search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் கொள்முதல் விலை"

    • ஆவினின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்து இருக்கிறது.
    • தினமும் ஒரு லட்சம் லிட்டர் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் அதிகாரிகளின் மாத ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்தியில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆவினின் பால் கொள்முதல் 4 லட்சம் லிட்டர் அதிகரித்து இருக்கிறது. விற்பனையை பொறுத்தவரையில் சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் கூடியுள்ளது. இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதுபோல நிர்வாகத்திலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

    முதல் முறையாக மின்சார செலவை குறைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் மூலம் கடந்த மாதம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 500 யூனிட்டையும், பணத்தின் மதிப்பில் ரூ.25 லட்சத்தையும் ஆவினுக்கு மிச்சப்படுத்தி இருக்கிறோம். பால் கொள்முதலுக்கான பணத்தை தாமதமாக கொடுத்து வருவதாக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது. இப்போது வாரம் ஒரு முறை பணம் அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அவர்களின் பால் தரத்தை பார்த்து, அதே இடத்தில் விலையை நிர்ணயம் செய்யும் முறை 60 சதவீதம் நிறைவேற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள 40 சதவீதத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2 லட்சம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு கடன் மற்றும் மானியத்தை வங்கிகள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தினமும் ஒரு லட்சம் லிட்டர் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் தகவல் தவறானது. தமிழ்நாட்டிலேயே பாலின் தேவை அதிகமாக உள்ளது. நமக்கு தேவையான பாலை குறைந்த விலையில் நுகர்வோருக்கு வழங்குவதுதான் நம்முடைய நோக்கம். நம்முடைய தேவைக்கு மிகுதியாக பால் கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில் வெளி மாநிலங்களுக்கு பால் விற்பனை செய்யப்படும்.

    அதேபோல், பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையையும் நிறுத்த சொல்லியிருப்பதாக வெளியாகும் தகவலும் உண்மை இல்லை. அந்த பாலை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதுதொடர்பாக ஆய்வு செய்யத்தான் சொல்லியிருக்கிறோமே தவிர, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தவில்லை.

    பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆவின் பால் பாக்கெட் மிகவும் குறைவான விலையில்தான் விற்கிறோம். மற்ற பால் நிறுவனங்களைவிட ரூ.10 முதல் ரூ.15 வரை குறைவாகவே விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சருடன் நிச்சயம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆவின் தயாரிப்பு பொருட்களின் தரம், சுவையை அதிகரித்து உள்ளோம். வெண்ணெய், நெய் ஆகியவற்றில் தட்டுப்பாடு இருக்கிறது. வெளி இடங்களில் வாங்கி விற்பனை செய்வதை குறைத்து, உள்ளூரிலேயே வாங்கி விற்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் பால் உற்பத்தியாளர்களுடன் ஆவின் நிர்வாகம் கூட்டு சேர்ந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.
    • ஆவின் நிர்வாகம் தனியார் மயமாக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்ட பந்தலிலேயே சமையல் செய்து, சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அனுப்பட்டி பொதுமக்கள் கூறியதாவது:-

    அனுப்பட்டி கிராமத்தில் உள்ள இரும்பு உருக்காலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து ஆலையை மூட வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த உருக்காலையை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடஉள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மாட்டுத்தீவனங்கள் விலை அதிகரித்து விட்டது.
    • தற்போது ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32-க்கும், எருமைப்பால் ரூ.41-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தி வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தி சங்கத்தினர் நக்கலப்பட்டியில் மதுரை-தேனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் மாதரை மற்றும் பெரிய செம்மெட்டுப்பட்டி ஆகிய இடங்களிலும் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அவர்கள் பசுமாடுகளுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பெருமாள் தலைமையில் மாவட்டத்தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் நடராஜன், மகேந்திரன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கை நிறைவேற வலியுறுத்துவோம் என்று போலீசார் உறுதியளித்தனர். அதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர்.

    இதுபற்றி பால் உற்பத்தியாளர்கள் கூறும்போது, மாட்டுத்தீவனங்கள் விலை அதிகரித்து விட்டது. தற்போது ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32-க்கும், எருமைப்பால் ரூ.41-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை எங்களின் வாழ்வாதாரத்தை காப்பதாக இல்லை.

    தற்போது ஒரு தண்ணீர் பாட்டில் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் பாலுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    • அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது.
    • அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.

