என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சக்கரத்தாழ்வார்"
- ஆனி மாதத்தில் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
- திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெ ருமாள் ஜேஷ்டா பிஷேகம் கடந்த ஜூன் மாதம் 21-ந் தேதியும், ஸ்ரீரெங்க நாச்சியார் ஜேஷ்டாபிஷேகம் கடந்த 28-ந் தேதியும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.
அங்கிருந்து காலை 7.15 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் 11 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு காலை 7.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
பின்னர் மூலவர், உற்சவர் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை மாலை நடைபெறுகிறது.
இதேபோன்று ரெங்கநாத ர் கோவிலின் உபகோ விலான திருவானைக் காவல் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது.
ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 12 வெள்ளிக் குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது.
அங்கிருந்து காலை 8 மணியளவில் புனித நீர் யானை மீது வைத்தும், 11 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனித நீர் வடக்குவாசல், சித்திரை வீதிகள், கீழவாசல் வழியாக கோவிலுக்கு காலை 9.30 மணிக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லெஷ்மிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. பின்னர் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்ட ப்பட்டன.
பின்னர் மூலவர்கள் லட்சுமி நரசிம்மன், மகாலெஷ்மி தாயார், உற்சவர் லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மங்களஹாரத்தி நடைபெற்றது. பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரிய தளிகை நடைபெற்றது.
- வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும்
- வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
திருச்சி:
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடன் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.
உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ் தனத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபதிற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார்.
வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும். வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது செய்து சூர்ணா பிஷேகம் கண்டருளினார். பின்னர் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 9மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
வசந்த உற்சவ விழாவின் 7ம் நாளான்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி நெல்லளவு கண்டருளுகிறார். 9ம் திருநாள் அன்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். தீர்த்தவாரி மற்றும் திருமஞ்சனம் கண்டருளுவார்.
வசந்த உற்சவ நாட்களில் இரவு 8 மணிக்கு பிறகு ஆரியபடாள் வாசலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தம் பதினாறு கரங்களிலும் பதினாறு ஆயுதங்களைக் கொண்டவராக விளங்குபவர் ஸ்ரீசுதர்சனர்.
- சுதர்சனரே மூலவராக விளங்கும் தலம், கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி திருக்கோவில்.
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு.
அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை.
இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம். சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவர் இவர்தான்.
இதன் சிறப்பைச் சொல்லும்போது, 'எம்பெருமான் கருதுமிடம் பொருதும் ஆழி' என்பார்கள் பெரியோர்.
'ஆதிமூலமே' என்றழைத்த யானை கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி வந்தவர் இந்த சக்கரத்தாழ்வார் தான்.
சினங்கொண்ட துர்வாசரால் ஏவப்பூட்ட பூதத்தை வீழ்த்தி, மன்னன் அம்பரீஷன் நினைக்கும் முன்பே, துர்வாசரையும் துரத்திச் சென்றவர் இந்த சுதர்சனர்.
சிறைவாசம், பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள்ஞ்உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து அடியார்களைக் காப்பவர் ஸ்ரீசுதர்சனர். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை.
சித்திரை அவருக்குரிய நட்சத்திரம்.
ஸ்ரீ சுதர்சன சக்கர ரக்ஷய மந்திரம் :-
ஓம் நமோ சுதர்சன சக்ராய
ஸ்மரண மாத்ரேண ப்ரகடய ப்ரகடய
த்வம் ஸ்வரூபம் மம தர்சய தர்சய
மம சர்வத்ர ரக்ஷய ரக்ஷய ஸ்வாஹா
செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் அகலும்.
தம் பதினாறு கரங்களிலும் பதினாறு ஆயுதங்களைக் கொண்டவராக விளங்குபவர் ஸ்ரீசுதர்சனர்.
சக்கரம், மழு, ஈட்டி, தண்டம், அங்குசம், அக்னி, கத்தி, வேல், சங்கு, வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை, உலக்கை, சூலம் ஆகியவற்றைக் கொண்டவராக இவர் காட்சி தருவார்.
இந்தக் கோல மூர்த்தியை, 'ஷோடசாயுத ஸ்தோத்திரம்' சொல்லி வழிபடுவது மிகச்சிறந்த பலனைத் தரும்.
சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். இதைப் போன்றே, ஸ்ரீகூர நாராயண ஜீயர் அருளிய சுதர்சன சதகமும் விசேஷமானது.
சுதர்சனருக்கு ஸ்ரீரங்கம், திருமோகூர், மதுரை கூடலழகர் கோவில், சென்னை பார்க் டவுனில் உள்ள பைராகி மடம் திருவேங்கடமுடையான் திருக்கோவில்.
உள்ளிட்ட பல்வேறு தலங்களில் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன.
என்றாலும், சுதர்சனரே மூலவராக விளங்கும் தலம், கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி திருக்கோவில்.
இவரை வழிபட்டே, தாம் இழந்த ஒளியை மீண்டும் பெற்றான் பகலவனான சூரியன்.
