search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்கறி வியாபாரி"

    • சிவகாசி அருகே காய்கறி வியாபாரி வீட்டில் 16 பவுன் நகை கொள்ளை போனது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாமிநத்தம் ஜெம்நகரை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 36). இவர் அண்ணாநகர் காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கடைக்கு சென்று விட்டார். 2 மகள்கள் பள்ளிக்கு சென்று விட, மனைவியும் வீட்டை கூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மறுமணம் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடிக்கொண்டு தப்பினர்.

    வியாபாரம் முடித்து மாலையில் வீடு திரும்பிய கோவிந்தன் கதவு உடைக்கப்பட்டு நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சண்முகபிரபு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    கோபி கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து ராஜே ஸ்வரி ஏற்கனவே திருமண மான ஈரோட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி சண்முக பிரபு (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு கோபி கொளப்ப லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜே ஸ்வரி டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள தங்கை வீட்டுக்கு கோவில் திருவிழா விற்காக குடும்பத்துடன் வந்து தங்கினார்.

    இந்நிலையியில் டி.என்.பாளையத்தில் ராஜேஸ்வரி யின் தங்கை வீட்டில் நேற்று காலை அவர் மற்றும் அவரது கணவர் சண்முக பிரபு குடும்பத்துடன் வாசலில் அமர்ந்து டீ குடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது சண்முக பிரபுவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு அந்த பகுதியில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சண்முக பிரபுவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முக பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் சண்முகபிரபுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செல்வனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • இதையடுத்து அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, கருக்கன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வன் (55). இவரது மனைவி புஷ்பா (40). இவர்கள் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    செல்வனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

    உடனடியாக அவரை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த போது கடந்த மாதம் 25-ந் தேதி எலி பேஸ்ட்டை (விஷம்) தின்று விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து செல்வன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்ற மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்றார்.
    • முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளத்தை சேர்ந்தவர் தங்கரத்தினம் (43), காய்கறி வியாபாரி. இவர் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் பகுதியில் வியாபாரம் செய்ய சென்றார். அப்போது வசந்தாதேவி (73) என்ற மூதாட்டி இவரிடம் மொச்சைக்கடலை வாங்கி உள்ளார்.

    பணம் எடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது தங்கரத்தினமும் அவர் பின்னால் சென்று நகையை பறிக்க முயன்றார். அப்போது வசந்தாதேவி, ''திருடன் திருடன்'' என்று கூச்சலிட்டார். கூச்சல் சத்தத்தை கேட்ட உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வெளிகதவை பூட்டிவிட்டனர்.

    இதனால் தங்கரத்தினம் வசமாக சிக்கி கொண்டார். பின்னர் அவரை சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ்காரர்கள் முனிபாண்டி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கோர்ட்டு அழைத்து சென்று போலீஸ் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வந்தனர்.

    சிவகாசி-களத்தூர் சாலையில் அவர்கள் வந்த போது தங்கரத்தினம் தப்பிப்பதற்காக முனிபாண்டியின் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட போலீஸ்காரர் முனிபாண்டி மற்றும் பின்னால் வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த மணிவண்ணன் ஆகியோர் தங்கரத்தினத்தை பிடித்தனர். உடலில் காயங்களுடன் இருந்த தங்கரத்தினம் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பாக போலீஸ்காரர் முனிபாண்டி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அஸ்ரப் அலி யூசுப்புக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
    • அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை 

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் அஸ்ரப் அலி யூசூப் (வயது 34). காய்கறி வியாபாரி. இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் அஸ்ரப் அலி யூசூப்புக்கு காளம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இவர் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அஸ்ரப் அலி யூசூப்பின் மனைவிக்கு தெரிய வரவே அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது மனைவியை பிரிந்து கள்ளக்காதலி வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று கள்ளக்காதலி வீட்டில் இருந்த அஸ்ரப் அலி யூசூப் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பேரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஸ்ரப் அலி யூசுப் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
    • தினசரி மார்க்கெட் கடைகளை இடித்து புதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளை காலி செய்யச் சொல்லி உள்ளனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.சுமார் 100 ஆண்டு பழமை வாய்ந்த இந்த காய்கறி மார்க்கெட்டை இடித்து புதிய வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் ஆணையரிடம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை விவரம் வருமாறு:-

    தாராபுரம் நகராட்சி பழைய பஸ் நிலையம் தினசரி மார்க்கெட் கடைகளை இடித்துபுதுப்பிப்பதற்காக காய்கறி வியாபாரிகளைகாலி செய்யச் சொல்லி உள்ளனர். மாற்று ஏற்பாடாக பாதுகாக்கப்பட்ட இடம் காய்கறி வியாபாரிகளுக்கு ஒதுக்கவேண்டும். மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். புதிய வணிக வளாகம் கட்டிய பிறகு தற்போது கடையை நடத்தி வருபவருக்கே முன்னுரிமை அளித்து பழைய வாடகைக்கு கடையை ஒதுக்கவேண்டும் .இவ்வாறு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என நகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.எனினும்கடைகளை காலிசெய்யும்படிவத்தில்கையெழுத்திட மறுத்து காய்கறி வியாபாரிகள் சென்றனர்.

    ×