என் மலர்
நீங்கள் தேடியது "யுவன் சங்கர் ராஜா"
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார்.
- 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம், மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோவை சண்முக பாண்டியனின் பிறந்தநாளான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
- இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். பட தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் செய்கிறார். இப்படத்திற்கு கொம்புசீவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
- தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளவர் யுவன் சங்கர் ராஜா.
- யுவன் தற்போது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனித பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.
சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது.

யுவன் சங்கர் ராஜா
2015ல் ஆடை வடிவமைப்பாளர் ஷஃப்ரூன் நிஷா என்பவரை யுவன் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஸியா என்ற மகள் உள்ளார். 2014ல் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டதாக அறிவித்த யுவன், தனது பெயரை அப்துல்ஹாலிக் என்று மாற்றிக்கொண்டார்.

யுவன் சங்கர் ராஜா
இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மற்றும் மதினாவுக்கு 'உம்ரா' என்ற புனித பயணத்தை யுவன் மேற்கொண்டு உள்ளார். யுவன் உம்ராவுக்கான ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை. இப்படத்திற்கு இசையமைப்பாள யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து மீரா ஜாஸ்மின், அமீஷா படேல், கலாபவன்மணி, கருணாஸ், சரத்பாபு, சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இப்படத்திற்கு பிறகு விஜய்-யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் நீண்ட வருட கனவாக இருந்தது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தின் மூலம் 20 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த இந்த கூட்டணி தற்போது இணைந்துள்ளதால் ரசிகர்களின் உற்சாகத்தில் உள்ளனர்.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் யுவன் சங்கர் ராஜா இசை கூடுதல் பலமாக அமைந்தது.
- திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
சரத்குமார் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. அதன்பின்னர் தீனா, துள்ளுவதோ இளமை, நந்தா, மௌனம் பேசியதே, 7ஜி ரெயின்போ காலனி, மன்மதன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மத்தியில் இடம்பிடித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் பலருக்கும் இவரின் இசை கூடுதல் பலமாக அமைந்தது.

திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட யுவன் சங்கர் ராஜா ஹை ஆன் யுவன் (High on U1) என்ற இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி மலேசியாவில் ஜூலை 15 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பாட்டு பாடி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்கள். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு சிலம்பரசன் மலேசியாவில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதால் ரசிகர்களிடையே ஹை ஆன் யுவன் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹை ஆன் யுவன் இசை நிகழ்ச்சியை தொழிலதிபர் கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் பெரும் பொருட்செலவில் நடத்துகிறார்கள். ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கவே யுவன் சங்கர் ராஜா மற்றும் சிலம்பரசனை ஒன்று சேர்த்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜாவை வைத்து அமெரிக்காவில் உள்ள 6 மாநகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்தவும் முடிவு செய்து இருப்பதாக கார்த்திக் இளம்வழுதி, கவிதா சுகுமார் கூறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு, நான் எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
- இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரை பதிவிட்டு வந்தனர்.
பூவெல்லாம் கேட்டுப்பார், தீனா, நந்தா, 7 ஜி ரெயின்போ காலனி, மன்மதன், ராம், சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசையில் சமீபத்தில் வெளியான கஸ்டடி மற்றும் பொம்மை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தளபதி 69 படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில், எனது அடுத்த பெரிய பாடலுக்கு நான் எந்த இசை அமைப்பாளருடன் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? பெயரை கீழே பதிவிடுங்கள், அதைச் செய்வோம்! என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு விருப்பமான இசையமைப்பாளரின் பெயர்களை பதிவிட்டு வந்தனர். மேலும் பலரும் அனிருத் என்று தங்களின் விருப்பத்தை பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, அவர்களின் விருப்பத்திற்கு இனங்க அனிருத்துடன் இணையவுள்ளதாக வித்யாசமான முறையில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளர் ஆனார்.
- இயக்குநர் எலன் உடன் யுவன் சங்கர் ராஜா புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா யு.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் எலன் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் கவின் நடிக்க இருக்கிறார். டாடா படத்தைத் தொடர்ந்து கவின் நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
- பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
- இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் பியார் பிரேமா காதல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில், பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஸ்டார் போஸ்டர்
அதன்படி, இப்படத்திற்கு 'ஸ்டார்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர். 'ஸ்டார்' படத்தின் புரோமோ ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2001-ஆம் ஆண்டில் பிரசாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் 'ஸ்டார்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் வெங்கட் பிரபு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தளபதி 68 படத்தில் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Happy bday Thambi @thisisysr waiting for u to rock #Thalapathy68
— venkat prabhu (@vp_offl) August 31, 2023
- இயக்குனர் எலன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்டார்’.
- இந்த படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. பி.ஜி.எம். கிங் என்று ரசிகர்களால் போற்றப்படும் யுவன் சங்கர் ராஜா இசையை கடந்து திரையுலகில் பல்வேறு பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் 'பியார் பிரேமா காதல்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.

'பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு 'ஸ்டார்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- வெங்கட் பிரபுவின் பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி 68 குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களை பகிர்ந்த அவர், "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்" என்று நடிகர் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தியை டேக்செய்து பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Welcome to the future!!! #Thalapathy68 @actorvijay @archanakalpathi pic.twitter.com/snWrqMEjfU
— venkat prabhu (@vp_offl) August 31, 2023
- நடிகர் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.

இந்நிலையில், 'தளபதி 68' படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவன் 'தளபதி 68' படத்தின் முதல் பாடல் தரலோக்கலாக இருக்கும் என்று கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.