அவனால் எழுப்பப்பட்ட ஆலயம் சக்ரபாணி திருக்கோவில் என்றும், அதனாலேயே குடந்தைக்கு 'பாஸ்கர கேஷத்திரம்' என்று பெயர் வந்ததாகவும் தலபுராணம்.
- சுதர்சனருக்கு எட்டு முதல் 32 கரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
- திருமாலின் அருளை பெறலாம். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.
திருமால் தனது கையில் வைத்திருக்கும் சக்கரமே 'சுதர்சன சக்கரம்' என்று அழைக்கப்படுகிறது.
திருமால் தனது கையில் வைத்திருக்கும் சக்கரமே 'சுதர்சன சக்கரம்' என்று அழைக்கப்படுகிறது.
சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்றும் போற்றுவார்கள்.
இவர் திருமாலின் தசாவதாரங்களில் வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரங்களின் குணங்களை ஒருங்கே பெற்றவர்.
பக்தர்களுக்கு ஞானத்தைத் தந்து பயத்தை அழிக்கும் தன்மை கொண்டவர்.
சுதர்சனருக்கு எட்டு முதல் 32 கரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தீமை செய்பவர்களை அழிப்பது இவரது பணிகளில் ஒன்று.
இந்திரத்துய்மன் என்பவன் யானையாக பிறந்த போது, கூடு என்பவன் முதலையாகப் பிறந்தான்.
இறை பூஜைக்காக பூப்பறிக்கச் சென்ற யானையின் காலை, குளத்தில் இருந்த முதலை கவ்விக்கொண்டது.
அப்போது திருமால், சுதர்சனரை அனுப்பியே முதலையைக் கொன்றார் என்பது புராண வரலாறு. கிருஷ்ண பகவானை பழித்து பேசிய சிசுபாலனைக் கொன்றதும், துர்வாச முனிவரை விரட்டி அவரது கர்வத்தை அகற்றியதும் சுதர்சனர்தான்.
இவரை ஆலயங்களில் வழிபடுவதுடன், வீட்டில் எந்திர வடிவில் வைத்தும் வழிபாடு செய்யலாம். பூஜை செய்யும் பொழுது, அபிஷேகம் அர்ச்சனை, சுதர்சன அஷ்டகம் முதலியவற்றைச் சொல்லி கற்பூர தீபம் காட்டும் பொழுது சுதர்சனருக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது உத்தமம்.
இந்த மந்திரத்தை தினமும் 108 தடவைச் சொல்லி வருவது பல்வேறு நன்மைகளை வழங்கும்.
சுதர்சன காயத்ரி மந்திரம்
'ஓம் சுதர்ஹநாய வித்மஹே
மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்'
திருமாலின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனரை அறிந்து கொள்வோம்.
மகா ஜூவாலையாகத் திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம்.
தீமையை அழிக்கும் அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும்.
கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். திருமாலின் அருளையும் பெறலாம்.
ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.
- தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை ‘அவசரத் திருக்கோலம்‘ என்பர்.
- ‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர்.
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை 'சக்கரத்தாழ்வார்' என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.
சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்.
தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை 'அவசரத் திருக்கோலம்' என்பர்.
'நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது' என்று குறிப்பிடுவர்.
துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.
இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புவர்.
- கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர்.
- ஏழ்மை அழிந்து, செல்வம் குவியும். எதிர்பாராத பட்டங்களும், பதவிகளும் இவர்களைத் தேடி வரும்.
சக்கரத்தாழ்வாரை தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் கீழ்வரும் பலன்கள் கிடைக்கும்.
கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர்.
இவரை எவரும் எதிர்க்க மாட்டார்கள்.
அனைவரும் இவர்கள் மேல் அன்பைப் பொழிவார்கள்.
ஏதாவது ஒரு காரணத்தினால் மனதில் எப்போதாவது பயம் தோன்றினால் இவர் மந்திரங்களைச் சொல்வதன் மூலம் அந்தப்ப பயமானது இல்லாது அழிந்து ஒழிந்து போகும்.
கடுமையான தீர்க்க முடியாத வியாதிகள் உள்ளவர்கள் இவரை எண்ணித் துதித்து வந்தால் அந்த வியாதிகள் குணமாகும்.
வறுமையினால் பாதிக்கப்பட்டு ஒருவர் துக்கத்தை அடைந்திருந்தால் இவர் வழிபாட்டின் மூலமாக வறுமை ஒழிந்து,
ஏழ்மை அழிந்து, செல்வம் குவியும். எதிர்பாராத பட்டங்களும், பதவிகளும் இவர்களைத் தேடி வரும்.
திருமணம் நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்தாலோ, பிறரின் தலையீட்டினால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அவை எல்லாம் நீங்கித் திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.
நோயாலோ, விபத்தாலோ, நஞ்சாலோ, பகைவரின் அச்சுறுத்தாலோ விளைந்திருக்கும் மரண பயம் அகலும். புத்தியில் தெளிவு உண்டாகும். ஞான வைராக்கியம் பிறக்கும்.
சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வார் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருமக்கோட்டை ஊராட்சி, மகாராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.
