என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேஜிஎப்"
- டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகி வருகிறது
- மரங்கள் வெட்டப்பட்டது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் மூலம் பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்தவர் கன்னட நடிகர் யாஷ். கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது டாக்ஸிக் [TOXIC] என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இயக்கி வருகிறார் . இவர் ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை வைத்து இயக்கிய லையர்ஸ் டைஸ் 2 தேசிய விருதுகளை வென்றது.
இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பூஜை யுடன் தொடங்கப்பட்டது. இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக கர்நாடக தலைநகர் பெங்களூரு அருகே உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஹிந்துஸ்தான் மெசின் டூல் இடத்தில் நடைபெற்றுள்ளது. இது சாட்டிலைட் படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே ஆய்வு செய்த நிலையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவத்தார்.
அதன்படி தற்போது டாக்ஸிக் படத்தின் தயாரிப்பாளர்,ஹிந்துஸ்தான் மெசின் டூல் மேலாளர் ஆகியோர் மீது கர்நாடக வனத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்துவதில் தடை ஏற்பட்டதுடன் படக்குழுவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார்.
- சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் உறுதி செய்தார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூலை குவித்தது.
இந்நிலையில் சலார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகமான சலார்- Ceasefire கதை இரண்டாம் பாகத்தில் வர இருக்கும் வெயிட்டான சம்பவத்திற்கான முன்கதை போலவே அமைத்திருந்தது. இதற்கு மேலும் ஹைப் கொடுக்கும் அளவுக்கு மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதவாது பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ [மா- டோங் -ஸோக்] சலார் 2 படத்தில் இணைந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியான தி கேங்ஸ்டர் - காப் - அண்ட் தி டெவில் படதின்மூலம் உலக அளவில் அறியப்பட்ட டான் லீ ரியல் கேங்ஸ்டர் கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய நடிப்பை வெளிப்படுத்துபவர்.
சலார் படமும் கேங்ஸ்டர் கதைக் களத்துடன் நகரும் படம் என்பதால் டான் லீ வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சலார் 2 படத்தில் நடிப்பதைத் தனது இன்ஸ்ட்டாகிராம் ஸ்டோரி மூலம் டான் லீ தற்போது உறுதி செய்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ்.
- இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'கே.ஜி.எப்' படத்தில் நடித்தவர் நடிகர் யஷ். இவருக்கு என்று கர்நாடகாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதையடுத்து நேற்று அவரது 38-வது பிறந்த நாளை யொட்டி கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் உள்ள சுரங்கி என்ற இடத்தில் கட் அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி அனுமந்த ஹரிஜன் (21), முரளி நடவினமணி (20), நவீன்காஜி (19) ஆகிய 3 ரசிகர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த நிலையில் மின்சாரம் தாக்கி இறந்த ரசிகர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நடிகர் யஷ் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். உங்களின் அன்பை சமூக வலைதளங்களில் செல்போனில் காண்பித்தால் கூட போதும், மனதில் இருந்தால் போதும். கட் அவுட் வைத்து அதனை வெளிப்படுத்த வேண்டாம். இது போன்று எதிர்காலத்தில் யாரும் செயல்பட வேண்டாம் முற்றிலும் தவிர்த்து விடுங்கள் என்று அறிவுரையும் கூறினார்.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப்.
- இப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான படம் கேஜிஎஃப். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இதில் ராக்கி பாய் என்ற கதாப்பாத்திரத்தில் யஷ் நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. குறிப்பாக கேஜிஎஃப் இரண்டாம் பாகம் சர்வதேச அளவில் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் பெற்ற பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்ளும் ஜப்பானில் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக நடிகர் யஷ் வீடியோ பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
日本の皆さんこんにちは ??
— Hombale Films (@hombalefilms) July 10, 2023
Save the Date, #Japan! July 14th is the day!
We are thrilled to announce that the much-awaited release of #KGFChapter1 & #KGFChapter2 is happening in Japan for the FIRST time ever!
Experience the breathtaking journey of Rocky Bhai as he rises to… pic.twitter.com/Qyq67pyqNT
- இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இதில் ‘பாகுபலி’ நடிகர் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து 'சலார்' திரைப்படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் ஒரு புதிய யூனிவர்ஸை உருவாக்குகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதாவது, கே.ஜி.எப். இரண்டாவது பாகத்தின் கிளைமேக்ஸில் யஷ் சென்ற கப்பல் மீது அதிகாலை 5 மணிக்கு தான் தாக்குதல் நடக்கும் என்று சுட்டிக்காட்டும் ரசிகர்கள் இதன் தொடர்ச்சியாக 'சலார்' இருக்குமோ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'கே.ஜி.எப் -2'
- இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான பணியில் இயக்குனர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
கே.ஜி.எப்
இந்நிலையில், 'கேஜிஎப்-2' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவுற்றுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. அந்த பதிவில், 'கேஜிஎப் 2 மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை கலைத்துவமிக்க பயணத்தில் அழைத்து சென்றது. ரெக்கார்டுகளை தகர்த்தது. பார்வையாளர்களின் இதயங்களை வென்றது' என குறிப்பிட்டுள்ளது.
கே.ஜி.எப்
மேலும், இதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் 36-வது நொடியில் '1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்?' என அடுத்த பாகத்திற்கு ஹிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் -3' திரைக்கதை பணியில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கே.ஜி.எப் படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் யஷ்.
- இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எப். 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கே.ஜி.எப் படத்தின் 3ம் பாகம் எழுதும் பணியில் இயக்குனர் பிரசாந்த் நீல் தீவிரமாக இருந்து வருகிறார். இரண்டாம் பாகத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் கடத்தப்பட்ட தங்கத்தை கப்பலில் கொண்டு செல்வதுபோல் அடுத்த பாகத்திற்கான முன்னோட்டக் காட்சியை காட்டியிருப்பார்கள். இதனால் 3-ம் பாகம் முழுவதும் கடலில்தான் கதை நடப்பதாக காட்டப்போகிறார் என்பதுபோல் சொல்லியிருப்பார். கடலில் நடக்கும் சாகச கதை இன்னும் மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள்.
கே.ஜி.எப்
இந்நிலையில், கே.ஜி.எப். 3-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 2025-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இப்படம் 2026-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் ஐந்தாவது பாகம் முடிந்த பிறகு யஷ்ஷிற்கு பதில் வேறொரு ஹீரோவை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
- தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்.டி மியூசிக் என்கிற தனியார் நிறுவனம் தான் இந்த புகாரை கொடுத்துள்ளது.
ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
அது தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்துள்ளது.
நிறைய தொகை கொடுத்து கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் உரிமையை தாங்கள் வாங்கி உள்ளதாகவும், அதனை தங்களது அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடியோவில் பயன்படுத்தி உள்ளதால் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இயக்குனர் நீல் பிரசாத் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் கேஜிஎப்.
- இந்த படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார்.
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்து இரண்டு பாகங்களாக வெளியாகிய திரைப்படம் கேஜிஎப். பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய இந்தபடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் நடிகர் அவினாஷ் கேங்க்ஸ்டராக நடித்துள்ளார். இவர் பெங்களூரில் தனது பென்ஸ் காரில் ஜிம்மிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
அவினாஷ் - யஷ்
இந்த விபத்தில் காயமின்றி உயிர் தப்பித்துள்ள நடிகர் அவினாஷ் இது குறித்த பதிவு ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "நான் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. ஆனால் காலியான சாலையில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் என் கார் மீது மோதியது. அதன் தாக்கம் என் கார் பானட் கிழியும் அளவுக்கு இருந்தது. விபத்தில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டது" என பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்