search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலை"

    • ஸ்ரீ வீரபத்திரர் பெரிதும் விரும்பும் நிறம் பொன் மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமாகும்.
    • வீர பத்திரருக்கு வேட்டி, தலைப்பாகை அணிவிப்பதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.

    வீரபத்திரருக்கான உடைகள்

    வீரபத்திரருக்கு ஆடை அணிவித்தல், பொட்டு வைத்தல், மலர்களை சூட்டி மகிழ்தல், தூபமிட்டுப் போற்றுதல் என்று பல்வேறு வகைகளில் அலங்காரம் செய்து வழிபாடு செய்வது எல்லா கோவில்களிலும் வழக்கத்தில் உள்ளது.

    பொன் மஞ்சள்/ செந்நிற ஆடை

    ஸ்ரீ வீரபத்திரர் பெரிதும் விரும்பும் நிறம் பொன் மஞ்சளும், சிகப்பும் கலந்த நிறமாகும்.

    கண்ணைப் பறிக்கும் பளபளப்பு நிறைந்த பொன் மஞ்சள் நிறத்தில் சிகப்பு நிறச் சாயல் கலந்த நிறத்தில் உள்ள ஆடை இவருக்கு உரியதாகும்.

    வேறு நிறங்களை இவர் விரும்புவதில்லை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் வீரபத்திரருக்கு, நேர்த்திக் கடன் வழிபாட்டின் போது செந்நிற ஆடை அணிவிக்கின்றனர்.

    மம்சாவரம் ஆகாச கருப்பண்ணசுவாமி கோவிலில் மகா சிவராத்திரித் திருவிழாவின் போது, வீர பத்திரருக்கு வேட்டி, தலைப்பாகை அணிவிப்பதை பழக்கத்தில் வைத்துள்ளனர்.

    • நீர் நற்பேறுகளைக் கொடுக்கும்.
    • பால் ஆயுளை வளர்க்கும்.

    வீரபத்திரர்-அபிஷேக பலன்கள்

    நீர் & நற்பேறுகளைக் கொடுக்கும்.

    பால் & ஆயுளை வளர்க்கும்.

    தேன் & இன்பம் அளிக்கும்.

    பழங்காநத்தம் கணேச அக்னி வீரபத்திரசாமி கோவிலில் நீர், பால், தயிர் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.

    மதுரை நாடார் தேசாரி சந்து அங்காள பரமேசுவரி ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு தினமும் நீர், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், நெய், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், நறுமணப்பொடி ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்கின்றனர்.

    இவர் பேராற்றல் படைத்தவர் என்பதால் குங்குமப்பூ கலந்த தண்ணீரால் திருமஞ்சனம் செய்கின்றனர்.

    திருமஞ்சனம் செய்தவுடன் மிக மிக தூய்மையாக வேண்டும் என்பதற்காகப் பச்சைக் கற்பூரம் சார்த்துகின்றனர்.

    மதுரை ஸ்ரீ வீரபத்திரசுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு வெள்ளிக் கிழமைகளிலும், கார்திகைப் பவுர்ணமியன்றும் அனைத்து வகையான திருமஞ்சனப் பொருட்களாலும் திருமஞ்சனம் செய்கின்றனர்.

    திண்டுக்கல் கத்தரிக்காய் சித்தர் கோவிலில் உள்ள ஸ்ரீ வீரபத்திரருக்கு, நீர், பால், திருநீறு, பஞ்சாமிர்தம் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.

    திருக்குளம்பூர் கருப்பண்ணசுவாமி கோவிலில் உள்ள வீரபத்திரருக்கு சிறப்பு நாட்களில் திருமஞ்சனத்திற்குரிய அனைத்து வகையானப் பொருட்களாலும் திருமஞ்சனம் செய்கின்றனர்.

    மேலமரத்தோணி வீரபத்திரர் கோவிலில் எளிதாக கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் கொண்டு திருமஞ்சனம் செய்கின்றனர்.

