என் மலர்
நீங்கள் தேடியது "நயன்தாரா விக்கி திருமணம்"
- ரஜினி- நயன்தாரா நடித்திருந்த சந்திரமுகியை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
- சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.
நடிகர் தனுஷை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு நடிககை நயன்தாராவுக்கு மற்றொரு நிறுவனமும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி- நயன்தாரா நடித்திருந்த சந்திரமுகியை சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
இந்நிலையில், நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் சந்திரமுகி திரைப்பட காட்சியை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்திரமுகி திரைப்படத்தின் ஆன்லைன் தொடர்புடைய உரிமை, வேறொரு நிறுவனத்திடம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, திருமண ஆவணப்படத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடந்தது.
- சென்னை தாஜ் க்ளப் ஹவுஸ் ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பு
விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், சென்னை தாஜ் க்ளப் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன் கூறுகையில், 'நானும் ரவுடி தான் படத்தின் கதையை செல்வதற்காக நயன்தாராவை நான் முதன் முதலாக இந்த ஹோட்டல்ல தான் சந்தித்தேன்' என்று நெகிழ்ச்சியாக கூறினார்.