search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரிகள் மோதல்"

    • திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.
    • கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் டிரைவர். இவர் நேற்று இரவு திண்டிவனத்தில் இருந்து லாரியில் சவுக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று முன்னால் சென்றது. திடிரென கண்டெய்னர் லாரியின் முன்னால் சென்ற லாரியின் டிரைவர் சடன் பிரேக் போட்டார்.

    இதனால் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்னால் வேகமாக மோதியது. இதனை தொடர்ந்து அதன் பின்னால் சவுக்கு மர கட்டைகளை ஏற்றி சென்ற லாரி கண்டெய்னர் லாரி மீது மோதியது லாரியின் முன் பக்கம் அப்பளம்போல் நொருங்கியது. 2 லாரிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சவுக்கு கட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் டிரைவர் முருகன் பலத்த படுகாயம் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் லாரியின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரிகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய லாரி டிரைவர் முருகனை 1 மணி நேரம் போராடி மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சிக்கிய லாரிகளை போலீசார் அப்புறப்ப டுத்தினர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் அந்த இடம் பரப்பாக இருந்தது.

    • லாரி விழுப்புரம் அருகே பெரங்கியூர் பகுதியில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 லாரி யையும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

    விழுப்புரம்:

    சென்னை நங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ் (வயது 32). பார்சல் லாரி டிரைவர். இவர் நேற்று சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலிருந்து இரும்பு பொருட்கள், சில்வர் உள்ளிட்ட பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றார். அப்போது விழுப்புரம் அருகே பெரங்கியூர் பகுதியில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது பின்னால் வேகமாக கோதுமை ஏற்றி வந்த லாரி, பார்சல் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பார்சல் லாரி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரை வர் மற்றும் கிளீனர் படுகாயம் அடைந்தனர்.

    லாரிகள் இரண்டும் பலத்த சேதமாகி சாலையின் குறுக்கே நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவெண்ணை நல்லூர் போலீசார், ரோந்து போலீசார் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பார்சல் லாரி டிரைவர் வரதராஜ் மற்றும் பின்னால் வந்து மோதிய லாரியின் டிரைவர் ஜெபஸ்டீன் ஆகியோரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 2 லாரி யையும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது.
    • போலீசார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி,

    சென்னையில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றிக்கொண்டு மேட்டூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விருதாச்சலம் ஆர்.சி.கோயிலான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது41) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை இரட்டை பாலம் அருகே வந்தது.

    அப்ேபாது முன்னால் சென்ற மற்ெறாரு லாரியின் பின்பகுதியில் எதிர்பாராதவிதமாக சுண்ணாம்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் சார்லசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே போலீசார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. டிரைவர் கோவிந்தராஜின் 2 கால்களும் முறிந்தது.
    • பின்னர் ஜே.சி.பி வாகனம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புற ப்படுத்தினர்.

    குனியமுத்தூர்

    கோவை செட்டிப்பா ளையத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 26). லாரி டிரைவர். இவரது லாரியில் கிளீனராக வடசித்தூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இன்று காலை மேகநாதன் மற்றும் செந்தில்குமார் லாரியில் சுந்தராபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி வந்தனர். அப்போது சுந்தரா புரத்தை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.டிப்பர் லாரியை திண்டு கல் மாவட்டம் நத்த த்தை சேர்ந்த கோவிந்த ராஜ் (27) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் குறிஞ்சி குளம் அருகே வந்த போது 2 லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் டிப்பர் லாரி சாலையில் கவிழ்ந்து. டிரைவர் கோவிந்தராஜின் 2 கால்களும் முறிந்தது. மற்றொரு லாரி டிரைவர் மேகநாதன் மற்றும் கிளீனர் செந்தில்குமாரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து போலீசாருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து போலீசா ர் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் ஜே.சி.பி வாகனம் மூலம் சாலையின் நடுவே இருந்த 2 லாரிகளையும் அப்புற ப்படுத்தினர். சாலையில் லாரி கவிழ்ந்ததால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனே போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×