search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் அழுத்தம்"

    • 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்கபட்டது.
    • புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரில் மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் குறைந்த மின் அழுத்தம் இருந்தது. இதை போக்குவதற்கு புதிதாக இரண்டு 100 கே .வி .ஏ. மின் மாற்றிகள் அமைக்கபட்டது.

    இந்த புதிய மின்மாற்றி களை நகர் மன்ற தலைவர் புகழேந்தி இயக்கி வைத்தார். விழாவில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர் ரவிக்குமார், இள மின் பொறியாளர் அன்பரசன் மனோகரன் மற்றும் மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மின் மாற்றி மூலம் சீரான மின் அழுத்தம் கிடைக்கும்.

    இதே போல் 5 புதிய 100 கே .வி. .ஏ மின் மாற்றிகள் குறைந்த மின் அழுத்தத்தை போக்க ஆயக்காரன்புலம் பஞ்சநதிகுளம் கிழக்கு, துளசியாபட்டினம், கற்பக நாதர் குளம், பஞ்சநதிகுளம் மேற்கு ஆகிய பகுதிகளில் இயக்கி வைக்க பட்டது.

    குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்யும் பொருட்டு வேதாரண்யம் பகுதியில் 257 மின் மாற்றிகள் இயக்கி வைக்கபட்டுள்ளதாக செயற்பொறியாளர் சேகர் தெரிவித்தார்.  

    • ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.
    • போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ மீது உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.

    ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×