search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிசான்"

    • இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.

    நிசான் நிறுவனம் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த எக்ஸ் டிரெயில் காரின் இந்திய வெர்ஷன் விவரங்களை தெரிவித்துள்ளது. மூன்றடுக்கு இருக்கை கொண்ட புது எஸ்யுவி மாடல் இந்தியாவில் மேக்னைட் மாடலுடன் விற்பனை செய்யப்பட உள்ளது.

    தற்போது நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. இது Fully Loaded வேரியண்ட் ஆக இருக்கும்.

    புதிய எக்ஸ் டிரெயில் மாடல்: பியல் வைட், டைமண்ட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கும். அளவீடுகளை பொருத்தவரை இந்த கார் 4680mm நீளம், 1840mm அகலம், 1725mm உயரம் கொண்டுள்ளது. இந்த காரின் வீல்பேஸ் 2705mm ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 210mm ஆக உள்ளது.

     


    2024 நிசான் எக்ஸ் டிரெயில் மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 12 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 160 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 13.7 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 9.6 நொடிகளில் எட்டும் திறன் கொண்டுள்ளது. புதிய எக்ஸ் டிரெயில் மாடலில் ஸ்ப்லிட் ரக எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் மெஷின்டு அலாய் வீல்கள், முன்புற கதவில் ORVMகள், எல்இடி டெயில் லைட்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர் வழங்கப்படுகிறது.

    • ரூ. 31 கோடி வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • அஷ்வானி குப்தா நிசான் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

    நிசான் மோட்டார் கம்பெனியின் முன்னாள் சி.இ.ஓ. அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற நிசான் நிறுவனம் அவருக்கு 3.7 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 31 கோடி வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அஷ்வானி குப்தா நிறுவனத்தை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அஷ்வானி குப்தா நிசான் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

    நிசான் நிறுவனத்தின் எதிர்காலமாக கருதப்பட்ட நிலையில், அதன் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து வெளியேறிய சம்பவம் முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த 2019 ஆம் ஆண்டு நிசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அஷ்வானி குப்தா செயல்பட்டு வந்தார்.

    தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து அஷ்வானி குப்தா விலகுவதாக நிசான் நிறுவனம் அறிவித்ததை அடுத்து, அவர் அதானி துறைமுகங்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    • கெசா எடிஷனின் ஆண்டு விழாவை ஒட்டி ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்.
    • இந்த காரில் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் மேக்னைட் கெசா எடிஷனின் முதலாம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், கெசா ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை ரூ. 9 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, ஜெ.பி.எல். மியூசிக் சிஸ்டம், ரியர் கேமரா, ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது.

    புதிய மேக்னைட் கெசா ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 99 ஹெச்.பி. பவர், 152 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    • காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்த நிசான் முடிவு.
    • மேக்னைட் மாடலை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்.

    நிசான் இந்தியா நிறுவனம் 2025 ஆண்டு மிட்சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன் நிசான் நிறுவனம் தனது மேக்னைட் மாடலை முடிந்த அளவுக்கு மேம்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் நிசான் நிறுவனத்தின் சி செக்மண்ட் எஸ்.யு.வி. அறிமுகமாகும் வரை காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் கவனம் செலுத்த நிசான் முடிவு செய்துள்ளது.

    அந்த வகையில், நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டு வியாபாரத்தை கட்டமைக்கும் நோக்கில் நிசான் நிறுவனம் மேக்னைட் மாடலை மெக்சிகோ, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.

     


    தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூத்த அலுவலர் ஃபிரான்கோ பெய்லி, "மேக்னைட் எஸ்.யு.வி. மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு சந்தைகளில் இந்த மாடலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உள்நாடு மட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவிலும் மேக்னைட் மாடல் அமோக வெற்றி பெற்று இருக்கிறது," என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "இந்த மாடலுக்கு வரவேற்பு இருக்கும் வரை அதனை மேலும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் வளர்ச்சியடைவோம். தற்போதைக்கு இந்த காரின் வலதுபுற ஸ்டீரிங் கொண்ட வெர்ஷன் மட்டுமே உள்ளது. ஆனால் இடதுகை ஸ்டீரிங் கொண்ட மாடல் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற சந்தைகளில் இந்த காரை கொண்டுசெல்ல உதவும். இந்த கார் அந்த சந்தைகளுக்கு ஏற்ற மாடலாகவும் இருக்கும்," என்று தெரிவித்து உள்ளார்.

    • நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தையில் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • சமீபத்தில் நிசான் மேக்னைட் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நிசான் இந்தியா நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக்னைட் AMT மாடல் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் AMT விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இது அறிமுக விலை என்றும் நவம்பர் 10-ம் தேதிக்கு பிறகு, இந்த விலை மாற்றப்படும் என்றும் நிசான் தெரிவித்து உள்ளது.

    இந்திய சந்தையில் நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் கியூரோ ஸ்பெஷல் எடிஷன் மாடலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிரான்ஸ்மிஷனுடன் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த என்ஜின் 71 ஹெச்.பி. பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. நிசான் மேக்னைட்-இல் இந்த என்ஜின் லிட்டருக்கு 19.70 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

    சமீபத்தில் தான் நிசான் நிறுவனம் மேக்னைட் கியூரோ ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 8 லட்சத்து 27 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மேக்னைட் XV வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • நிசான் மழைகால பராமரிப்பு திட்டத்தில் 30-பாயின்ட் செக்கப் வழங்கப்படுகிறது.
    • வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களில் நிசான், டேட்சன் கார்களை இலவசமாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.

    நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மழைகால செக்-அப் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது காரை இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம். இலவச சர்வீஸ் திட்டம் ஜூலை 15-ம் தேதி துவங்கி செப்டம்பர் 15-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    நிசான் கார் வைத்திருப்போர் அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களுக்கு சென்று நிசான் மற்றும் டேட்சன் வாகனங்களை இலவசமாக சரிபார்த்துக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது கார்களை செக்கப் செய்து கொள்ள நிசான் கனெக்ட்ஆப் அல்லது நிசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

     

    மழைகால பராமரிப்பு பலன்கள்:

    நிசான் நிறுவனம் அறிவித்து இருக்கும் மழைகால பராமரிப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட 30-பாயின்ட் செக்கப் வழங்கப்படுகிறது. இதில், பேட்டரி செக்கப், வெளிப்புறம் மற்றும் உள்புற ஆய்வு, அன்டர்பாடி செக்கப், ரோடு டெஸ்ட், இலவச வாட்டர் வாஷ் உள்ளிட்டவை அடங்கும்.

    இலவச கார் பராமரிப்பு சேவை மட்டுமின்றி வைப்பர் பிளேடுகளுக்கு 10 சதவீதமும், லேபர் மற்றும் பிரேக் பேட் மாற்றுவதற்கு அதிகபட்சம் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    "அர்த்தமுள்ள கார் பயன்படுத்தும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இதுவே எங்களை தனித்துவம் மிக்க பிரான்டாக மாற்றுகிறது. மழைகால பராமரிப்பு திட்டம் இந்த குறிக்கோளின் அங்கங்களில் ஒன்று. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை கடக்கும் வகையில் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் பல்வேறு வழிகளில் இதுவும் ஒன்று," என நிசான் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

    • நிசான் மேக்னைட் மாடல் இந்திய சந்தை உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியது.
    • நிசான் மேக்னைட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் மாடல் இந்திய உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. நிசான் மேக்னைட் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் அந்நிறுவனத்தின் சென்னை ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது.

    இந்திய சந்தையில் அறிமுகமான 30 மாதங்களில் இந்த மைல்கல்லை நிசான் நிறுவனம் எட்டியுள்ளது. தற்போது நிசான் மேக்னைட் மாடல் XE, XL, XV, டர்போ, பிரீமியம், பிரீமியம் டர்போ (O), மற்றும் கெசா எடிஷன் போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் மர்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 71 ஹெச்பி பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 99 ஹெச்பி பவர், 152 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.

    இதன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • ரெனால்ட்-நிசான் நிறுவனங்கள் கூட்டணியில் பல்வேறு புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
    • புதிய கார் மாடல்களில் ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்களும் இடம்பெற்றுள்ளன.

    ரெனால்ட்-நிசான் கூட்டணியின் கீழ் இந்திய சந்தையில் ஆறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய கார்களில் நான்கு சி பிரிவு எஸ்யுவி-க்கள் மற்றும் இரண்டு ஏ பிரிவு எலெக்ட்ரிக் வாகனங்கள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முதலில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் இரு நிறுவனங்களுக்கும் மூன்று மாடல்கள் உள்ளன.

