search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எழும்பூர் அருங்காட்சியகம்"

    • எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
    • எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. எழும்பூர் அருங்காட்சியகத்தை தினமும் காலை 10.30 மணி முதல் 6.30 மணி வரை பார்வையிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எழும்பூர் அருங்காட்சியகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது.
    • எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

    சென்னை:

    சென்னையில் எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி எழும்பூர் அருங்காட்சியகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதில் அலங்கார விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட உள்ளது.

    மேலும் இங்கு பாதுகாப்பு உபகரணங்களும் அமைக்கப்படுகின்றன. இங்கு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    எழும்பூரில் அருங்காட்சியகத்தை புதுப்பிப்பதற்காக தமிழக அரசு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அதன்படி அருங்காட்சியகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பதற்காக விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் ரூ.62 லட்சத்துக்கு டெண்டர் விடப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அருங்காட்சியக இயக்குனர் ஒரு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    மேலும் மீதமுள்ள பணிகளை ரூ.2.38 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளவும் அந்த கடிதத்தில் கூறி இருந்தார். அதன்படி மொத்தம் ரூ.3 கோடி மதிப்பில் எழும்பூர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படுகிறது.

    மேலும் எழும்பூர் அருங்காட்சியகத்தின் வாடகை மற்றும் இதர செலவினங்களை மாற்றியமைப்பதற்கான முன் மொழிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை அரசு பிறப்பித்து இருக்கிறது.

    இந்த நிலையில் எழும்பூர் அருங்காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் அருங்காட்சியகம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.

      இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
      • சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
      • அருங்காட்சியகத்தில் உள்ள கலையரங்கை மேம்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

      சென்னை:

      சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

      சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1851-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்துக்கு அடுத்த படியாக இந்தியாவின் 2-வது பழமையான அருங்காட்சியமாகும்.

      16.25 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் 6 கலைமிகு கட்டிடங்களுடன் அமைந்துள்ளது. இங்குள்ள 46 காட்சி கூடங்களில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளை சார்ந்த ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

      மேலும் இயற்கை சார் வரலாறு, பண்பாடு சார் வரலாறு ஆகிய இரு துறைகளை சார்ந்த பல்வேறு அரும்பொருட்களும் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

      இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கலையரங்கை மேம்படுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

      அதன்படி இங்குள்ள கலையரங்கத்தின் இருக்கைகளை மாற்றி புதிய இருக்கைகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தபுள்ளி அறிவிப்பையும் பொதுணப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

      ×