search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் சிங்வி"

    • வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.
    • ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் அல்லது, அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை, ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் தெலுங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் மனு சிங்வி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு நிறுவனத்தையும் இழிவுபடுத்தி, மதிப்பை குறைத்துள்ளது.

    கவர்னர்கள் இரண்டாவது தலைமை நிர்வாகியாக அல்லது ஒரே உறையில் இரண்டு கத்தியாக செயல்படும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.

    கவர்னராக இருப்பவர் முதலமைச்சருக்கு சவாலாகவோ, அச்சுறுத்தலாகவோ இருந்தால் கீழே இறங்க வேண்டியது கவர்னர்தான் . ஏனென்றால், முதலமைச்சர் யார்? என்பதற்குத்தான் தேர்தல் நடக்கிறது. கவர்னர் யார்? என்பதற்கு அல்ல

    இறுதியில் நீதிமன்றத்திற்குச் சென்று மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என கவர்னர் கூறுகிறார். ஆட்சி பாதிக்கப்படுகிறது. முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதே கோவத்தில் ஒரே உறையில் இரண்டு கத்தியாக மற்றொரு தலைமை நிர்வாகி போல் கவர்னர் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

    • தெலுங்கானா மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த கேஷவ் ராவ் பதவியை ராஜினாமா செய்தார்.
    • செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர் கேஷவ ராவ். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. செப்டம்பர் 3-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி அபிஷேக் சிங்வியை வேட்பாளராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மாறி வாக்களித்ததால் தோல்வியை தழுவினார்.

    கேஷவ ராவ் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அபிஷேக் சிங்வி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதற்கு போதுமான எம்.எல்.ஏ.-க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.

    • பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுகிறார்.
    • மத்திய அமலாக்கத்துறையில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை?.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில் ராகுல் காந்தியிடம் மொத்தம் 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

    பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

    மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

    ×