என் மலர்
நீங்கள் தேடியது "சீனுராமசாமி"
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இடம் பொருள் ஏவல்'.
- இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது வெளியாக தயாராகி உள்ளது.

இடம் பொருள் ஏவல்
இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலானது.

இடம் பொருள் ஏவல்
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஈரக்காற்றே வீசு என்ற பாடலின் புரோமோ வீடியோவை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ள இந்த பாடலின் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
- சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது.
- சமீபத்தில் இதில் தனியார் ஊழியர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சீனுராமசாமி
அண்மையில் இந்த பள்ளத்தில் தனியார் செய்தி நிறுவன ஊழியர் விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து மாங்காட்டில் தனியார் நிறுவன ஊழியர் இதே போல் தவறி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு தொடர் விபத்தால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்துகள் குறித்து இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சீனுராமசாமி
அதில், "நகரத்தை சரி செய்து நெறிப்படுத்த வேண்டும். அது ஒரு சிகை தொழிலாளி முடித்திருந்தம் செய்வது போல ஒரு ஓரத்திலிருந்து பரவி வரவேண்டும். முழு நகரத்தையே தோண்டிப்போட்டால் பாதசாரி பயில்வானாக இருந்தாலும் தடுக்கி விழுவான்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படம் பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

மாமனிதன்
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 'மாமனிதன்' திரைப்படத்தை இயக்குனர் சீனுராமசாமியுடன் இணைந்து பார்த்துள்ளார்.

மாமனிதன் திரைப்படம் பார்த்த எல். முருகன்
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மனிதத்தை வெளிப்படுத்தும் அற்புதமான திரைப்படம் மாமனிதன்..! இப்படத்துக்கு சர்வதேச விருதுகள் மற்றும் மக்கள் அளித்த வெற்றி என உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் இது போன்ற படைப்புகளை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். https://t.co/gx50UAi6Ci
— Dr.L.Murugan (@Murugan_MoS) November 18, 2022
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நீர்ப்பறவை’.
- இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'நீர்ப்பறவை'. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். மேலும், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நீர்ப்பறவை
இந்நிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

நீர்ப்பறவை
சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும், #நீர்ப்பறவை
— Seenu Ramasamy (@seenuramasamy) November 30, 2022
அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில்
கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும்,
என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி.@RedGiantMovies_@Udhaystalin @TheVishnuVishal @TheSunainaa @balasubramaniem @kayaldevaraj @Vairamuthu @NRRaghunanthan
- நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி -ஹீராபென்
இதற்கிடையே, குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது தாயாரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் விரைவில் நலம் பெற பிரார்த்தித்து இயக்குனர் சீனுராம்சாமி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு. பாசத்தில் நிகரற்றது. எந்நேரமும் தாயின் கவலை பிள்ளையின் உணவு பற்றியது தான். மாண்புமிகு பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்.
இவ்வுலகில் உன்னதமானது தாயின் அன்பு.
— Seenu Ramasamy (@seenuramasamy) December 28, 2022
பாசத்தில்
நிகரற்றது.
எந்நேரமும் தாயின் கவலை
பிள்ளையின்
உணவு பற்றியது
தான்.
மாண்புமிகு
பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள்
விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப பிரார்த்திக்கிறேன்.@PMOIndia pic.twitter.com/kLVqOsrTIx
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாமனிதன்’.
- இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

மாமனிதன்
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தது. இப்படம் பார்த்த திரைபிரபலங்கள் பலரும் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மாமனிதன்
இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் ஹைதராபாத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகி, சிறந்த எடிட்டர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த சாதனையாளர் என நான்கு விருதுகளை வென்றுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் M.சுகுமார்
— Seenu Ramasamy (@seenuramasamy) December 29, 2022
எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்
நாயகி காயத்ரி சங்கர்
தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா
இவ்விருதாளர்களுக்கு
அன்பின்
வாழ்த்துகள்.@thisisysr @YSRfilms @VijaySethuOffl @SGayathrie @sreekar_prasad @mynnasukumar @onlynikil @Riyaz_Ctc #Maamanithan on @ahatamil https://t.co/2JCQY8iw5U
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமனிதன்’.
- இப்படம் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.

