என் மலர்
நீங்கள் தேடியது "பயில்வான் ரங்கநாதன்"
- பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன்.
- இவர் சமூக வலைதளத்தின் வாயிலாக பிரபலங்கள் பலரை விமர்சித்து வருகிறார்.
சினிமா பத்திரிகையாளரும், படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சினிமா குறித்தும் திரைத்துறை நடிகர், நடிகைகள் குறித்தும் பல விஷயங்களை சமூக வலைத்தளத்தின் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இவர் மீது திரைப்பிரபலங்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் குறித்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் சமூக வலைதளப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், "இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் "இசை வெல்லம்" பயில்வான் ரங்கநாதன் சாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துகள். எங்களுக்கு செம்ம பெருமையான தருணம், உங்கள் பணியின் பெரிய ரசிகன் சார். மேலும் விவரங்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு ஜி.வி.பிரகாஷ் பதிவை பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
- நடிகரும், சினிமா பத்திரிகையாளருமாக அறியப்படுபவர் பயில்வான் ரங்கநாதன்.
- இவர் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார்.
சினிமா பத்திரிகையாளரும், படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சினிமா குறித்தும் திரைத்துறை நடிகர் நடிகைகள் குறித்தும் பல விஷயங்களை சமூக வலைத்தளத்தில் வாயிலாக பகிர்ந்து வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன்
இந்நிலையில் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக அவர் பேட்டி அளித்தார். அவரிடம் சினிமா குறித்தும், நடிகர்-நடிகை குறித்தும் அவர் வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், யூடியூப்ல என்னுடைய கருத்துகளை சொல்றேன். நித்யானந்தா எத்தனை பேர வெச்சிருந்தா உங்களுக்கு என்ன? நீங்க அதை பதிவிடுறீங்க அந்த மாதிரி நான் மற்ற விஷயங்களை பதிவிடுறேன். என்னால யூடியூப்ல சம்பாதிக்குறாங்க என்ன மட்டும் ஏன் குறி வைக்குறீங்க என்று கூறினார். இது போன்ற பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.