என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யராஜ்"

    • பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.
    • செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

    2022-ம் ஆண்டு முதல் கூடுதலாக 'மார்க்ஸ் மாமணி" விருதும் வழங்கி வருகிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தா ராமையா, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததிராய், து.ராஜா, குமரி அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காசி ஆனந்தன், ஆ.சக்தி தாசன், வை.பாலசுந்தரம், காதர்மொய் தீன், ஜவாஹி ருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இது வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    அந்தவரிசையில் 2025-ம் ஆண்டுக்கான வி.சி.க. விருதுகள் பெறும் சான்றோர் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.

    இந்த ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர்' விருதினை திராவிடப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கே.எஸ்.சலம், பெரியார் ஒளி விருதினை திரைப்படக் கலைஞர் சத்யராஜ்க்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம்.

    விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல் பின்வருமாறு:-

    அம்பேத்கர் சுடர்-கே.எஸ்.சலம், பெரியார் ஒளி-சத்யராஜ், திரைப்படக் கலைஞர். மார்க்ஸ் மாமணி-தியாகு பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், காமராசர் கதிர்-வெ.வைத்தி லிங்கம் முன்னாள் முதல்-அமைச்சர், புதுச்சேரி.

    அயோத்திதாசர் ஆதவன்-பா.ஜம்புலிங்கம், காயிதே மில்லத் பிறை-பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாக்கவி, செம்மொழி ஞாயிறு-அ.சண்முகதாஸ்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
    • படத்தின் டைடில் ஸ்டோரி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

    அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் டைடில் ஸ்டோரி வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சத்யராஜ் ஒரு புனைவு எழுத்தாளராக இருக்கிறார். இவர் சை ஃபை கதை எழுதி வருகிறார். அவரது உறையாடலில் தான் வீடியோ தொடங்குகிறது. ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் சுவாரசியம் எங்கே இருக்கிறது என்ற கேள்வியுடன் அந்த வீடியோ முடிகிறது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, இசை கே சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொள்கின்றனர்.

    • அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மெட்ராஸ் மேட்னி.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அறிமுக இயக்குநரான கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மெட்ராஸ் மேட்னி. இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அஷ்வத் மாரிமுத்து அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.

    இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு இளைஞன் பணியன் அணிந்துக் கொண்டு வீட்டு வாசலில் நிற்கிறான். அவன் வீட்டின் அருகில் உள்ள ஒரு கோவிலில் நாய் சிறுநீர் கழிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    படத்தின் ஒளிப்பதிவை ஆனந்த் ஜி கே, இசை கே சி பாலசரங்கன், படத்தொகுப்பு சதீஷ் குமார், கலை வடிவத்தை ஜாக்கி மேற்கொள்கின்றனர்.

    படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே என காட்டமாகத் தெரிவித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.

    • இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்காரகன்’.
    • இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் மோகன் டச்சு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'அங்காரகன்'. ஜூலியன் மற்றி, ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் திரைக்கதையை எழுதியுள்ளதுடன் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.


    அங்காரகன்

    இந்த படத்தில் டெரர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இதில் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    அங்காரகன்

    பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கு.கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கருந்தேள் ராஜேஷ் இந்த படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். 'அங்காரகன்' 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தாங்கள் தங்கள் மகள் திவ்யா ஈழத்தமிழர்களுக்கு ஆற்றி வரும் தொண்டினை அறிந்து பெற்ற தந்தை என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்பது இயற்கையே.
    • திவ்யாவின் தொண்டு பெருகட்டும் ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்.

    சென்னை:

    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார்.   இது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல வீடியோக்கள், கட்டுரைகளை அவர் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் ஈழத்தமிழர் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறார்.  

    நடிகர் சத்யராஜ் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  அந்த அறிக்கையில்,   இலங்கை நாட்டில் வடக்கு மாகாண பகுதியில் நெடுந்தீவு பசுமை பள்ளி, வடக்கு பசுமை சமுதாயம் என்கிற பெயரில் என் மகள் திவ்யாவும் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரகாசனும் இணைந்து ஒரு அற்புதமான திட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது  அங்குள்ள மக்களுக்கு உதவியாக இருக்கும்.  ஈழத்  தமிழர்களுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார் என்று குறிப்பிட்டு இருந்தார்.  

    சத்யராஜின் இந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து பழ.நெடுமாறன்.  எழுதி இருக்கும் கடிதத்தில், ஈழத் தமிழர் நலனுக்காக என் மகள் தொடர்ந்து தொண்டாற்றுவார் என்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    இலங்கையில் உள்ள நெடுந்தீவில் பசுமை பள்ளி பசுமை சமுதாயம் என்ற அமைப்புகளின் மூலம் ஈழத் தமிழர் குழந்தைகளுக்கு தொண்டாற்றி வரும் ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திர காசன் உடன் இணைந்து தங்களின் அருமை புதல்வி திவ்யா தொண்டாற்றி வருவதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.  

    தாங்கள் தங்கள் மகள் திவ்யா ஈழத்தமிழர்களுக்கு ஆற்றி வரும் தொண்டினை அறிந்து பெற்ற தந்தை என்ற முறையில் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்பது இயற்கையே. உங்களுக்கு பெருமையை பெற்று தருவது தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.  

    திவ்யாவின் தொண்டு பெருகட்டும் ஈழத் தமிழர் வாழ்வில் விடியல் பிறக்கட்டும். தங்களுக்கும் தங்கள் மகளுக்கும் என் பாராட்டும் வாழ்த்துக்களும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது.
    • இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    கோவை வ.உ.சி மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால சரித்திர வரலாற்று புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 14-ந் தேதி வரை நடக்க உள்ளது.


    சத்யராஜ் எழுதிய கருத்து

    இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்மந்தப்பட்ட இதுவரை யாரும் பார்த்திராத பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் 70 ஆண்டு கால பொது வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் ஆகியவற்றை இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரிய புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் இடம் பிடித்துள்ளன.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்யராஜ் இன்று தொடங்கி வைத்து அங்குள்ள வருகைப் பதிவில் தனது கருத்தையும் பதிவு செய்தார்.

    • இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை 2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஜாக்சன் துரை 2' திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக பிரிட்டிஷ் கால செட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


    • மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய நிகழ்ச்சியில் விஜய் பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
    • அப்பொழுது பெரியார், அம்பேத்கர், காமராஜரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று விஜய் பேசியிருந்தார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், நேற்று முன்தினம் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.



    இந்த நிகழ்வு குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இது குறித்து அவருடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது நல்ல விஷயம், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு தெரியாது; பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை முன்னுதாரனமாக வைத்து அவர் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜாக்சன் துரை 2’.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்நிலையில், 'ஜாக்சன் துரை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்யராஜ் மாஸாக கண்ணாடி அணிந்திருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜாக்சன் துரை 2'.
    • இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடிக்கின்றனர்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஜாக்சன் துரை 2 போஸ்டர்

    1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். 'ஜாக்சன் துரை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது சிபி சத்யராஜின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. குதிரை மீது சிபி சத்யராஜ் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ்.
    • இவரது தாயார் நாதாம்பாள் இன்று காலமானார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவரது தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.


    நாதாம்பாள் காளிங்கராயர்- சத்யராஜ்

    நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94). இவர் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நாதாம்பாள் காளிங்கராயர் இன்று  மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

    ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ், தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தியறிந்து கோவை விரைந்துள்ளார்.

    ×