மாமனிதன்
யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மாமனிதன்
இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படத்தை ரஷ்ய அரசாங்கம் திரையிடவுள்ளது. அதாவது, ரஷ்யாவின் 45-வது மாஸ்கோ சர்வதே திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 20-ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் உலக சினிமா பிரிவில் 'மாமனிதன்' திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இதற்கான அழைப்பிதழை மாஸ்கோ சர்வதே திரைப்பட குழு தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குனர் சீனுராமசாமிக்கு அனுப்பியுள்ளனர். இதனை சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
Happy to share
— Seenu Ramasamy (@seenuramasamy) February 2, 2023
The Russian Government screening #Maamanithan movie in the World Cinema category at the 45th Moscow International Film Festival from April 20 to 27. #MIFF The prestigious film festival committee sent an invitation to #Maamanithan movie producer U1 @thisisysr & me pic.twitter.com/D1BWz81Zn9
- 'மாமனிதன்' திரைப்படம் தொடர்ந்து பல சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.
- இப்படத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.

யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், 'மாமனிதன்' திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச விருதினை பெற்றுள்ளது. அதாவது, அமெரிக்காவில் நடைபெற்ற 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது.
- இப்படம் ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர்.

மாமனிதன்
யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். 'மாமனிதன்' திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்வதேச விருதுகளை குவித்தது. மேலும், பல திரைப்பிரபலங்களும் இப்படத்தை பார்த்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சமீபத்தில் இப்படம் 29-வது செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஊக்கமளிக்கும் திரைப்படம் (Inspirational Feature Film) என்ற விருதினை வென்றது. இதையடுத்து 56-வது ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஏப்ரல் 25 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இதில் 'மாமனிதன்' திரைப்படம் போட்டி பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மாமனிதன்
மேலும், அந்த பதிவில், "இதில் இளையராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன் Golden Globe Award விட வயதில் மூத்த திரைப்பட விழா. பண்ணைப்புரத்தில் அவர் ஜனித்த இடத்தில் எடுத்தப் படம் என்பதாலும் அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடல் நான் இருப்பதனால் Meastro கலந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதில் @ilaiyaraaja
— Seenu Ramasamy (@seenuramasamy) March 3, 2023
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தால் மகிழ்வேன் Golden Globe Award விட வயதில் மூத்த திரைப்பட விழா
பண்ணைப்புரத்தில் அவர் ஜனித்த இடத்தில் எடுத்தப் படம் என்பதாலும்
அதே தேதியில் மாஸ்கோ சர்வதேச திரைப்பட திரையிடல் நான் இருப்பதனால்
Meastro கலந்து கொள்ள வேண்டுகிறேன். https://t.co/shE3NrE7yr
- தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனுராமசாமி.
- இவர் இயக்கிய ’மாமனிதன்’ திரைப்படம் பல விருதுகளை பெற்றது.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தது.
இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள், சினிமா மற்றும் தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் சீனுராமசாமி பல படங்களை இயக்கியுள்ளார்.
- இவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான 'மாமனிதன்' திரைப்படம் இன்று வரை பல விருதுகளை குவித்து வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் சீனுராமசாமி நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் "சகோதரர் அண்ணாமலைக்கு வணக்கம். அரசின் திட்டங்கள் எல்லாமே வெற்றி பெறுவதில்லை, சில திரும்ப பெறப்பட்டுள்ளன. நடைமுறையில் நீட் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே பொதுக்
கருத்துக்கணிப்பு எடுத்து நீட் தேர்வு தேவையா என பரிசீலிக்க கலைஞனாக வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘ஜோ’.
- இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் 'ஜோ'. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சீனுராமசாமி, "இந்த படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குனர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரொமோஷனுக்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது.

படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் 'ஜோ'. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.
ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்றார்.

மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது, இந்த படத்தின் டிரைலரை அருள் நந்து போட்டு காண்பித்தபோது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்தபோது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருள் நந்து செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். 'ஜோ' படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என பேசினார்.