    பழனி காந்திரோடு வீரபத்திரர் கோவிலில் வாரம் ஒரு முறை சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    • நீர், பால், தேன் என்ற மூன்று மட்டுமே இவருக்குரிய அபிஷேகப் பொருள்களாகும்.
    • ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பூஜை செய்தல் வேண்டும்.

    வீரபத்திரர்-தேன் அபிஷேகம்

    மிகச் சுத்தமான உயர்ந்த ரக மலைத் தேனினை ஒரு வெள்ளிக்குடத்தில் நிரப்பி வலது தோளில் சுமந்து எடுத்து வந்து அபிஷேகம் செய்தல் வேண்டும்.

    பிறவற்றை இவர் ஏற்பதில்லை.

    இம் மூன்று பொருட்களையும் கொண்டு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பூஜை செய்தல் வேண்டும்.

    ஸ்ரீ வீரபத்திர உபாசகர் நீர், பால், தேன், எதுவாயினும் தாமே தன் கைகளால் மட்டுமே கொண்டு வர வேண்டும்.

    • பசுவின் பாலினையும் வெள்ளிக்குடத்திலே கறந்தெடுக்க வேண்டும்.
    • பால் கறக்கும் போதோ அபிஷேகம் செய்யும் போதோ அதில் மூச்சுக்காற்று படுதல் கூடாது.

    வீரபத்திரர்-பால் அபிஷேகம்

    இறைவன் கொடுத்த பொருட்களை, முதலில் இறைவனுக்குப் படைப்பது நமது வழக்கமாகும்.

    எனவே தான் தூய்மையை விரும்பும் ஸ்ரீவீருபத்திரருக்குத் தூய்மையான பொருளாகிய பாலைக் கொண்டு, திருமஞ்சனம் செய்கின்றனர்.

    தீர்த்தம் கொண்டு அபிஷேகம் முடித்தவுடன் கறந்த பசுவின் பால் கொண்டு அபிஷேகம் செய்தல் வேண்டும்.

    பாக்கெட் பால், பவுடர் பால், எருதின் பால் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த கூடாது.

    பசுவின் பால் மட்டுமே பூஜைக்கு உகந்தது.

    பசுவின் பாலினையும் வெள்ளிக்குடத்திலே கறந்தெடுக்க வேண்டும்.

    கறக்கும் போதோ கறந்த பிறகோ வெள்ளிக்குடத்தினைக் கீழே வைத்தல் கூடாது.

    ஸ்ரீ வீரபத்திர உபாசகர் தாமே தம் கைகளாலேயே வெள்ளிக்குடத்தைப் பிடித்துக் கொண்டு பால் கறக்க வேண்டும்,

    கறந்த பாலின் சூடு ஆறுவதற்கு முன்பாகத் தன் வலது தோளில் பாற்குடத்தைச் சுமந்து சென்று ஸ்ரீ வீரபத்திருக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும்.

    பால் கறக்கும் போதோ சுமக்கும் போதோ அபிஷேகம் செய்யும்போதோ அதில் மூச்சுக்காற்று படுதல் கூடாது.

    பூவந்திக் கிராமம், அய்யாக்கன்மாய் வீரபத்திரருக்கு நீர், பால் மட்டுமே கொண்டு திருமஞ்சனம் செய்வார்கள்.

    • தண்ணீர் குடத்தை கீழே வைக்கக் கூடாது.
    • நீர் இறைக்க எவர் உதவியையும் நாடுதல் கூடாது.

    வீரபத்திரருக்கான அபிஷேகங்கள்

    நீர் அபிஷேகம்

    ஸ்ரீ வீரபத்திரருக்கு எல்லா ஆலயங்களிலும் தினமும் காலை நீர் அபிஷேகம் செய்கின்றனர்.

    இந்த நீர் அபிஷேகத்தை செய்வது எப்படி தெரியுமா?

