என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் தொடர்"

    • ஜீ தமிழ் தொலைக்காட்சி மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
    • இந்த தொடர்கள் ஜூலை 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

    ஜீ தமிழ் தொலைக்காட்சி, கதை சார்ந்த டிவி தொடர்களை ஒளிபரப்புவதில் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இப்போது பிரதான நேரத்தில் மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் தமிழ் குடும்ப மகளிரை இதயபூர்வமாக கவரும் கதைக்களம் கொண்டவையாகும்.

    முதல் முறையாக ஒரு மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையிலான அற்புதமான உறவை வெளிப்படுத்தும் குடும்ப நாடகமாக அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடர் இருக்கும். இரண்டாவது குடும்ப நாடகம் மாரி, இந்த இரண்டு தொடர்களும் ஜூலை 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.


    ஜீ தமிழ் ஊடக சந்திப்பு

    மூன்றாவது தொடரான மீனாக்ஷி பொண்ணுங்க என்ற தொடர், ஒரு அம்மா அவரது மூன்று மகளைப் பற்றியதாகும். இது விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த மூன்று தொடர்கள் ஒளிபரப்பாவது தொடர்பான அறிவிப்பை ஜீ தமிழ் தொலைக்காட்சி ஊடக சந்திப்பின்போது வெளியிட்டுள்ளது.

    இதில் மாரி மற்றும் அமுதாவும் அன்னலக்ஷ்மியும் தொடரில் பங்கேற்ற நடிகர், நடிகையர்களும் பங்கேற்றனர். இந்தத் தொடர்களை பிரபலப்படுத்த ஜீ தொலைக்காட்சி வாங்க பார்க்கலாம் - இது நம்ம நேரம் என தலைப்பிட்டுள்ளது. இதில் நடிகை சினேகா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் சங்கீதா ஆகியோர் ஒவ்வொரு தொடரின்போதும் நேரலையில் உரையாடி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

    ×