search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேக்"

    • ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்".
    • இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது.

    ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் "அந்நியன்". இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரெஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும்.

    ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மூன்று சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார். மேலும், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த திரைப்படம் 4கே தரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மறு வெளியீடு செய்யப்பட்டது. தெலுங்கில் "அபரிசித்துடு" என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியானது. இதனை தெலுங்கு ரசிகர்கள் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அந்நியன் போன்று வேடமிட்டு திரையரங்கில் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'
    • ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான டப்பிங் பணியைத் தொடங்கி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

    மெட்ராஸ் ஸ்டுடியோஸ், அன்சு பிரபாகர் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில், கே. விவேக் இயக்கியுள்ள திரைப்படம் '13'. இதன் படப்பிடிப்பு 80 நாட்கள் சென்னை மற்றும் வனப்பகுதிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து, டப்பிங் பணிகள் தொடங்கியது. இன்று மதியம் 13:13 மணியளவில் ஜிவி பிரகாஷ் டப்பிங் பேசி தொடங்கி வைத்தார்.

    படம் குறித்து இயக்குநர் விவேக் கூறியிருப்பதாவது, "'ராட்சசன்', 'போர் தொழில்' படங்கள் போல இந்தப் படம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிறைய இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானர் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுவாக, 13 அன்லக்கி எண் என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையை படம் உடைத்துக் காட்டும். நண்பர்கள் ட்ரிப் செல்லும்போது, ஜாலியாக செய்யும் சில விஷயங்கள் அவர்களுக்கு எதிராக எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. ஜிவி பிரகாஷூடன் வேலை பார்த்திருப்பது என் கனவு நினைவான தருணம். கெளதம் சார் நடிப்பு படத்தை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்".

    நடிகர் ஜிவி பிரகாஷ்குமார், "'13' படம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் கதைக்களம் புதிதாக இருக்கிறது. 'டார்லிங்' படத்திற்குப் பிறகு நான் நடிக்கும் ஹாரர் படம் இது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.

    '13' படத்திற்கு சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு சித்துகுமார் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், 'கதிர்' படப்புகழ் பவ்யா த்ரிக்கா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘13’.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.


    13

    இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    13 போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, '13' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர்.
    • இப்படத்தை இயக்குனர் விவேக் இயக்கவுள்ளார்.

    இயக்குனர் விவேக் இயக்கத்தில் மைக்செட் ஸ்ரீராம் கதையின் நாயகனாகவும் நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக புதிய படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை நடிகர் சந்தானத்தின் மைத்துனரான தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோர் என்என் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

     

    ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, பிவிஆர் மீனா, டிவோ தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4யூ கம்பெனி நிறுவனர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள்ராஜ் கென்னடி இசையமைக்கும் இப்படத்திற்கு முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

     

    இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படம் குறித்த பிற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    • ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள படம் '13'.
    • இந்த படத்தில் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.


    13

    இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    13

    இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்டார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள '13' படத்தின் டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.



    • தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக்.
    • தற்போது விவேக் நினைவாக ‘பீ ஹேப்பி’ வனம் கோவையில் உருவாகி வருகிறது.

    மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சிறுதுளி அமைப்பு சார்பில் கோவை பச்சாபாளையத்தில் எஸ்.பி.பி. வனம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வனத்தை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். இந்தநிலையில் நடிகர் விவேக் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது நினைவாக 'பீ ஹேப்பி' என்ற பெயரில் மேலும் ஒரு வனப்பூங்காவை அமைக்க சிறுதுளி அமைப்பு திட்டமிட்டது. பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சாபாளையம் சென்ட்ரல் எக்சைஸ் காலனியில் ஒரு ஏக்கர் பரபபில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    சிறுதுளி அமைப்பின் 19-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடிகர் விவேக்கின் நினைவாக அமைக்கப்பட உள்ள இந்த வனத்துக்கு பூமி பூஜை பச்சாபாளையத்தில் நடந்தது. விழாவில் பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி, சிறுதுளி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    விவேக்

    விவேக்


    இதுகுறித்து சிறுதுளி அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:- நடிகர் விவேக் இயற்கையை பெரிதும் நேசித்தவர். ஏராளமான மரங்களை வளர்த்து மக்களிடம் சூழல் ஆர்வத்தை விதைத்தவர். சிறுதுளி அமைப்புடன் இணைந்து பல்வேறு சூழல் பணிகளை கோவையில் செய்துள்ளார். அவரின் நினைவாக ஒரு ஏக்கரில் 'பீ ஹேப்பி' வனம் என்ற பூங்கா அமைக்கப்படுகிறது. வெகுவிரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


    நடிகர் விவேக் சினிமா வசனங்களில் பீ ஹேப்பி என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். அந்த வார்த்தையை மையப்படுத்தியே அவரது பெயரில் வனம் அமைய உள்ளது.

    ×