    வலது கை மணிக்கட்டில் கறுப்புக் கயிறு கட்டி ஸ்ரீ வீரபத்திரரை உபாசிக்கும் தகுதி படைத்த உபாசகர் தம் கைகளாலேயே ஸ்ரீ வீரபத்திரருக்குரிய திருமஞ்சன நீரைக் கோவில் கிணற்றில் இருந்தோ, நதிகளில் இருந்தோ எடுத்து வர வேண்டும்.

    அவ்வாறு எடுக்கும் நீரை வெள்ளிக் குடத்தில் நிரப்பிக் கொண்டு வர வேண்டும்.

    நதியில் எடுக்கும் நீராக இருந்தாலும் சரி, கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரானாலும் சரி, ஸ்ரீ வீரபத்திரர் வழிபாட்டிற்கு என்றே வைத்திருக்கும் தனிப்பட்ட வெள்ளிக் குடத்தில் மட்டுமே எடுக்க வேண்டும்.

    அவ்வாறு எடுத்த நீரை பூசாரி தன் வலது தோளில் சுமந்து, எடுத்து வந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

    எடுத்து வரும் நீரை எக்காரணம் கொண்டும் எங்கும் கீழே வைக்காமல் உடனேயே வலது தோளில் வைத்து எடுத்து வர வேண்டும்.

    கரம் மாற்றுதலோ இடம் மாற்றுதலோ கூடாது.

    தண்ணீர் குடத்தை கீழே வைக்கக் கூடாது.

    பிறர் கைபடுதலோ கூடாது.

    நீர் இறைக்க எவர் உதவியையும் நாடுதல் கூடாது.

    • இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர்.
    • ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது.

    அகோர வீரபத்திரர் விரதம்

    அகோர வீரபத்திரருக்கு விரதமிருக்க விரும்புவோர் மாசிமாதம் கிருஷ்ணபட்சம், பிரதமைதிதி, பூரம் நட்சத்திரம், ஞாயிற்றுக் கிழமையன்று விரதம் தொடங்க வேண்டும்.

    ஏனெனில் இந்நாளில் இரவு 12 மணிக்குத்தான் அகோர வீரபத்திரர் தோன்றினார் என்பர்.

    திருவெண்காட்டில் அகோர வீரபத்திரருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் தோன்றிய நாளில், நேரத்தில் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

    மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் இரவில் அகோர பூஜை செய்யப்படுகிறது.

    கார்த்திகை மாதம் ஈசனுக்கு உகந்தது என்பதால் கார்த்திகை ஞாயிறு வழிபாடு சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

    இவ்வழிபாட்டில் பசுவின்பால், பால்சாதம், எலுமிச்சை சாதம், மஞ்சள் நிற இனிப்பு வகைகள் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பாகும்.

    அகோர வீரபத்திரரை ஈசனுக்குரிய திங்கட்கிழமையன்றும் பிரதோஷ நாளன்றும் நித்திய பிரதோஷ நேரத்திலும் சிவராத்திரி தினத்தன்றும் வழிபடுவது மிகமிக நன்று.

    இத்தகு வழிபாடுகள் வாழ்வியல் சிக்கல்களை நீக்கிடவும் எடுத்த செயல்களில் வென்றிடவும் உதவும்.

    • இந்திரன் இவ்விரதமிருந்ததால் கற்பக நாட்டு அரசுரிமையைப் பெற்றான்
    • காரமான புளிசாதத்தை நைவேத்தியம் செய்து தானம் அளித்தல் வேண்டும்.

    வீரபத்திரர் விரதம்

    சித்திரை மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று வீரபத்திரர் விரதத்தைத் தொடங்க வேண்டும்.

    கலசத்தில் வீரபத்திரர் திருவுருவினை அமைத்து அதற்கு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை முதலியன செய்து வழிபடுவதோடு அன்று முழுவதும் விரதம் இருந்து மறுநாள் கலசத்தில் நிறுவிய வீரபத்திரர் திருவுருவை பாரணை செய்தல் வேண்டும்.