    புதிய கார்கள் குளோபல் காமல் மாட்யுல் (CMF) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகின்றன. அனைத்து கார்களும் அதிகளவு உள்நாட்டு உபகரணங்களை கொண்டிருக்கும். மேலும் சென்னையில் உள்ள கூட்டணி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த குழுமம் சார்பில் புதிய திட்டத்திற்காக ரூ. 3 ஆயிரத்து 500 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

    இதுதவிர ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலை மறுசுழற்சி செய்யப்பட்ட எரிசக்தியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்த நிறுவனம் ரெனால்ட்-டிரைபர் சார்ந்த நிசான் எம்பிவி மாடலை இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தது.

    "தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டமைப்பு உற்பத்தி மற்றும் டிசைன் பிரிவு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. தமிழ் நாடு அரசு மற்றும் கூட்டணிக்கு இது மிக முக்கியமான மற்றும் அதிக மதிப்பு கொண்ட உறவு ஆகும். இதன் மூலம் மாநிலத்தில் நேரடியாக 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் ஆட்டோமோடிவ் தலைநகராக தமிழ் நாடு தொடர்ந்து நீடிக்கும்."

    "ஆட்டோமொபைல் உற்பத்தி, ஆட்டோ உபகரணங்கள் மற்றும் டிசைன் உள்ளிட்டவைகளுக்கான முக்கிய பகுதியாக தமிழ் நாடு மாறும். தமிழ் நாட்டில் ரெனால்ட்-நிசான் கூட்டணியின் நவீனமயமாக்கல் தொடர்பான புதிய முதலீட்டின் கீழ் துவங்க இருக்கும் திட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏறப்டுத்தி இருக்கிறது. இது மேக் இன் தமிழ் நாடு மற்றும் மேக் இன் இந்தியா ஃபார் தி வொர்ல்டு திட்டத்தின் கீழ் வருகிறது." என தமிழ் நாடு அரசின் தொழிற்சாலைகள் பிரிவு கூடுதல் மூத்த ஆணையர் எஸ் கிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.

    • நிசான் நிறுவன கார் மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சலுகை விவரங்கள் அறிவிப்பு.
    • இந்த மாதத்தில் மேக்னைட் மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் தனது மேக்னைட் மற்றும் கிக்ஸ் எஸ்யுவி மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. பிப்ரவரி மாத சலுகையின் படி அதிகபட்சம் ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இரு எஸ்யுவி மாடல்களுக்கான சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் பலன்கள், லாயல்டி போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

    நிசான் மேக்னைட் 2022 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 12 ஆயிரம் ரொக்கம் அல்லது அக்சஸரீக்களுக்கு தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஆன்லைன் முன்பதிவு போனஸ் ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    2023 நிசான் மேக்னைட் மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 72 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 62 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 19 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆன்லைன் முன்பதிவுகளுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் சலுகைகள் ஒவ்வொரு பகுதி, மாடல், உற்பத்தி மாடல், டீலர்ஷிப் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப வேறுபடும். 

    • இந்தியாவில் புது கார் அறிமுகம் செய்வது பற்றி நிசான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • புதிய கார் இந்தியா மட்டுமின்றி லத்தின் அமெரிக்கா போன்ற சர்வதேச சந்தைகளிலும் அறிமுகமாகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி கார் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உருவெடுக்க நிசான் திட்டமிட்டு இருந்தது. பல்வேறு பிரிவுகளில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதில் நிசான் கவனம் செலுத்தி வந்தது. மைக்ரா ஹேச்பேக், சன்னி செடான், எவானியா எம்பிவி, நிக்ஸ் எஸ்யுவி, டெரானோ எஸ்யுவி என ஏராள மாடல்களை அறிமுகம் செய்தது. எனினும், இவை எதுவும் நிசான் நிறுவனத்திற்கு பலன் அளிக்கவில்லை.

    இந்திய சந்தையில் இருந்து வெளியேற நிசான் திட்டமிட நினைத்த காலத்தில் மேக்னைட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேக்னைட் மாடல் தனியே நின்று நிசான் இந்தியாவை விட்டு வெளியேறாமல் செய்தது. ரெனால்ட்-நிசான் கூட்டணியில் ஏற்கனவே பிளாட்ஃபார்ம் மற்றும் என்ஜின் பகிர்ந்து கொண்டு வருகின்றன. முன்னதாக டஸ்டர் மற்றும் டெரானோ மற்றும் சன்னி, ஸ்கேலா மாடல்கள் இவ்வாறு அறிமுகமாகின.

