என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிங்கார சென்னை"
- மீன்களை கழுவுவதற்கா சாலைகள்?, நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி?
- லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக 9.97 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தை கட்டப்படுவதாக மாநகராட்சி தகவல்
சென்னை:
சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப்போகிறீர்கள்? என சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அத்துடன், மெரினா லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பான அறிக்கையை ஏப்ரல் 18ல் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.
'மீன்களை கழுவுவதற்கா சாலைகள்?, நடைபாதையை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்த அனுமதித்தது எப்படி? சாலை ஆக்கிரமிப்பை சகிக்கவும் முடியாது, சமரசமும் செய்யவும் முடியாது. சாலையில் ஆக்கிரமிப்புக்குத்தான் அனுமதிக்கப்படுகிறது. போக்குவரதுக்கு அனுமதிகக்ப்படுவதில்லை' என்றும் உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
லூப் சாலை மீன் வியாபாரிகளுக்காக 9.97 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தை கட்டப்படுகிறது என்றும், அவர்களின் வாழ்வாதாரம் கருதி போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலையின் மேற்கு பகுதியில் உள்ள உணவகங்களின் உரிமங்கள் ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளில் தொடர் பயன்பாட்டின் காரணமாகவும், பருவ மழையின் காரணமாகவும் ஒரு சில சாலைகளில் பள்ளங்களும், குழிகளும் ஏற்பட்டுள்ளன. பருவமழையின் காரணமாக, மாநகராட்சியின் சார்பில் இந்தச் சாலைகளில் ஜல்லிக்கலவை, தார்க்கலவை மற்றும் குளிர் தார்க்கலவை கொண்டு பள்ளங்களும், குழிகளும் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பருவமழை முடிவடைந்தவுடன் சேதமடைந்த சாலைகள் அனைத்தும் சீர்செய்யப்படும் என அறிவித்திருந்தார். மேலும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, சென்னையில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மேயரின் ஆலோசனையின்படி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள், 34 பேருந்து தார் சாலைகள், 63 உட்புற சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், 2 சிமெண்ட் கான்கிரீட் பேருந்து சாலைகள், 47 இன்டர்லாக் பேவர் பிளாக் சாலைகள் என 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.
மேம்படுத்தப்பட உள்ள சாலைகளின் விவரம் வருமாறு:-
திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.19.51 கோடி மதிப்பீட்டில் 233 உட்புற தார் சாலைகள் மேம்படுத்த 20 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.17.35 கோடி மதிப்பீட்டில் 34 பேருந்து சாலைகளை தார் சாலைகளாக அமைக்க 13 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் 63 உட்புறச் சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 4 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் 2 பேருந்து சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்க 2 சிப்பங்களாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி ஆகிய மண்டலங்களில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் 47 சாலைகள் பேவர் பிளாக்குகளை கொண்டு அமைக்கப்பட உள்ளன. இந்தப் பணிக்காக 4 சிப்பங்களாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
சாலை பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் 3.1.2023 அன்று திறக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் ரூ.16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ.4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டு திடல்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டன.
- பூங்காக்களில் குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், கழிவறை மற்றும் குடிநீர் வசதி உள்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
சென்னை:
சென்னையின் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.16.19 கோடி மதிப்பில் 42 பூங்காக்கள் மற்றும் ரூ.4.50 கோடி மதிப்பில் 11 விளையாட்டு திடல்கள் அமைக்க அனுமதி கோரப்பட்டன. அந்தவகையில் கடந்த செப்டம்பர் 29-ந்தேதி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதன்படி திருவொற்றியூர்-2, மாதவரம்-8, தண்டையார்பேட்டை-1, ராயபுரம்-1, திரு.வி.க. நகர் -3, அம்பத்தூர்-7, வளசரவாக்கம்-7, அடையாறு-3, பெருங்குடி-1, சோழிங்கநல்லூர்-9 என மொத்தம் 42 புதிய பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்த பூங்காக்களில் குழந்தைகள் விளையாட்டு பகுதி, திறந்த வெளியில் உடற்பயிற்சி கருவிகள், சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள், பாரம்பரிய மர வகைகள், கழிவறை மற்றும் குடிநீர் வசதி உள்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேபோல் திருவொற்றியூர்-5, ராயபுரம்-1, வளசரவாக்கம்-1, பெருங்குடி-2, சோழிங்கநல்லுர்-2 என மொத்தம் 11 இடங்களில் விளையாட்டு திடல்கள் அமையவுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட்டு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
- மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும்.
- நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்ற வேண்டும் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிக முக்கியமான இலக்குகளில் ஒன்றாகும்.
அவரது இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில் சென்னையை அழகுபடுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதற்கான பரிந்துரைகளை பல்வேறு துறைகளும் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் ரோப் கார் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. சென்னையில் எங்கெங்கு ரோப் கார் திட்டத்தை அமல்படுத்தலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அதில் மெரினா கடற்கரையில் ரோப் கார் இயக்கினால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இருக்கும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், என்ஜினீயர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.
சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேரு சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களை சந்தித்து பேசியபோது, புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதை ஏற்று சில கவுன்சிலர்கள் ரோப் கார் திட்டம் பற்றி தெரிவித்தனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் ரோப் கார் திட்டத்துக்கு விரிவான பரிந்துரை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் அமையும் ரோப் கார் திட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து நம்ம சென்னை செல்பி பாய்ண்ட் வரை அமைக்கப்படும் என்று தெரிகிறது. இந்த இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவு 3 கி.மீ. ஆகும். 3 கி.மீட்டருக்கு ரோப் காரில் செல்லும்போது சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இதை தவிர நேப்பியர் பாலத்தில் இருந்து ராயபுரம் ரெயில் நிலையம் பகுதி வரை ரோப் கார் இயக்கும் திட்டத்துக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் மீது ரோப் கார் இயக்கும் திட்டமும் உள்ளது. இவற்றில் முதலில் எந்த திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது என்பது பற்றி தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்