    இத்தகைய விரதத்தை நான்முகன் மேற்கொண்டதால் வீரபத்திரர் தக்கனுடன் போர் செய்த காலத்தில் வீரபத்திரருக்குத் தேர்ச்சாரதியாகும் பேறு பெற்றான் என்றும்,

    இந்திரன் இவ்விரதமிருந்ததால் கற்பக நாட்டு அரசுரிமையைப் பெற்றான் என்றும், வேதியர்கள் பலர் இவ்விரதமிருந்து மெய்ஞ்ஞான நிலையை அடைந்தனர் என்றும் கூறுவர்.

    இவ்விரதம் இருப்போர் முக்தி நிலையடையவர் என்று நம்புகின்றனர்.

    இவ்விரதத்தின் போது சிவந்த நிறமுடைய மலர்களாலும் சந்தன உருண்டைகளாலும் வெண்ணெய், வெற்றிலை போன்ற பொருட்களாலும் வீரபத்திரரை பூஜிக்க வேண்டும்.

    வில்வங்களை கொண்டு வீரபத்திரர் நாமங்களைத் துதிப்பது மிகவும் சிறப்பாகும்.

    இவ்விரதத்தின் போது காரமான புளிசாதத்தை நைவேத்தியம் செய்து தானம் அளித்தல் வேண்டும்.

    இதனால் பகை நீக்கம், புத்திரவிருத்தி, சகோதரபலம், நல்வழியில் நடப்பதற்கு ஏற்ற மன உறுதி ஆகியவை கிடைக்கும்.

    திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் வீரபத்திரரை வேண்டி இவ்விரதமிருந்தால் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும்.

    • வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம்.
    • பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

    வீரபத்திரரை எப்போது வழிபாடு செய்யலாம்?

    அகோர மூர்த்தியான வீரபத்திரர் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் பூர நட்சத்திரம் கூடிய பிரதமை திதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு அவதரித்தார்.

    இதனால் பூர நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது மிகவும் விசேஷம்.

    வெற்றியின் சின்னமான வெற்றிலை மாலையை ஆடிப்பூரத்தன்று சாத்துவது விசேஷ பலன்களைத் தரும்.

    வீரபத்திரரை அமாவாசை மற்றும் பவுர்ணமியில் வழிபடலாம்.

    சித்திரை முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடிப்பூரம் மாசி சிவராத்திரி தமிழ் வருடப் பிறப்பு மற்றும் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள் இவரை வழிபடுவதற்குரியவை.

    பால், தயிர், சந்தனம், வெண்ணெய் முதலியவற்றை வழிபாட்டில் பயன்படுத்தலாம்.

    வெற்றிலை மாலை சாத்தலாம்.

    மஞ்சள்,ரோஜா செம்பருத்தி தும்பை செவ்வரளி வில்வ தளங்கள் கொண்டு அர்ச்சிக்கலாம்.

    பசும்பால் எலுமிச்சை சாறு மஞ்சள் நிற இனிப்புகளை படைத்து இவரை வழிபட எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

    • வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.
    • பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது.

    வீரபத்திரருக்கு உகந்த தும்பைபூ மாலை

    அஞ்சாமல் அதிரடி போர் புரிய வெற்றிசின்னமாக போர்வீரர்கள் தும்பைபூ மாலை அணிவது பழந்தமிழர் வழக்கம்.

    வீரபத்திரபெருமானும் தும்பைபூ மாலை அணிந்து தட்சனின் யாகத்தை அழிக்க சென்றார் என்று தாராசுரம், ஐராவதேவதேஸ்வர் ஆலயதிலுள்ள வீரபத்ரப் பரணி அல்லது தக்கயாகப் பரணி எனும் இலக்கியம் எழுதிய ஒட்டகூத்தர் உரைக்கிறார்.

    எனவே வீரபத்ரருக்கு தும்பைபூ மாலை விசேஷம், தும்பைபூ அர்ச்சனையும் விசேஷம்.

