search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியோர்கள்"

    • முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன்.
    • மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.

    அப்போது அனைவரும், இந்திய குடிமகன், குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவ ணைப்போடு பராமரித்தி டுவேன்.

    மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படு த்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன். உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்.

    பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்றவற்றில் முதியோர்களுக்கு முன்னு ரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள் மற்றும் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினை தடுத்திட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராபூ நடராஜமணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சம்மட்டிபுரத்தில் நாடார் இளைஞர் பேரவை சார்பில் முதியோர்களுக்கு உதவி வழங்கப்பட்டது.
    • அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத்தலைவருமான எஸ்.கே.மோகன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம், பேனா, முதியோர்க ளுக்கு சேலை வழங்கினார்.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மதுரை மேற்கு தொகுதி சம்மட்டிபுரம் கிளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சம்மட்டிபுரம் மீனாட்சி சுவீட்ஸ் ஸ்டாலில் நடந்தது.

    கிளைத்தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். பேரவையின் பொதுச் செயலாளர் வி.பி. மணி முன்னிலை வகித்தார்.

    மதுரை நாடார் உறவின்முறை பொதுச் செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத்தலைவருமான எஸ்.கே.மோகன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம், பேனா, முதியோர்க ளுக்கு சேலை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகரதலைவர் குமார், மேற்கு தொகுதி தலைவர் சிவக்குமார், பொருளாளர் பால்ராஜ், துணைத்தலைவர் தவசிலிங்கம், ஜெய்சங்கர், வினோத், மத்திய தொகுதி தலைவர் கார்த்திகை செல்வவம், கிழக்கு தொகுதி முருகேச பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.
    • சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.

    உடுமலை :

    ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவாகாத கார்டுதாரருக்கு பதிவேட்டில் கையொப்பம் பெற்று, ரேஷன் பொருள் வழங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் மாவட்டத்தின் பல கடைகளில் இத்தகைய உத்தரவு பின்பற்றப்படுவதில்லை.

    அதிகாரிகளும் மேலாய்வு நடத்தவில்லை.கைவிரல் ரேகை பதிவு செய்ய இயலாதவரின், ஆதார் பதிவுகளை அப்டேட் செய்ய வேண்டுமெனஅரசு உத்தரவிட்டுள்ளது.அதற்காக பயோமெட்ரிக் பதிவுகளை புதுப்பிக்கும் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது வழக்கமாக ஆதார் பதிவு நடக்கும் இடத்திலேயே, அப்டேட் பதிவு முகாம் நடப்பதாக அறிவிப்பு செய்கின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கார்டுதாரருக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்வதில்லை.அப்படியே தகவல் தெரிந்தாலும், நடமாட முடியாத மற்றும் பஸ்சில் சென்றுவர சிரமப்படும் முதியோர் என ஒவ்வொரு கிராமத்திலும் ஏராளமான கார்டுதாரர்கள், அப்டேட்செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு முறையும் நடக்கும் இம்முகாம்களால் பயன்பெறுவோர் எண்ணிக்கையை ஆய்வு செய்ய வேண்டும்.பொதுமக்கள் வசதிக்காக, ஆதார் அப்டேட்முகாம்களை தொலைவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நடத்தாமல் கூட்டுறவு சங்கங்கள் வாரியாக நடத்த திட்டமிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட முதியோர் சிலர் கூறியதாவது: -

    தாலுகா அலுவலகம் சென்றுவர முடியாததால், கைவிரல் ரேகை புதுப்பிக்க இயலாமல் தவிக்கிறோம். சிறப்பு முகாம் என்ற பெயரில், அந்தந்த இடங்களிலேயே பதிவு முகாம் நடக்கிறது.மாறாக சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை என வாரம் ஒருநாள் அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் ஆதார் பதிவு முகாம் நடத்தினால், பாதிக்கப்பட்டவர்களில் அதிகப்படியானவர்கள் பயன்பெறுவர்.மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளுடன் ஆலோசித்து தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர்.  

    ×