    சமீபத்தில் ரெனால்ட் கைகர் மாடல் நிசான் மேக்னைட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டிரைபர் மாடலை போன்ற பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேக்னைட் பெற்று இருக்கும் வெற்றியை அடுத்து நிசான் நிறுவனம் இந்திய சந்தையில் மற்றொரு புது காரை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    புதிய நிசான் கார் ரெனால்ட் டிரைபர் மாடலை தழுவி உருவாக்கப்படுகிறது. டிரைபர் மாடல் சப்-4 மீட்டர் எம்பிவி மாடல் ஆகும். இதே போன்ற வழிமுறையை டேட்சன் பிராண்டு முதல் முறையாக தனது கோ பிளஸ் மாடலில் பின்பற்றி இருந்தது. டிரைபர் மாடல் எண்ட்ரி லெவல் 7 சீட்டர் காராக டிசைன் செய்யப்பட்டு உள்ளது.

    நிசான் நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் மேக்னைட் மற்றும் கிக்ஸ் என இரண்டு கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாத வாக்கில் கிக்ஸ் மாடலின் விற்பனை நிறுத்தப்பட இருக்கிறது. நிசான் நிறுவனத்தின் டிரைபர் வெர்ஷன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • நிசான் நிறுவன கார் மாடல்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை அதிரடியான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • நிசான் நிறுவனத்தின் கிக்ஸ் மாடலுக்கு அதிகபட்ச சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் தனது நிசான் மேக்னைட் மற்றும் நிசான் கிக்ஸ் மாடலுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரு எஸ்யுவி மாடல்களுக்கும் ரொக்க தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் சர்வீஸ் பேக்கேஜ் வடிவில் ஏராள சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு/மேற்கு, தெற்கு, வடக்கு (இரு பகுதிகள்) என நான்கு பிரிவு வாடிக்கையாளர்களுக்கு நிசான் கிக்ஸ் மாடலுக்கு அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    நிசான் கிக்ஸ் கிழக்கு / மேற்கு பகுதிக்கான சலுகைகள்:

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை தள்ளுபடி

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரையிலான தள்ளுபடி

    தெற்கு பகுதிக்கான சலுகைகள்:

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரையிலான தள்ளுபடி

    வடக்கு பகுதிக்கான ஆப்ஷன் 1

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ வேரியண்ட்களுக்கு இரண்டு ஆண்டுகள் பராமரிப்பு சர்வீஸ் பேக்கேஜ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு மூன்று ஆண்டுகள் பராமரிப்பு சர்வீஸ் பேக்கேஜ்

    வடக்கு பகுதிக்கான ஆப்ஷன் 2

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 18 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ்

    டர்போ இல்லா வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி

    டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 19 ஆயிரம் வரை தள்ளுபடி

    அனைத்து பகுதிகளுக்கும் ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 2 ஆயிரம் வரை ஆன்லைன் புக்கிங் போனஸ் வழங்கப்படுகிறது.

    நிசான் மேக்னைட் சலுகை விவரங்கள்:

    நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரையிலான இலவச அக்சஸரீக்கள் / ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    • நிசான் நிறுவனத்தின் முற்றிலும் புதிய X டெரியில் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது கார்கள் பற்றிய தகவல்களை நிசான் வெளியிட்டு உள்ளது.

    நிசான் இந்தியா நிறுவனம்- நிசான் ஜூக், நிசான் கஷ்கெய் மற்றும் நிசான் X டிரெயில் என மூன்று சர்வதேச மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கிறது. இவற்றில் இரு மாடல்கள் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என நிசான் அறிவித்து இருக்கிறது. இவை இந்திய சந்தைக்கு ஏற்ற மாடல்களாக இருக்குமா என்ற ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இந்திய சந்தையில் எட்டு ஆண்டுகளுக்கு பின் ரி-எண்ட்ரி கொடுக்கும் நிசான் X டிரெயில் பல்வேறு விஷயங்களில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய X டிரெயில் மாடல் பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்களில் வாங்கிட முடியும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 161 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹைப்ரிட் வெர்ஷன் "இ-பவர்" என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. இதில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் இயங்கும் போது, வீல்களில் இருந்து பேட்டரி சார்ஜ் செய்யப்படும். முன்புற வீல் மற்றும் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

    இதன் முன்புற வீல் டிரைவ் மாடல் 201 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆல்-வீல் டிரைவ் வேரியண்ட் 210 ஹெச்பி பவர், 525 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை இந்த மாடலில் வி மோஷன் முன்புற கிரில், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய நிசான் X டிரெயில் மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த கார் ஐந்து மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் இருவித இருக்கை அமைப்புகளுடன் வெளியிடப்படும் என தெரிகிறது.

    ×