ஸ்ரீ ரெங்கநாயகி சமேத அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் தென்மேற்கில் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் தனி சன்னதியாக அருள்பாலித்து வருகிறார்.
கிழக்கு முகமாக சக்கரத்தாழ்வாரும், மேற்கு முகமாக யோக நரசிம்மரும் ஒரே கல்லில் அமைந்துள்ளது இத்திருத்தலத்தின் சிறப்பாகும்.
இப்படியரு சிறப்பிற்குரிய சக்கரத்தாழ்வாரை நாமும் வழிபடுவோம்.
- தமிழில் அமைந்த ‘ழ’ என்ற எழுத்தின் பெருமையை இந்த பாடல்கள் மூலமாக சிறப்பித்து பேசியுள்ளார்கள்.
- நன்மைகள் பல உண்டாகும் என்றும் அப்பெரியவர் கூறியுள்ளார்.
சக்கரத்தாழ்வாருக்கு சுதர்ஷனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
அந்த சுதர்ஷனனை பற்றி சுதர்ஷன சதகம் என்று 100 பாடல்கள் அடங்கிய ஒரு நூல் ஒரு பெரியவரால் பாடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடலும் சக்கரத்தாழ்வாரின் பெருமையை அப்பெரியவர் பல சான்றுகளுடன் விளக்கியும் கூறியுள்ளார் அந்த நூலை நாம் தினந்தோறும் படித்தால் குறைகள் எல்லாம் நீங்கும்.
நன்மைகள் பல உண்டாகும் என்றும் அப்பெரியவர் கூறியுள்ளார்.
கஜேந்திர மோட்சம், அம்பரிகன் வரலாறு, ஆகியவை எல்லாம் சக்கரத்தாழ்வாரின் பெருமையையும் ஏகாதசி விரதத்தின் உயர்வையும் கூறுகின்றன.
அந்த சுதர்ஷன சதகம் அதுபோன்ற சுதர்ஷன சதக நாமம் ஆகிய நூல்களை நாமும் பாராயணம் செய்தோமானால் நலம் பல பெறலாம்.
குறைகள் நீங்கும். கிரக தோஷம் விடுபடும்.
ஆகவே ஆழ்வார்கள் பண்ணிரென்டு பேர்களும் மிகவும் போற்றி புகழப்பெற்ற சக்கரத்தாழ்வாரின் பெருமையை
கோதை நாச்சியார் (ஆண்டாள்) ஆழிமழை கண்ணா என்கின்ற திருப்பாவை பாடல்கள் மூலமாக சிறப்பித்து பாடியுள்ளார்.
தமிழில் அமைந்த 'ழ' என்ற எழுத்தின் பெருமையை இந்த பாடல்கள் மூலமாக சிறப்பித்து பேசியுள்ளார்கள்.
ஆகவே ஆழிமழை கண்ணா என்ற பாசுரத்தை நாமும் பாராயணம் செய்வோமானால் நாட்டில் மழை பொழியும், வளம் பெருகும், தீமைகள் அகலும் மேன்மேலும் நன்மைகள் உண்டாகும்.
- தெய்வங்களில் சிறப்புடைய தெய்வம் மகாவிஷ்ணு. அவர் ஸ்ரீமன் நாராயணன் ஆவார்.
- உலகம் அனைத்தையும் படைத்து காத்து தன்பால் அடக்கி கொள்ளவும் ஆற்றல் படைத்தவர் மகாவிஷ்ணு.
தெய்வங்களில் சிறப்புடைய தெய்வம் மகாவிஷ்ணு. அவர் ஸ்ரீமன் நாராயணன் ஆவார்.
உலகம் அனைத்தையும் படைத்து காத்து தன்பால் அடக்கி கொள்ளவும் ஆற்றல் படைத்தவர் மகாவிஷ்ணு.
அவரின் பெருமையை 18 புராணங்களிலும் சிறக்கப்பேசுகின்றார்கள். மகாவிஷ்னுக்கு சிறந்த ஆயுதங்களாக போற்றப்படுபவை 5 ஆயுதங்களாகும்.
அவை சங்கு, சக்கரம், கெதை, வில், கத்தி இவற்றை ஐம்படை என்று கூறுவார்கள்.
படை என்ற சொல்லுக்கு ஆயுதம் என்று பொருள்.
இந்த ஐந்தாம் படையை கொண்டு பகவான் ஸ்ரீமன் நாராயணன் தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார் இந்த ஐந்து ஆயுதங்களில் சிறப்புடையது சக்கரமாகும்.
இந்த சக்கரத்திற்கு ஆழ்வார் என்று அடைமொழி சேர்த்து சக்கரத்தாழ்வார் என்று வைணவம் சிறப்பித்து பேசுகிறது.
- பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர்.
- சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும்.
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர்.
மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.
இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.
சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும்.
சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர்.
`சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்' என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.
- விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.
- மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம்.
சிவன் கோவில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு.
அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.
விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.
சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம'
என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம்.
இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை.
அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
- சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.
- திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.
சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார்.
ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு.
திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார்.
அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்