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் யூட்யூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார். கட்சி சேரா பாடல் மூலம் புகழ்பெற்ற சம்யுக்தா விஸ்வநாதன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் பால சரவணன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    1986 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சத்யராஜ் நடிப்பில் 'மிஸ்டர் பாரத்' என்ற படம் ஏற்கனவே வெளியானது. இப்படத்தின் தலைப்பை ரஜினிகாந்தின் உதவியின் மூல ஏவிஎம் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து லோகேஷ் பெற்றுள்ளார்.

    • கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி சில நாட்களுக்கு ஜெய்பூர் சென்றார்.
    • இன்று ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    இந்நிலையில் கூலி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி சில நாட்களுக்கு ஜெய்பூர் சென்றார். இன்று ரஜினிகாந்த் 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ரஜினிகாந்த் நடனம் ஆடும் சிகிடு வைப் என்ற பாடல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இதனிடையே கூலி படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி."
    • அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி சில நாட்களுக்கு ஜெய்பூர் சென்றார்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி சில நாட்களுக்கு ஜெய்பூர் சென்றார். இன்று 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் ரஜினிகாந்த். இதை முன்னிட்டு தற்பொழுது படக்குழு புதியஅப்டேட்டை வெளியிட்டுள்ளனர்.

    அதில் சிகிடு வைப் என்ற பாடலுக்கு ரஜினிகாந்த நடினம் ஆடியுள்ளார். இந்த இசையானது டி.ஆர் ராஜேந்திரன் குரலில் அமைந்து இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த காட்சி தற்பொழுது வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இந்த படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா நடிக்கிறார்.
    • ரஜினிகாந்த் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்து இருந்தனர்.

    மேலும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா நடிக்கிறார். ரஜினிகாந்த் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் அப்டேட்டுகளை அவ்வபோது வெளியிட்டு வரும் படக்குழு, ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று மாலை 6 மணிக்கு புதிய அப்டேட்டை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாரதிராஜா, நாசர், தம்பிராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் கவனத்தை ஈரத்தது

    இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளன.

     

    பரபர காட்சிகளை கொண்ட இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரின் முடிவில் இடம்பெற்ற தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் கவனத்தை ஈரத்தது. படத்தின் இசைக்கோர்வை வீடியோவும் வெளியானது.

    படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றதை படக்குழு அறிவித்தது. ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா? அதற்கான சாத்தியம் இருக்கின்றதா? என்பதை மையமிட்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'பொம்மக்கா' வீடியோ பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
    • ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் "கூலி." சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாக்ராஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.

    இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படம் அவரது பிறந்தநாளான வருகிற 2025-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இதனிடையே ரஜினியின் 'கூலி' படமும் அன்றே வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'குட் பேட் அக்லி' படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • இந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார்.
    • சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

     

    தமிழ் திரையுலகில் பாடல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருந்தே கொண்டே தான் வருகிறது. பாடல்களால் வெற்றிப் பெற்ற படங்களும் உண்டு, ஹிட் பாடல்கள் இல்லாதததால் வரவேற்பு பெறாத படங்களும் உண்டு எனலாம். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் எல்லைகளை தாண்டி செல்லும் நிலையில், திரை இசையில் பல்வேறு பிரிவுகள் உண்டாகி, அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.

    அந்த வரிசையில், சமீப காலங்களில் அதிகம் வைரல் ஆகும் புது வகை பாடல்களாக 'இண்டிபெண்டண்ட் பாடல்கள்' வெளியாகி வருகிறது. இதனால் சினிமா அல்லாது தனிமனிதனாக இசை ஆர்வம் கொண்டுள்ள பலருடைய திறமை இங்கு மக்களின் பார்வைக்கு வருகிறது. சினிமா பாடல்கள் அல்லாது இதுப்போன்ற இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.

    அந்த வகையில் சாய் அபயங்கர் என்ற இளைஞன் இந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் உள்ள இன்ஃபூலுயன்சர்ஸ் இப்பாடலிற்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.

    அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

    யார் இந்த சாய் அபயங்கர்? சாய் அபயங்கர் பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி அவர்களின் மகன் ஆவார். இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    இந்நிலையில் சாய் அபயங்கர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல இளம் இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இந்த வாய்ப்பு சாய் அபயங்கருக்கு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா அவரது 16- வது வயதில் தனது முதல் படமான 'அரவிந்தன்'-க்கு இசையமைத்தார்.

