search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அர்ஜூன் தாஸ்"

    • லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
    • முஃபாசா : தி லயன் கிங் படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது.

    லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது.

    இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம். இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. முஃபாசா படத்தின் ஆங்கில ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    நடிகர்கள் அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன், ரோபோ சங்கர், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி ஆகியோரின் அட்டகாசமான குரலில் வெளியாகியுள்ள முஃபாசா படத்தின் தமிழ் ட்ரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    முஃபாசா : தி லயன் கிங் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு மகேஷ் பாபுவும் இந்தி ட்ரெய்லரில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு ஷாருக் காணும் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ஒன்ஸ் மோர்.
    • ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ் சிங்கிள் "மிஸ் ஒருத்தி" பாடல் வெளியானது.

    இந்நிலையில், ஒன்ஸ்மோர் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான "இதயம்" பாடல் வெளியானது.

    • அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. அப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் சில வாரங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.

    நடிகர் அஜித்தும் அவ்வப்போது செல்ஃபிகளையும், கார் ஓட்டுவது போல், வாங்குவது போல், ரேசிங் செய்வது போன்ற வீடியோகள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளார்.

    இத்திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவின அதை உண்மையாக்கும் விதமாக தற்பொழுது அர்ஜூன் தாஸ் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் " இன்னும் நான் சுரேஷ் சந்திரா சாரின் பிஆர்ஓ டீமில் இணைந்தது நியாபகத்தில் உள்ளது. நான் சென்னையிக்கு நடிக்க ஆசையாக வந்தப்போது அஜித் சாரின் PRO டீமில் தான் வேலை பார்த்துக்கொண்டே நடிப்பிற்கான வாய்ப்பை தேடலாம் என்று இருந்தேன். அஜித் சாரின் திரைப்படம் ப்ரோமோஷன் வேலைகளைப் பார்த்தது அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. நான் தான் வீரம் டீசரை ஆன்லை அப்லோட் செய்தேன்.

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு அஜித் சார் என்னை அழைத்து "நம்ம சீக்கிரம் ஒன்னா வொர்க் பண்ணலாம்" என்றார். அதேப்போல் இப்பொழுது நடக்கிறது நான் அவர் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கிறேன். இப்பதிவு உங்களுக்காக அஜித் சார், உங்களால் தான் இது நடந்தது. நன்றி. இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி படத்தின் தயாரிப்பாளரான மைத்திரி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி.

    அர்ஜூன் தாஸ் தற்பொழுது விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் படம்
    • மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடுக்கும் படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் மிஸ் ஒருத்தி பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

    இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒன்ஸ் மோர் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
    • இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என படக்குழு பெயரிட்டுள்ளது.

    தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கியது.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என படக்குழு பெயரிட்டு. அதற்கு டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. டைட்டில் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எகஸ் தளத்தில் வெளியிட்டார்.

    படத்தின் இசையை மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இதற்கு முன் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    டைட்டில் டீசர் மிகவும் அழகாக அமைந்துள்ளது . அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இருவரும் வேறு வேறு விருப்பத்தை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது நண்பர்களும் வெவ்வேறு விருப்பங்களுடன் உள்ளனர். இவர்களுக்கு நடுவே காதல் மலர்கிறது. என்பதே கதையின் அடித்தளமாகும்.

    திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.
    • 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் படமுடிப்பு முடிவடைந்துள்ளது.

    'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக இத்திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார்.

    இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில நேரங்களில் சில மனிதர்கள். படத்தை அறிமுக இயக்குனரான விஷால் வெங்கட் இயக்கினார்.
    • படத்திற்கு பாம்ப் என பெயர் வைத்துள்ளனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு அசோக் செல்வன், நாசர், மணிகண்டன், அஞ்சு குரியன், ரித்விகா மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படத்தை அறிமுக இயக்குனரான விஷால் வெங்கட் இயக்கினார். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து இயக்குனர் விஷால் வெங்கட் அடுத்ததாக அர்ஜூன் தாஸ் நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். படத்திற்கு பாம்ப் என பெயர் வைத்துள்ளனர்.

    இப்படத்தில் அர்ஜூன் தாஸுடன் காளி வெங்கட், ஷிவாத்மிகா, நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தை சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து ஜெம்பிரியோ பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். பாம்ப் திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் பி.எம் ஒளிப்பதிவு மேற்கொள்ள , பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
    • அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌

    தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

    ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
    • ரொமான்டிக் வசனம் பேசுமாறு அர்ஜூன் தாஸிடம் கேட்டார்.

    கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அர்ஜூன் தாஸ். இவர் நாயகனாக நடித்த அநீதி, ரசவாதி போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து இவர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் நடிகர் அர்ஜூன் தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு வருகைதந்த அர்ஜூன் தாஸ்-க்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்களிடம் கைதி பட வசனத்தை அர்ஜூன் தாஸ் பேசினார்.

     


    இதைகேட்ட மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். பிறகு மாணவர்களின் கேள்விகளுக்கு அர்ஜூன் தாஸ் பதில் அளித்தார். அப்போது மாணவி ஒருவர் ரொமான்டிக் வசனம் ஒன்றை பேசுமாறு அர்ஜூன் தாஸிடம் கேட்டார். அதை கேட்ட அர்ஜூன் தாஸ் மேடையில் இருந்து கீழே இறங்கினார்.

    மாணவி இருந்த இடத்திற்கே சென்ற அர்ஜூன் தாஸ் அவரிடம் வாரணம் ஆயிரம் படத்தின் வசனத்தை பேசினார். இதை கண்டு அங்கிருந்த மாணவர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். தொடர்ந்து பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ் தனது அடுத்த படம் காதல் கதை கொண்ட ரொமான்டிக் திரில்லராக இருக்கும் என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
    • அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.

    தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    அதிதி நடிக்கும் அடுத்தப் படத்தில் தனெக்கென குரல் பாணியிலும் நடிப்பிலும் அசத்தும் அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.  இப்படம் இசை நிறைந்த காதல் கதை பின்னணியில் உருவாகவுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இப்படத்தை குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இசையை பிரபல மலையாள இசையமைப்பாளரான ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கவுள்ளார். 

    2022 ஆம் ஆண்டு வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரனவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஹிருதயம் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    அதிதி சங்கர் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்து இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். அர்ஜூன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் `ரசவாதி` திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார்.
    • கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ஒரு சித்த மருத்துவராக நடித்துள்ளார். ஒரு மருத்துவர் அவரது கோடை விடுமுறையை செலவிடுவதற்காக மலை கிராமத்திற்கு வருகிறார். அதன் பிறகு இவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசக்கூடிய படமாக இப்படம் அமைந்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா ஓடிடி தளம் வாங்கியுள்ளது. வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் ரசவாதி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'
    • அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது.

    டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'ரசவாதி'. மே 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ், "இதற்கு முன்பு பேசிய எல்லோருமே அவர்கள் கதாபாத்திரத்திற்காக நன்றி சொன்னார்கள். அதுபோலதான் எனக்கும் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார்."

    "தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்," என்று தெரிவித்தார்.

    இந்த படத்தில் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×