என் மலர்
நீங்கள் தேடியது "slug 234709"
- இயக்குனர் வெங்கட் பிரபு என்சி 22 படத்தை இயக்கி வருகிறார்.
- இவரின் வீடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு 'சென்னை -28' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் இவர் இயக்கத்தில் வெளியான, மங்காத்தா, பிரியாணி, மாநாடு, மன்மதலீலை போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

வெங்கட் பிரபு
தற்போது இவர் நாகசைதன்யா நடிப்பில் என்சி22 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் நிதின் சத்யா "என்சி22 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தீபாவளி ஸ்பெஷல்.. மறைந்திருக்கும் திறமை" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Daaaaaaaiiiiiii https://t.co/sBF97I7UOO
— venkat prabhu (@vp_offl) October 22, 2022
- நாகசைதன்யா தற்போது என்சி22 படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

என்சி22 படக்குழு
மேலும், இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.

என்சி22 படக்குழு
என்சி22 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் மைசூரை சுற்றியுள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
And it's wrap for #NC22 Major Schedule in Mysore 🔥
— Srinivasaa Silver Screen (@SS_Screens) October 21, 2022
Our team completed filming in the beautiful locales of Mysore ❤️🔥@chay_akkineni @vp_offl @IamKrithiShetty @thearvindswami @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @SS_Screens @srkathiir @rajeevan69 @abburiravi #VP11 pic.twitter.com/TPiF86TsNM
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் படம் என்சி22.
- இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

நாக சைதன்யா - வெங்கட் பிரபு
மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் படக்குழு மதுக்கடை செட் ஒன்று அமைத்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

என் சி 22
பின்னர் அந்த செட் அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படக்குழு மேலுகோட் பகுதியில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கும் பொழுது மதுக்கடை செட் அமைத்து காட்சிகள் படமாக்கப்படவுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
- மன்மத லீலை படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கி வரும் படம் என்சி22.
- இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

என்சி 22
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.

என் சி 22 படப்பிடிப்பு
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இதனை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
#NC22 in full swing #mysore #shooting #filmmaking #cauvery #vp11 @chay_akkineni @SS_Screens @srinivasaaoffl @srkathiir pic.twitter.com/V2X2K2PT9x
— venkat prabhu (@vp_offl) September 27, 2022
- மன்மத லீலை படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கி வரும் படம் என்சி22.
- இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
'மாநாடு', 'மன்மத லீலை' போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

என்சி22 படக்குழு
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.

என்சி22 போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
With all ur love and blessings beginning my next #VP11 tomorrow with @chay_akkineni #NC22 @SS_Screens YES the shoot begins tomorrow @ilaiyaraaja @thisisysr pic.twitter.com/0ugXmSgDRD
— venkat prabhu (@vp_offl) September 20, 2022
- நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்கள் கடந்த ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.

சமந்தா - நாக சைதன்யா
இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா ஒரு ஹாய் சொல்லிவிட்டு, கட்டிப்பிடிப்பேன் என்று பேசியுள்ளார்.
மேலும், அவர் கையில் இருக்கும் டாட்டூ பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அது தன் திருமண நாள் என்றும் அந்த டாட்டூவை அழிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
- இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.
- இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

லால் சிங் சத்தா
இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் நாக சைதன்யா பேசியதாவது, ''நானும் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் தான். லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்காகவும், அதனை விளம்பரப்படுத்துவதற்காகவும் சென்னைக்கு வருகை தருவதை மகிழ்ச்சியான தருணம் என நினைக்கிறேன். இந்தத் திரைப்படம் என்னுடைய கலை உலக பயணத்தில் முக்கியமான திரைப்படம்.