     

    அனிருத் அவரது 22 வது வயதில் முதல் படமான 3 திரைப்படத்திற்கு இசையமைத்தார். சாம் சி. எஸ் அவரது 25 வது வயதில் முதல் படமான 'அம்புலி' திரைப்படத்திற்கு இசையமைத்தார். நிவாஸ் கே. பிரசன்னாவும் அவரது 25 வயதில் முதல் படமான 'தெகிடி' திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

     

    தற்பொழுது சாய் அபயங்கர் அவரது 21 வயதில் தன்னுடைய முதல் படமான பென்ஸ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இளம் இசையமைப்பாளர்கள் பலர் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சாய் அபயங்கர் மிகப் பெரிய படத்திற்கு இசையமைக்க இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

    திரைத்துறையில் வாய்ப்பு கிடைப்பதும், அதனை தக்கவைப்பதை பற்றி அத்துறையை சேர்ந்த பலரும் கூறி கேட்டிருப்போம். அந்த வகையில், தன் கையில் மிகப் பெரிய வாய்ப்பை பெற்று இருக்கும் அபயங்கர் அதனை தன் திரைத்துறை பயணத்திற்கான வெற்றிப் படியாக மாற்றிக் கொள்வார் என எதிர்ப்பார்க்கலாம். அவரது வெற்றி பயணத்திற்கு நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.'
    • இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம் `ப்ளடி பெக்கர்.' இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் கவின் பிச்சைக்காரனாக ஒரு மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

    அதில் அவர் " எனக்கு பிளடி பெக்கர் திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. அதில் வரும் நகைச்சுவை காட்சிகள் எனக்கு மிகவும் வொர்க் அவுட் ஆனது. இப்படம் ஒரு புதிய முயற்சி. வெளிநாட்டு திரைப்படங்களில் இம்மாதிரியான திரைப்படங்கள் பார்த்ததுண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை. தயாரிப்பாளர் நெல்சனுக்கு வாழ்த்துக்கள். கவின் அருமையாக நடித்து இருந்தார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், ரெடிங் கிங்ஸ்லி மற்றும் திரைப்பட குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
    • இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

    இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

    இத்திரைப்படம் உலகமுழுவதும் முதல்நாள் மட்டும் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், அமரன் படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து மகிழ்ந்துள்ளார். கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த ரஜினிகாந்த் இந்தப் படத்தை தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

    அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ் படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவை பதிவிட்டுள்ளார். அதில் இத்திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ஒரு மிகச்சிறந்த அர்பணிப்பாக அமைந்துள்ளது.

    சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனரான ராஜ்குமார், சண்டை பயிற்சியாளரான அன்பறிவ் மாஸ்டர்ஸ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இப்படத்தை தயாரித்த என்னுடைய உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார்.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்புல உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி 'ஃபைட் கிளப்' என்ற படத்தை தயாரித்திருந்தார்.

    ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், ராகவா லாரன்ஸின் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார்.

    இதனால் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த 'பென்ஸ்' கதாபாத்திரமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார் லோகேஷ் கனகராஜ்.
    • . இவர் தனெக்கென தனி ஸ்டைலில் திரைப்படம் எடுப்பவர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் தனெக்கென தனி ஸ்டைலில் திரைப்படம் எடுப்பவர். இவருக்கென தனி ஒரு சினிமாடிக் யூனிவர்சை உருவாக்கி வைத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என பெயரிட்டனர்.

    இவ்வாறு இந்த LCU யூனிவர்ஸ் உருவாதற்கு முன் என்ன நடந்தது . இது எப்படி உருவானது என தெரிவிக்கும் வகையில் லோகேஷ் ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு சாப்டர் ஜீரோ என பெயரிட்டுள்ளார்.

    தற்பொழுது இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் 1 ஷாட், 2 கதைகள் ,24 மணிநேரம் என இடம்பெற்றுள்ளது. இந்த குறும்படத்தின் நீளம் 10 நிமிடத்திற்குள் இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த குறும் படம் நெட்பிளிகஸில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×