என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜினி"

    • கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
    • தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.

    தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே எந்திரன், சந்திரமுகி, விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.

    இந்த நிலையில் கஜினி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கஜினி படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் சூர்யா, நயன்தாரா, அசின், பிரதீப் ராவத், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

    தற்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி 2-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, ''கஜினி 2-ம் பாகம் குறித்து எனக்கு சில யோசனைகள் உள்ளன. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.

    சரியான நேரத்தில் 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம். கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாக்குவோம். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
    • இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையாக இது இருக்கும்

    கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி' "கத்தி' போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் 'எஸ்கே23' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.


    இந்நிலையில் 'SK23' படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆக்ஷன் ஜானர் படமாக இது இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் தனித்துவமான பல விஷயங்களை இந்த படத்தில் பார்க்க முடியும். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்காக அவரது உடல்மொழியில் கவனம் செலுத்த சிறப்புப் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். முதலில் மிருணாள் தாக்கூர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. ஆனால், ருக்மிணியின் வேறொரு படம் பார்த்தபோது மிருணாளை விட இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.
    • புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஆமீர் கான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் கவனம் செலுத்தி வரும் ஆமீர் கான் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.

    ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருக்கும் சித்தாரே ஜமீன் பர் படத்தில் ஆமீர் கான் ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆமீர் கான் நடிக்க இருக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், ஆமீர் கான் தமிழில் வெளியாகி, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கஜினி பட தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் மது மந்தெனாவிடம் பேசிய ஆமீர் கான், படத்தின் கருவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தமிழில் சூர்யா, அசின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான கஜினி திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. மேலும் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் வசூலை குவித்தது. அந்த வகையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உண்மையில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் படத்தின் மூலம் பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
    • இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்

    சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்காக சூர்யா எந்தவித சம்பளமும் பெறவில்லை என மாதவன் சமீபத்தில் கூறினார். இந்நிலையில், நடிகர் மாதவன் மற்றும் சூர்யா இருவரும் சமூக வலைதளத்தில் அவர்களின் நீண்டகால நட்பு மற்றும் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வந்தனர்.

    சூர்யா - மாதவன்

    அப்போது பேசிய மாதவன், " சூர்யா நடிப்பில் வெளியாகிய 'கஜினி' படத்தில் நடிப்பதற்கான முதல் வாய்ப்பு எனக்கு தான் கிடைத்தது. ஆனால் அந்தப் படத்தின் இரண்டாவது பாதி பிடிக்காததால் அந்த கதையை நிராகரித்து விட்டேன். தொடர்ந்து அந்தப் படத்தில் கமிட்டான சூர்யா, தன்னை வருத்திக்கொண்டு நடித்ததை பார்த்து நான் வியப்படைந்தேன்" என கூறினார்.

    ×