    மடத்துக்குளம்:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக பால் உற்பத்தி தொழில் உள்ளது. மாவட்டத்தில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஆவின் நிறுவனத்திற்கும், தனியார் பால் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.தமிழக அரசு கடந்த 2019 ஆகஸ்டு 19ல் பால் விலையை உயர்த்தியது. அதற்கு பின் 4 ஆண்டாக பால் விலை உயர்த்தாத நிலையில் உற்பத்தி செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இது குறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    அரசு பால் கொள்முதல் விலையை 4ஆண்டுக்கு முன் குறைந்தளவு மட்டுமே உயர்த்தியது. அப்போது, கொழுப்புச்சத்து 4.3, புரதச்சத்து 8.2 உள்ள பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக விலை அறிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு லிட்டருக்கு 27 முதல் 29 ரூபாய் வரை மட்டுமே கிடைத்து வருகிறது.4 ஆண்டுக்கு முன் மாட்டுக்கு வழங்கப்படும் கலப்புத்தீவனம் விலை கிலோ ரூ. 12 ஆக இருந்தது. தற்போது 24 ரூபாயாக உயர்ந்துள்ளது.பருத்தி ஒரு கிலோ 20 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், மக்காச்சோளம் மாவு 15 ரூபாயாக இருந்தது 30 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

    புண்ணாக்கு ஒரு கிலோ 30 ரூபாயாக இருந்தது தற்போது 50 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் ஒரு ஏக்கர் சோளத்தட்டு 5 ஆயிரமாக இருந்தது 15 ஆயிரமாகவும், வைக்கோல் ஒரு கட்டு 30 ரூபாயாக இருந்தது, தற்போது 100 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஆட்கள் கூலி, மருந்து, பராமரிப்பு, தீவனம் என உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் விலை 4 ஆண்டாக உயர்த்தப்படவில்லை.

    அரசு ஆவின் கொள்முதல் விலையை உயர்த்தினால் மட்டுமே தனியார் நிறுவனங்களும் விலை உயர்த்தும்.எனவே அரசு பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும். மாட்டு பால் லிட்டர் 42 ரூபாய்க்கும், எருமை பால் 51 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும்.கொள்முதல் செய்யப்படும் பாலுக்குரிய தொகையை உடனடியாக வழங்கவும், கால்நடை தீவனம் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும்.

    ஆவின் நிறுவனம் தினசரி பால் கொள்முதலை ஒரு கோடி லிட்டராக உயர்த்தும் வகையில் கட்டுமானம் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.ஆவின் நிறுவனம் கால்நடை டாக்டர்களை நியமிக்கவும் உற்பத்தியாளர்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    பருவமழை சீசனின் போது, கால்நடைகள் பராமரிப்பில், அதிக சிரமங்களை கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல்வேறு நோய்த்தாக்குதல் இந்த சீசனில் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது.இதனால் பால் உற்பத்தி குறைவதுடன் சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. எனவே, இத்தகைய சீசனில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கால்நடைத்துறை சார்பில் கிராமந்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.கால்நடை மருந்தகங்களில், மானியத்தில் உலர் தீவனம் வினியோகிக்கும் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    • கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை.
    • பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை.

    அவிநாசி:

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பேரவை கூட்டம் அவிநாசியில் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் முத்துரத்தினம் வரவேற்றார். வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட தலைவராக கொளந்தசாமி, செயலாளராக வேலுச்சாமி, பொருளாளராக பரமசிவம், துணை தலைவராக குமாரசாமி, துணை செயலாளராக சுப்பிரமணி உட்பட, 11 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.

    கூட்டத்தில்பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை, 2019ம் ஆண்டுக்கு பின்பு உயர்த்தப்படவில்லை. தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, கலப்புத் தீவனம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.சோளத்தட்டை, பசுந்தீவன உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால் பசும் பாலுக்கு லிட்டருக்கு 42 ரூபாய், எருமைப் பாலுக்கு 51 ரூபாய் கொள்முதல் விலையாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

    ஆவின் நிர்வாகம் போதியளவு மருத்துவர்களை நியமிக்காததால் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு காலமுறைப்படி கால்நடை மருத்துவர்கள் வருவதில்லை. கால்நடைகளுக்கு நோய் தாக்கும் போது, தனியார் மருத்துவர்களை நாடி, அதிக தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.திருப்பூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி செய்து தர வேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ×