என் மலர்
நீங்கள் தேடியது "சாயாவனம்"
- இவர் இயக்கியுள்ள 'மையா' படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
- 'சாயாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சௌந்தரராஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
மலையாள திரையுலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் அனில். முன்னணி மலையாள கதாநாயகர்களுடன் பணியாற்றியுள்ள இவரின் சமீபத்திய 'மையா' படம் இந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது 'வாழ்கண்ணாடி', 'இவர்', 'சந்திரோற்சவம்', 'குருஷேத்ரா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த தாமோர் சினிமா தயாரிக்கும் அடுத்த படத்தை அனில் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அனில் அறிமுகமாகிறார். இதில் 'கடைக்குட்டி சிங்கம்', 'தர்மதுரை', 'சுந்தரபாண்டியன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த சௌந்தரராஜா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சாயாவனம்
'சாயாவனம்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை எல்.ராமச்சந்திரன் கையாள்கிறார். மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார்.

சாயாவனம்
மேலும், இப்படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.