லால் சிங் சத்தா
ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குனர் அத்வைத் சந்தன் மற்றும் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான அமீர்கான் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இணைந்து ஒரு நேர்த்தியான படைப்பை, உங்களுக்காக ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று வழங்குகிறோம். திரையரங்கத்திற்கு சென்று கண்டு களித்து ஆதரவு தர வேண்டுகிறேன்" என்று பேசினார்.
- இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ள படம் லால் சிங் சத்தா.
- இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

லால் சிங் சத்தா
லால் சிங் சத்தா படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ராணுவ அதிகாரி பாலராஜு வேடத்தில் நாக சைதன்யா நடித்திருக்கிறார். இதுவரை இந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நாக சைதன்யா இந்தப்படத்தில் நடித்ததற்கான காரணம் பற்றி கூறியதாவது, நான் சென்னையில் வளர்ந்து ஐதராபாத்தில் குடியேறினேன். எனவே, எனது இந்தி சிறந்ததாக இல்லை. நான் நீண்ட காலமாக அதைப் பற்றி ஒருவித பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறேன். அதனால்தான் சில சமயங்களில் இந்தி படங்களில் வாய்ப்பு வந்தவுடன் விலகிவிட்டேன்.

நாக சைதன்யா
உண்மையில், நான் 'தென்னிந்தியன்' என்று அவர்களிடம் சொன்னபோது, மக்கள் இருமுறை யோசித்திருக்கிறார்கள். லால் சிங் சத்தா படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் வடக்கே செல்லும் தென்னிந்தியப் பையனாக நான் நடிக்கிறேன், எங்கள் பயணம் அங்கிருந்துதான் தொடங்குகிறது. நான் பேசும் விதத்தில் தென்னிந்தியா சாயல் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
நான் படத்தில் இந்தி பேசுகிறேன், ஆனால் நான் ஒரு தெலுங்கு வார்த்தையை பேசுவது போல இந்தியை பயன்படுத்தினேன். ஒரு தெலுங்கு சுவையை கொண்டு வருவதற்காக சில வார்த்தைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைத்துள்ளோம் என்றார்.
- நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்கள் கடந்த ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றனர். அவர்கள் பிரிவுக்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை. இருவரையும் மீண்டும் ஒன்று சேர்க்க பல முயற்சிகள் நடந்தும் வெற்றி பெறவில்லை.

சமந்தா - நாக சைதன்யா
இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் கோபமான நாகசைதன்யா கூறும்போது, "எனது சொந்த வாழ்க்கையை பற்றி பேசுவதை கேவலமாக நினைக்கிறேன். நான் ஒரு நடிகன். எனது நடிப்பை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையை பற்றி மற்றவர்கள் பேசுவதை விரும்பவில்லை. சினிமா வாழ்க்கையை விட நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையைத்தான் பரபரப்பாக்குகிறார்கள். சினிமா துறையில் நான் சாதித்ததை பற்றி யாரும் பேசுவது இல்லை.

சமந்தா - நாக சைதன்யா
எங்கள் திருமண வாழ்க்கை முடிந்து போன அத்தியாயம். அதை நானும், சமந்தாவும் அறிக்கையாக வெளியிட்டோம். அது குறித்து இப்போது புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் வழி அவருடையது. என் வழி என்னுடையது. இந்த விஷயத்தில் இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம்" என்றார்.
- நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்கள் கடந்த ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்விற்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமந்தா -நாக சைதன்யா
இந்நிலையில், நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த ஹைதராபாத் வீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். சமந்தா - நாக சைதன்யாவின் பிரிவிற்கு பிறகு அவர்களின் வீடு விற்கப்பட்டது.
இதையடுத்து நடிகை சமந்தா தற்போது அந்த வீட்டை வாங்கியவரிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அந்த வீட்டில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
- இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள படம் தேங்க் யூ.
- இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் என்சி22 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார்.
தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. படக்குழு முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.

தேங்க் யூ
இதையடுத்து, இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள படம் 'தேங்க் யூ' . இந்த படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தேங்க் யூ' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை.

சமந்தா - நாக சைதன்யா
இதையடுத்து இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 என்கிற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை சமந்தா கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கரண் ஜோகர் - சமந்தா
அதில் திருமண வாழ்க்கை குறித்து கரண், சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா திரைப்படங்களில் நீங்கள் திருமண வாழ்க்கையை காட்டிய போது அது நன்றாக இருந்தது. ஆனால், உண்மையில் கே.ஜி.எப் போன்றுதான் திருமண வாழ்க்கை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.