என் மலர்
நீங்கள் தேடியது "ஏ.ஆர். ரகுமான்"
- சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
- இப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான்
இந்நிலையில், அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.
டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான் அப்டேட்
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அயலான் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்த அறிவிப்பு நாளை காலை 11.04 மணிக்கு வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. அதில், இப்படத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ள படக்குழு விரும்பவில்லை.
அயலான் படத்தில் 4500-க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் படம் முழுவதும் ஏலியன் கதாப்பாத்திரம் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயலானுடன் வேறு உலகத்திற்கு செல்ல அனைவரும் தயாராக இருங்கள் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Here's what you've all been asking for! And it's coming to you bigger and grander ?
— KJR Studios (@kjr_studios) April 23, 2023
Tomorrow 11:04 AM #AyalaanUpdate ❤️?#Ayalaan @Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @24amstudios @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben… pic.twitter.com/9lxlJCmo0I
- சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான்.
- இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான்
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு இன்று காலை 11.04 மணிக்கு வெளியாகும் என அறிக்கை வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. அறிவித்தபடி இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனபடி அயலான் திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதனை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான்
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் தயாராகி கொண்டிருப்பதாகவும் விரைவில் டீசரை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
This Diwali, get ready for more than just fireworks in theatres ?#Ayalaan ?? Teaser En route to Earth ?
— KJR Studios (@kjr_studios) May 27, 2023
- ராயன் படத்தில் சந்தீப், அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.
- ராயன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ். நடிப்பை கடந்து பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என பல பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரை இயக்கி, நடித்து வருகிறார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் "வாட்டர் பாக்கெட்" தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
கானா பாடலாக உருவாகி இருக்கும் "வாட்டர் பாக்கெட்" சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் படத்தில் சந்தீப், அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர்.
- ராயன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பை கடந்து பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என பல பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். தனுஷ் நடிப்பில் உருவாகும் 50 ஆவது படத்தை அவரை இயக்கி, நடித்து வருகிறார். ராயன் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் அடுத்த பாடல் "வாட்டர் பாக்கெட்" தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
கானா பாடலாக உருவாகி இருக்கும் "வாட்டர் பாக்கெட்" சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், வாட்டர் பாக்கெட் பாடலுக்கு வரிகள் எழுதிய கானா காதரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளனர்.
இது சம்பந்தமான வீடியோவை ராயன் படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார்.
- இதனைத் தொடர்ந்து பழைய விடியோக்கள், பழைய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவின் புகழ்பெற்ற இசையப்பாளரும், ஆஸ்கார் விருது வென்றவருமான ஏர்.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் அவர்களுடைய 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் இருவருடைய கடந்த கால வாழ்க்கை குறித்து உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹனிமூனுக்கு சென்ற இடத்திலும் மியூசிக் கம்போஸ் செய்தார் ஏர்.ஆர். ரகுமான் என சாய்ரா பானுவின் சகோதரி கணவரும், நடிகருமான ரகுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரகுமான் கூறுகையில் "அவர்கள் ஹனிமூனுக்கு சென்றிருந்த நேரத்தில் அவர்களுக்கு நான் போன் செய்திருந்தேன். அப்போது நள்ளிரவு 12 முதல் 1 மணி வரை இருக்கும். சாய்ரா பானு தூங்கிக் கொண்டிருந்த நிலையில், எழுந்து பதில் அளித்தார். அப்போது ரகுமானை எங்கே என்று நான் கேட்டேன்.
எனக்கு தெரியாது என்று சாய்ரா கூறினார். அவர் மற்றொரு அறையில் வீணை வைத்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். அவர் கம்போசிங் செய்து கொண்டிருந்தார். அவர் அப்படிப்பட்ட நபர். அந்த அளவிற்கு மியூசிக் மீது தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்" எனத் தெரிவித்துள்ளார்.
- காதலிக்க நேரமில்லை படத்தின் `என்னை இழுக்குதடி' பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது.
- இதுவரை இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடல் `என்னை இழுக்குதடி' சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள என்னை இழுக்குதடி பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுவரை இப்பாடல் 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
இந்நிலையில், 'என்னை இழுக்குதடி' பாடலின் மேக்கிங் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி' வரவேற்பை பெற்றுள்ளது.
- இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி' சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'லாவண்டர் நேரமே' இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் ஒரு மெலடி பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா (ஐ.ஐ.எப்.ஏ.) அபுதாபியில் உள்ள யாஸ் ஐலேண்டில் எத்திஹாட் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை நடிகர்கள் சல்மான் கான், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் மணீஷ் பால் ஆகியோர் முன்னின்று தொகுத்து வழங்குகின்றனர். இதில், நடிகர் நடிகைகளான ரன்வீர் சிங், கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான், வருண் தவான், அனன்யா பாண்டே, திவ்யா கோஸ்லா குமார் மற்றும் நோரா பதேஹி உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.

ஹனி சிங் - ஏ.ஆர். ரகுமான்
இந்த விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் பஞ்சாப்பை சேர்ந்த ராப் இசை பாடகரான ஹனி சிங் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். மேடையில் பாடல்களை பாடியபடி இருந்த அவர் பின்பு கீழே இறங்கி நடந்து சென்று பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் காலில் விழுந்து வணங்கினார். அவரை வாழ்த்திய ஏ.ஆர். ரகுமான், ஹனி சிங் எழுந்ததும் அவருக்கு கைகொடுத்து புன்னகைத்தார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹனி சிங் வெளியிட்டு உள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் சாருடனான எனது வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என அதில், தலைப்பிட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் தங்க பல்லி போன்ற நெக்லெஸ் ஒன்றை ஹனி சிங் அணிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். அவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுடன் ஒன்றாக நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தலப் பக்கத்தில் ஜாக்குலின் வெளியிட்டு உள்ளார். இந்த விழாவில் குரு ரந்தாவா, புஷ்பா பட இசையமைப்பாளர் மற்றும் பாடகரான தேவி ஸ்ரீ பிரசாத், தனிஷ்க் பக்சி, நேஹா கக்கர் மற்றும் துவானி பானுஷாலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.