search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வின்னர் 2"

    • இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
    • சுந்தர் சி பிறந்த நாளில் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

    இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு கூட்டணியில் வெளியான படம் "வின்னர்." கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அதன் காமெடி காட்சிகளால் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலமாக உள்ளது. இந்தப் படத்தில் வரும் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது.

    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுவது வழக்கம் தான். இதுபற்றி இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளனர். எனினும், வின்னர் 2 குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு சமீபத்தில் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சமீபத்தில் முடிந்த இயக்குநர் சுந்தர் சி பிறந்த நாளில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு வின்னர் பட கூட்டணி ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில், வின்னர் 2 பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பலர் வின்னர் 2 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 90-களின் காலக்கட்டத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகர் பிரசாந்த்.
    • இவர் நடித்து வெளியாகவுள்ள படம் அந்தகன்.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன்.

    இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.


    வின்னர்

    இதைத் தொடர்ந்து பிரசாந்த், வடிவேல் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததை அடுத்து வின்னர் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது.

    இந்நிலையில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு  நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கூறுகையில், "அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். இந்த தகவலினால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ×