என் மலர்
நீங்கள் தேடியது "அனிருத்"
- விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 30-ந்தேதிவெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 'கிங்டம்' படம் வரும் 30-ந்தேதிக்கு பதிலாக ஜூலை 4-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஜய் தேவரகொண்டா அனிருதின் மேல் உள்ள அன்பை பற்றி பேசியுள்ளார் அதில் "எனக்கு அனிருதை அவரது 3 மற்றும் விஐபி படங்களில் இருந்து பிடிக்கும். நான் அப்போது நடிகனாக இல்லை. அப்போது யோசிப்பேன் நாம் ஒரு நாள் நடிகனாக ஆனால் நம் படத்திற்கு அல்லது நாம் வரும் காட்சியில் அனிருதின் இசை இடம் பெற்றிருக்க வேண்டும் அது இத்தனை வருடங்கள் கழித்து கிங்டம் படத்தில் நடந்துள்ளது. நான் மட்டும் ஒரு அரசனாக இருந்தேன் என்றால் அனிருதை கடத்தி சென்று என் அரண்மனையில் வைத்து என் அனைத்து திரைப்படங்களுக்கும் அனிருதை இசையமைக்க சொல்லுவேன் " என கூறியுள்ளார்.
- இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
- ‘கிங்டம்’ படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக 'கிங்டம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 30-ந்தேதிவெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், 'கிங்டம்' படம் வரும் 30-ந்தேதிக்கு பதிலாக ஜூலை 4-ந்தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், படத்திற்கான ப்ரொமோஷன், கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாது என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக படக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
- வண்ணம் கொண்ட வெண்ணிலவே படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.
- படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் & தயானி பாலா தயாரித்து இருக்கும் படம் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே'.
தனுஷான் சந்திரசேகர் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சச்சின், வகீஷா சல்காடோ ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடி இருக்கும் அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான ஹ்ருதயம் லோபலா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கிருஷ்ண காந்த் வரிகளில் அனிருத் மற்றும் அனுமிதா நடேசன் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
- திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது
நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளின் ப்ரோமா வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலிற்கு God Bless U என தலைப்பு வைத்துள்ளனர்.பாடலின் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார். பாடலின் ராப் பகுதியை பால் டப்பா பாடியுள்ளார். பாடல் நாளை வெளியாக இருக்கிறது.
இப்பாடலை குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே அனிருத் குரலில் வேதாளம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதேப்போல் இப்பாலௌம் மிகவும் வைபாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 12-வது படமாக கிங்டம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கிங்டம் படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார்.
கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசர் டிராக்கை அனிருத் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியிடவுள்ளார். இதனை வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் இணைந்தது குறித்து அனிருத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
'வாரிசு' படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் - தளபதி 67
தளபதி 67 படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டது. அதன்படி தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

தளபதி 67
இந்நிலையில் தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் அனிருத், லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் இணைந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் அனிருத் பதிவிட்டுள்ளார். அதில், அன்பான தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் ஒருமுறை இணைவதில் மகிழ்ச்சி. இந்த முறை, இது ஒரு அணுகுண்டு வெடியாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
Blast begins with dearest #Thalapathy @actorvijay sir and @Dir_Lokesh once again ??? And this time, it's gonna be a nuclear blast ???
— Anirudh Ravichander (@anirudhofficial) January 30, 2023
@7screenstudio @Jagadishbliss
Let's gooo ??? pic.twitter.com/taslFp2uFs
- விஜய் நடிக்கும் 67-வது திரைப்படத்திற்கு 'லியோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
- 'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

லியோ
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

லியோ படக்குழு
இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'லியோ' திரைப்படத்தின் டைட்டில் டீசர் பாடலின் ரெக்கார்டிங் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.
- நடிகர் சிம்பு தற்போது ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த பேச்சு எழுந்துள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்புவுடன் இணைந்து கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. அதன்படி இப்படத்தை துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன்பு தேசிங்கு பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்கப்போவதாக வலைத்தளங்களில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அனிருத் தற்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
- இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2012ம் ஆண்டு தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பின் வெளியான எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலை இல்லா பட்டதாரி, மான் கராத்தே, கத்தி, வேதாளம், விவேகம், பேட்ட, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

ஆட்டோகாரனாக மாறிய அனிருத்
இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ரசிகர்களை வைப் செய்ய வைத்துள்ளது. காக்கி சட்டை அணிந்து ஆட்டோகாரன் கெட்டப்பில் ஆட்டோவில் அமர்ந்து ரஜினியின் நான் ஆட்டோகாரன் என்ற பாடலை இணைத்துள்ளார். இவரின் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
- இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கடைசி ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
- சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை நேரில் பார்த்த அனிருத்
இந்நிலையில் இந்த போட்டியை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று பார்த்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
- இந்த போட்டியை திரைப்பிரலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 140 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த போட்டியை திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் கண்டுகளித்தனர். அதன்படி நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ், நடிகைகள் நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.