என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்சேதுபதி"
- போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார்.
- முதல் வார எவிக்ஷனில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கடந்த 6ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனில், புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு, இரண்டாவது வார எவிக்ஷன் என ரசிகர்களை எப்போதும் பரபரப்பாக வைத்திருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளானது.
பிறகு, முதல் வாரத்தின் இறுதியில் ரவீந்திரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், 2வது வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று நடந்தது. அதன்படி, இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் வி.ஜே.விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெப்ரி உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர்.
இவர்களில் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் அர்னவ் வெளியேற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’.
- இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகி வருவதாக தகவல் வெளியானது.

இடம் பொருள் ஏவல்
இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டது, பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டிருந்தார்.

இடம் பொருள் ஏவல்
இதைத்தொடர்ந்து சமீபத்தில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு விஜய் சேதுபதி மீது மகா காந்தி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
- இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த ஆண்டு மகா காந்தி என்பவர் நடிகர் விஜய் சேதுபதி தன்னை பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கியதாக சென்னை , சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அதில், நான் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது அவரை பாராட்டி கைக்குழுக்கிய போது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி பொதுவெளியில் தன்னை இழிவுப்படுத்தியதாகவும் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

விஜய் சேதுபதி
இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் சேதுபதிக்கு சம்மன் அனுப்பியது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
- விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், ஒரு மாத திருமண நாளை கொண்டாடினர்.
- தற்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், அவர்கள் தங்களது ஒரு மாத திருமண நாளை இன்று கொண்டாடினர். சமீபத்தில் நடிகை நயன்தாராவை மணந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அவர்களது திருமண விழாவில் ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜூன் 9ஆம் தேதி, மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இந்து முறைப்படி அவர்களது திருமணம் நடந்தது. இந்த ஜோடி தங்கள் ஒரு மாத ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், விக்னேஷ் தனது சமூக ஊடக பதிவில் இந்த படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள், இந்த நட்சத்திர ஜோடியின் திருமண விழாவில் கலந்து கொண்ட படங்களைப் பகிர்ந்து கொண்ட விக்னேஷ் சிவன், சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:- "இதற்கு மேல் யார் என்ன கேட்க முடியும்! எங்கள் திருமணத்தின் போது இந்த அடக்கமான, கனிவான, அழகான மற்றும் அற்புதமான மனிதர் எங்களுடன் இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன்! பாட்ஷாவும் அவருடனான நேரமும்! பேரின்பம்! பாக்கியம்.

ரஜினிகாந்த் சார் - எங்கள் திருமணத்தை மிகவும் நேர்மறை மற்றும் நல்லெண்ணத்துடன் அவரது மதிப்புமிக்க வருகையால் ஆசீர்வதித்தார். எங்கள் சிறப்பு நாளின் ஒரு மாத நிறைவு விழாவில் சில சிறந்த தருணங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், மோகன் ராஜா, நடிகை ஷாலினி அஜித், நடிகர் சூர்யா-ஜோதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சரத் குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அவர்கள் தங்கள் திருமணத்திற்கு அழைத்திருந்தனர்.
- இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “மாமனிதன்”.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "மாமனிதன்".
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி - காயத்ரி
"மாமனிதன்" திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவருக்குமான படமாக "மாமனிதன்" இருப்பதால், ஒருமுறையாவது இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
சமீப காலமாக வந்த படங்களில், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக "மாமனிதன்" இருப்பதால், பெண்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வருகிறது. இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டுள்ளார்.