என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெங்களூரு ரெயில்"
- பெங்களூரு ரெயில் நிலையத்தில் புதிய சரக்கு ெரயில் முனையம் அமைக்கும் பணி நடப்பதால் உதய், இன்டர்சிட்டி ரெயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
- மறுமார்க்கமாக 29, 30, 31-ந் தேதி பெங்களூருவுக்கு பதில் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.
திருப்பூர்:
பெங்களூரு ரெயில் நிலையத்தில் புதிய சரக்கு ெரயில் முனையம் அமைக்கும் பணி நடப்பதால் உதய், இன்டர்சிட்டி ெரயில் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.அறிவிப்பின்படி எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12678) இன்று, நாளை 29 மற்றும் 30ந்தேதி ஆகிய 3நாட்கள் சேலம் வரை மட்டும் இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர், பெங்களூரு ெரயில் நிலையங்களுக்கு செல்லாது. மறுமார்க்கமாக 29, 30, 31-ந் தேதி பெங்களூருவுக்கு பதில் சேலத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும்.
கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) கிருஷ்ணராஜபுரம் வரை மட்டும் இயக்கப்படும்.பெங்களூரு செல்லாது. வருகிற 31-ந் தேதி, கோவை - லோகமான்யதிலக் (மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் (எண்:11014) தர்மபுரி, ஓசூர், பெங்களூரு நிலையங்களுக்கு பதில், திருப்பத்தூர், பங்காருபேட்டை, கிருஷ்ணாபுரம் வழியாக ஏலங்கா நிலையம் செல்லும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கூரியர் மூலமாக கஞ்சா பார்சலில் அனுப்பப்பட்டு விற்பனை
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்வதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பலரது வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ள னர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு வதன் காரணமாக வெளியூர்களி லிருந்து கஞ்சா மற்றும் குட்கா புகையிலை கொண்டு வருவது கட்டுப்படுத்தப்ப ட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கூரியர் மூலமாக கஞ்சா பார்சலில் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கூரியர் நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்கவும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனியப்பன், குமார்ராஜ் ஆகியோர் பெங்களூருரில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொ ண்டனர்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டபோது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகப்ப டும்படியாக 4 பேக்குகள் இருந்தது. போலீசார் அந்த பேக்குகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பேக்கில் இருந்த 36 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். புகையிலையை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்