என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி ஸ்மைல் மேன்"

    • இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது.
    • கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அவரது 150-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'தி ஸ்மைல் மேன்' என் பெயரிடப்பட்டுள்ளது.

    மெமரீஸ் படத்தின் இயக்குனர் ஷாம் பிரவீன் இப்படத்தை இயக்குகிறார். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர உள்ளது. ஸ்ரீ குமார், சிஜாரோஸ், இனியா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவையும், சான் லோகேஷ் படத்தொகுப்பை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. காவல்துறை அதிகாரியான சரத்குமார் மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை காட்டும் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சரத் குமாரின் 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்"
    • இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

    மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் டிரெய்லரை 90 களின் அனைவருக்கும் பிடித்தமான கதாநாயகிகளான குஷ்பு சுந்தர், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன்,மீனா சாகர் மற்றும் நமிதா வெளியிடவுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் நடிகர் சரத்குமாருடன் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகிகளாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்மைல் மேன் படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
    • மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

    மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுப்விறுப்பாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவானது "தி ஸ்மைல் மேன்"
    • இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

    மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவானது "தி ஸ்மைல் மேன்" (The Smile Man)திரைப்படம். இப்படம் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகும் முன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இப்படத்தை உருவாக்கியுள்ளது.

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் சிஜா ரோஸ், இனியா, ராஜ்குமார், ஜார்ஜ் மரியான், சுரேஷ் மேனன், குமார் நடராஜன், ரௌடி பேபி புகழ் பேபி ஆழியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மெமரீஸ் படப்புகழ் ஶ்ரீகுமார் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்டிரீம்மாகவுள்ளது. திரைப்படத்தை திரையரங்கில் காண தவறவிட்டவர்கள் ஓடிடியில் இப்படத்தை பார்த்து மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்தை மாதவ் ராமதாசன் இயக்கி வருகிறார்.
    • சரத்குமாரின் பிறந்தநாளான இன்று தொடர்ச்சியாக அப்டேட்டுகளை படக்குழு கொடுத்து வருகிறது.

    1990-களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியான சூரியன், நாட்டாமை, கூலி, ரகசிய போலீஸ், சூர்யவம்சம், நட்புக்காக, ஐயா உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது 'பொன்னியின் செல்வன்', 'வாரிசு' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படத்திலும் மாதவ் ராமதாசன் இயக்கத்தில் '888 ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சரத்குமாரின் பிறந்தநாளான இன்று திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சரத்குமாரின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக அப்டேட்டுகளையும் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமாரின் 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    தி ஸ்மைல் மேன் - ஆழி

    தி ஸ்மைல் மேன் - ஆழி

    அதேப்போன்று மாதவ் ராமதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'ஆழி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    ×