என் மலர்
நீங்கள் தேடியது "வெப்தொடர்"
- வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.
- சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது.
நடிகை அஞ்சலி ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேங்க்ஸ் ஆப் கோதாவரி என்ற தெலுங்கு படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.
தற்போது மீண்டும் பஹிஷ்கரன் என்ற வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட தொடராக உருவாகி உள்ளது. இந்த தொடரை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார்.

இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, 'இந்த தொடரில் புஷ்பா என்ற பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அப்பாவியான விலைமாதுவாக இருந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது. புஷ்பா என்றால் மர்மம். பிரச்சினைகளை எப்படி சமாளித்து அவள் முன்னேறினாள் என்ற கதையம்சத்தில் உருவாகி உள்ளது' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
- இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார்.
ரீவைண்ட் 2024 : இந்தாண்டு வெளியான சிறந்த தமிழ் வெப் தொடர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
இன்ஸ்பெக்டர் ரிஷி
இன்ஸ்பெக்டர் ரிஷி வெப் தொடரை நந்தினி என்பவர் இயக்கியுள்ளார். இத்தொடரில் நவீன் சந்திரா, ஸ்ரீகிருஷ்ணா தயால். கன்னா ரவி, மாலினி ஜீவரத்னம், சுனைனா, குமரன் , ஹரினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய மலைகிராமத்தில் தொடர்ந்து நடக்கும் மர்ம இறப்புகளை மையமாக வைத்து இயக்கிய தொடராகும். இத்தொடரில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளன. இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தலைமை செயலகம்
தலைமை செயலகம் வெப் தொடரை இயக்குனர் வசந்தபாலன் இயக்கியுள்ளார். இத்தொடரில் கிஷோர், ஸ்ரீயாரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி கஸ்தூரி, நிரூப், தர்ஷா குப்தா, சாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கிஷோர் தலைமையில் இருக்கும் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்ப்டுகிறது. அதிகாரம், அரசியல் , ஊழல் என இவற்றை பத்தி பேசும் கதையாக தலைமை செயலகம் வெப் தொடர். இத்தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாராசூட்
கிஷோர்,கனி திரு, கிருஷ்னா , சக்தி ரித்விக் , இயல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பாராசூட் வெப் தொடர். ஸ்ரீதர் கே இத்தொடரை இயக்கியுள்ளார். ஒரு உடன்பிறந்த இருவரும் தங்கள் கண்டிப்பான தந்தையின் மொப்பட்டை சவாரிக்கு எடுத்துச் சென்று அது திருடப்பட்ட பிறகு, குழந்தைகள் அதைத் தேடிச் செல்கிறார்கள், அவர்கள் காணாமல் போனது குறித்து பெற்றோருக்கு எந்த துப்பும் இல்லை. நுட்பமான நடிப்பு, மிருதுவான திரைக்கதை மற்றும் தொழில்நுட்ப செயலாக்கத்துடன், பாராசூட் இந்த ஆண்டு பார்க்க வேண்டிய இணையத் தொடர்களில் முக்கியமான ஒன்றாகும். இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
சட்னி சாம்பார்
ராதா மோகன் இயக்கத்தில் யோகி பாபு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சட்னி சாம்பார் வெப் தொடர். இவருடன் நிழல்கள் ரவி, வாணி போஜன், சந்திரமௌலி, இளங்கோ குமரவேல், நந்தினி மற்றும் நித்தின் சத்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது யோகி பாபு நடத்தி வரும் கையேந்திபவன் மற்றும் மற்றொரு மகனின் பேமஸ் ஓட்டலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
தலைவெட்டியான் பாளையம்
தலைவெட்டியான் பாளையம் ஒரு நகைச்சுவை வெப் தொடராகும். இத்தொடர் இந்தி தொடரான பஞ்சாயத்தின் தமிழ் வெர்ஷனாகும். இத்தொடரில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, நியத்தி, தேவதர்ஷினி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சென்னையில் பிறந்து வளர்ந்த இளைஞனான அபிஷேக் ஒரு தனி கிராமத்தில் பஞ்சாயத் தலைவராக நியமிக்கப்படுகிறார். அந்த கிராம வாழ்க்கையில் அவர் பழகிக்கொள்ளும் விதத்தை நகைச்சுவையாக காட்சி படுத்தியுள்ளனர். இத்தொடரை பிரபல இயக்குனரான நாகா இயக்கியுள்ளார். இத்தொடர் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜர்னி
இத்தொடரை சேரன் இயக்கியுள்ளார். இத்தொடரில் ஜாஸ்மின், சரத்குமார், அஞ்சு குரியன், கலையரசன், திவ்யபாரதி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். வெவ்வேறு பின்னணிகளை கொண்ட 5 கதாப்பாத்திரம் ஒரு வேலைக்காக போட்டியிடுகின்றனர் இதனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். இத்தொடர் மொத்தம் 9 எபிசோடுகள் கொண்டதாகும். இத்தொடர் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஹார்ட் பீட்
ஆர் கே மல்டிஸ்பெஷாலிடி மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர்கள் அன்கு வேலை செய்யும் பணியாளர்கள் அவர்களின் வாழ்க்கை பிரச்சனையை பற்றி மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஹார்ட் பீட் வெப் தொடர். அனுமோல் , தீபா பாலு , சாருகேஷ் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்தொடரை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இத்தொடரில் மொத்தம் 72 எபிச்சோடுகள் உள்ளன. இத்தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் அருண் கெளஷிக் இயக்கியுள்ள வெப்தொடர் மீம் பாய்ஸ்
- இந்த தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அருண் கௌஷிக் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மீம் பாய்ஸ்'. இந்த தொடரில் குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்ய பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா மற்றும் நிகில் நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நான்கு கல்லூரி மாணவர்கள் ஒரு தனிப்பட்ட மீம் பேஜ்ஜை நடத்துகிறார்கள்,அதில் அவர்களின் ஒடுக்குமுறை மிகுந்த கல்லூரி நிர்வாகத்தை நகைச்சுவையாக காட்ட ஆரம்பிக்க, அது தற்செயலாக கல்லூரி முழுவதும் ஒரு புரட்சியை உருவாக்குவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்தொடரை ரெயின்ஷைன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
ராஜீவ் ராஜாராம், த்ரிஷ்யா கௌதம் ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்தொடருக்கு கோபால் ராவ் இசையமைத்துள்ளார். ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இந்த வெப்தொடர் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில், இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த வெப்தொடர் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
- இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் ஓடிடி தளம் ஒன்றில் 'ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் வெளியானது.
- தற்போது இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கொரிய இயக்குனர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் வெப்தொடரான 'ஸ்குவிட் கேம்' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வெப்தொடரானது வெளியான முதல் நான்கு வாரங்களிலேயே 1.65 பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்ற பெருமையையும் 'ஸ்குவிட் கேம்' பெற்றிருந்தது. ரசிகர்கள் இந்த வெப்தொடரின் இரண்டாவது சீசன் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிவந்தனர். இதையடுத்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் வெளியாக உள்ளதை நெட்ஃபிளிக்ஸ் சமூக வலைதளத்தில் சிறிய டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்க்விட் கேம்
இது தொடர்பாக ஹ்வாங் டாங் ஹியூக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்குவிட் கேம் தொடரின் முதல் சீசனை வெளியிடுவதற்கு 12 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களால் கண்டு களிக்கப்பட்ட தொடராக 'ஸ்குவிட் கேம்' மாறியதற்கு வெறும் 12 நாட்களே தேவைப்பட்டன. தொடரை பார்த்து ரசித்தற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.