என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி லீக் போட்டி"

    • தமிழ்நாடு மின்வாரிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அண்ணா நினைவு கிளப்பை தோற்கடித்தது.
    • மற்றொரு ஆட்டத்தில் ஹபி புல்லா நினைவு கிளப் 9-1 என்ற கோல் கணக்கில் அடையார் யங்ஸ்டர்ஸ் அணியை வென்றது.

    சென்னை:

    சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் முதலாவது டிவிசன் ஹாக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு மின்வாரிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் அண்ணா நினைவு கிளப்பை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஹபி புல்லா நினைவு கிளப் 9-1 என்ற கோல் கணக்கில் அடையார் யங்ஸ்டர்ஸ் அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் ஏர் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் யாசின் ஸ்போர்ட்ஸ் கிளப்பை வீழ்த்தியது.

    • ஜிப் ஜான்சன் ஹாட்ரிக் கோல் அடித்து முத்திரை பதித்தார்.
    • தமிழக வீரர் கார்த்தி அடித்த கோல் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    ரூர்கேலா:

    8 அணிகள் பங்கேற்கும் ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது.

    சென்னையை மையமாகக் கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சூர்மா கிளப்பிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் (1-4) தோற்றது.

    2-வது ஆட்டத்தில் கலிங்கா லான்செஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் (6-5) வென்றது. 3-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராவை வீழ்த்தியது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4-வது ஆட்டத்தில் விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்ட கோனாசிகா அணியை நேற்று எதிர் கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 6-5 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்தை சேர்ந்த ஜிப் ஜான்சன் ஹாட்ரிக் கோல் அடித்து முத்திரை பதித்தார். அவர் 19, 33 மற்றும் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த போட்டி தொடரில் முதல் ஹாட்ரிக் இதுவாகும். அப்ஹரன் கதேவ் (15-வது நிமிடம்), நாதன் எபிரம்ஸ் (55), கார்த்தி செல்வம் (59) ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். தமிழக வீரர் கார்த்தி அடித்த கோல் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    இந்த வெற்றி மூலம் தமிழ்நாடு டிராகன்ஸ் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. டிராகன்ஸ் 9 புள்ளியுடன் இருக்கிறது. பெங்கால் டைகர்ஸ் அணியும் 9 புள்ளி பெற்றுள்ளது. கோல்கள் அடிப்படையில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. சூர்மா (7 புள்ளி), உ.பி. ருத்ராஸ் (6 புள்ளி) அணிகள் முறையே 3-வது, 4-வது இடங்களில் உள்ளன.

    தமிழ்நாடு டிராகன்ஸ் 5-வது போட்டியில் பெங்கால் டைகர்சை நாளை (10-ந்தேதி) எதிர்கொள்கிறது. 

    • சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் லீக் போட்டி எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
    • ஐ.ஒ.பி., இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரித்துறை உள்பட 15 அணிகள் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை ஹாக்கி சங்கம் சார்பில் சூப்பர் டிவிசன் லீக் போட்டி எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை (1-ந் தேதி) தொடங்குகிறது.

    இதில் ஐ.ஒ.பி., இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரித்துறை உள்பட 15 அணிகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன் தொடங்கி வைக்கிறார்.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையம்-வருமானவரித்துறை அணிகள் மோதுகின்றன. மேற்கண்ட தகவலை சென்னை ஹாக்கி சங்க செயலாளர் உதயகுமார் தெரிவித்தார்.

    ×