என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகர பஸ்"

    • கட்டணம் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய பஸ்களை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் ‘பிங்க்’ நிறம் முன் மற்றும் பின்பகுதியில் பூசப்பட்டுள்ளது.
    • கட்டணம் இல்லாமல் பயணிக்க கூடிய இலவச பஸ் எது என்பதை வயதான பெண்கள் கூட கண்டு பிடித்து ஏறிவிடுகிறார்கள். தினமும் 10.5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்தது.

    இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் செலவீனத்தை அரசு மாதந்தோறும் கணக்கிட்டு வழங்கி வருகிறது.

    சென்னையில் 1559 சாதாரண பஸ்களில் பெண்கள் தற்போது கட்டணமின்றி பயணம் செய்து வருகிறார்கள். இத்திட்டம் தொடங்கப்பட்டபோது குறைந்த அளவில் தான் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஆனால் படிப்படியாக கூட்டம் அதிகரித்ததால் பஸ்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டது. தொடக்கத்தில் 5 லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்த நிலையில் படிப்படியாக அதிகரித்து தற்போது 11 லட்சத்தை எட்டியுள்ளது.

    தினமும் சராசரியாக 10.5 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள்.

    இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில்,

    கட்டணம் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய பஸ்களை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் 'பிங்க்' நிறம் முன் மற்றும் பின்பகுதியில் பூசப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற பஸ்களில் ஏறும் சம்பவம் குறைந்து உள்ளது.

    கட்டணம் இல்லாமல் பயணிக்க கூடிய இலவச பஸ் எது என்பதை வயதான பெண்கள் கூட கண்டு பிடித்து ஏறிவிடுகிறார்கள். தினமும் 10.5 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். கடந்த 16-ந்தேதி 11 லட்சம் பேர் அதிகபட்சமாக பயணித்து உள்ளனர் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாநகர பஸ்களில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என கருதுகிறது.
    • அதன்படி 3000 பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநகர பஸ்களின் பின்புறத்திலும், டிரைவர் இருக்கையின் பின்புறத்திலும் மட்டும் விளம்பரம் செய்ய அனுமதி உள்ளது.

    இதன் மூலம் குறைந்த அளவிலேயே வருவாய் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விளம்பரம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது.

    பஸ்சின் 2 பக்கமும், தனியார் விளம்பரம் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் அரசு பஸ்களில் 2 பக்கவாட்டியும் விளம்பரம் செய்யப்படுகிறது.

    அது போல சென்னை மாநகர பஸ்களில் விளம்பரம் செய்வதன் மூலம் வருவாயை மேலும் அதிகரிக்க முடியும் என கருதுகிறது. அதன்படி 3000 பஸ்களில் விளம்பரம் செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    இது தவிர 500 பஸ்களில் பயணிகள் இருக்கையின் பின்புறம் 'ஏ4' அளவில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இருக்கைகளில் விளம்பரம் செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதற்கு உள்ள வரவேற்பை தொடர்ந்து மேலும் 1000 பஸ்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படும் என்று மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், ஏ.சி. பஸ், 2 மகளிர் பஸ்களில் பக்கவாட்டில் அரசு நிறுவன விளம்பரம் செய்யப்பட்டுள்ளன. இது போல தனியார் விளம்பரமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் அடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடும் போது இடையிடையே தனியார் தொழில் சார்ந்த விளம்பரம் செய்யவும் முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்படும் என்றார்.

    • மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • விரைவில் சென்னையில் கூடுதல் பஸ்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு மொத்தம் 31 பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 3,454 பஸ்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. தினசரி 27.54 லட்சம் பேர் மாநகர பஸ்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்ட தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள் முழு அளவில் செயல்படத் தொடங்கி விட்டது. மேலும் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.

    இதனால் மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏராளமான மாணவ-மாணவிகள் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    மேலும் சாதாரண கட்டண பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களும் தற்போது அதிக அளவில் மாநகர பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    இதனால் காலை, மாலை நேரங்களில் மாநகர பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதையடுத்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

    புதிய வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே விரைவில் சென்னையில் கூடுதல் பஸ்கள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னையில் எந்தெந்த வழித்தடங்களில் புதிதாக பஸ்களை இயக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இப்பணி விரைவில் முடிவடையும். இதன் பின்னர் தேர்வு செய்துள்ள வழித்தடங்களில் எத்தனை பஸ்களை இயக்கலாம்? எவ்வளவு மக்கள் பயன் பெறுவார்கள்? எந்தெந்த பகுதிகளுக்கு பஸ் சேவை கிடைக்கும், பஸ்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை தயார் செய்து அரசுக்கு அளிப்போம். அரசு பரிசீலனை செய்து புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கும்" என்றார்.

    ×