    வெள்ளைநிற வஸ்திரம் வைராக்கியத்தின் அடையாளம்.

    போருக்கு வெண்நிற ஆடை அணிந்து சென்றார் என்பதாலும் வீரபத்திரருக்கு வெண்மை நிற வஸ்திரம் விசேஷம்.

    அதிலும் வண்ணநிற கறைகள் இல்லாதது அதிவிசேஷம்.

    வடைமாலை, சந்தனகாப்பு, வெண்ணெய்காப்பு, வெற்றிலைமாலை சாற்றுதல், வெற்றிலை படல் சாற்றுதல் முதலியனவும் உன்னதமானவை.

    போருக்கு செல்லும் வீரர்க்கு அவரது உறவினர்கள் மங்கலப்பொருளான வெற்றிலைப்பாக்கு கொடுத்து வாழ்த்தி வழி அனுப்புவது நமது பண்டைய வழக்கமாகும்.

    வீரபத்திரர் வெற்றிக்குரிய கடவுளாகப் போற்றபடுவதாலும், பெயரிலேயே வெற்றியை கொண்டிருப்பதாலும் வீரபத்திரருக்கு வெற்றிலைமாலை சாற்றப்படுகிறது.

    சுவாமியை சுற்றி அதற்கென உள்ள மர பிரபையில் வெற்றிலைகளை அழகுபட அலங்கரித்து கட்டுவது வெற்றிலைபடல் எனப்படும்.

    இது விரிவான வழிபாடாகும்.

    அதாவது 12,800 வெற்றிலைகளை சாற்றுவது உத்தமம் என்றும் அதில்பாதியாக 6,400 சாற்றுவது மத்யமம் எனவும் இதைப்பற்றி அறிந்தபெரியோர்கள் தெரிவிக்கின்றனர்.


    • நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.
    • கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

    வீரபத்திரரை எப்படி வழிபடுவது?

    அனல் போன்ற கோபம் கொண்டவர் ஸ்ரீ வீரபத்ரர்,

    எனவே அவரை அங்காரனின் (செவ்வாய்) அம்சமாக கொண்டு அவரது வழிபாட்டுக்கு உகந்ததினமாக செவ்வாய் கிழமையை சொல்கிறார்கள்.

    வீரபத்திரரை வழிபடுவதால் பேய்பிடித்தல், பில்லி, சூனியம் எனும் மனநோய்கள் போன்ற கண் காணாத் தொல்லைகள், மற்றும் மனதில் தோன்றும் இனம் புரியாத அச்சம் போன்றவையும் விலகுகிறது.

    நமக்கு தன்னம்பிக்கையும், தைரியமும், உண்டாகிடும், வாழ்வு சிறக்க வழிவகுக்கும்.

    பவுர்ணமி, செவ்வாய் கிழமை, ஞாயிற்று கிழமை, குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்று கிழமை, சித்ரா பவுர்ணமியும் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை.

    தேய்பிறை அஷ்டமி தினங்களும் பைரவ வழிபாடு போன்று வீரபத்திரர் வழிபாடும் சில ஆலயங்களில் காணப்படுகிறது.

    பவுர்ணமி வழிபாட்டில் பால், தயிர், போன்ற வெண்மைநிற அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து வெள்ளை நிற வஸ்திரம் (சில இடங்களில் கரையில்லா வெள்ளைவேட்டி சாற்றுவர்) வெள்ளைநிற மலர் மாலைகள் அணிவித்து, வெண்நிறம் கொண்டதயிர்சாதம், பாலன்னம் பால்பாயஸம், வெண்கற்கண்டு, பொங்கல் போன்ற நிவேதனங்கள் செய்து வெள்ளை மலர்களால் அர்ச்சிப்பது சிறப்பு என்பர்.

    • இந்த வரலாறு மூலம் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்தது நமது வீரபத்திரர்தான் என்பது தெரியும்.
    • நிறைய சிவாலயங்களில் சரபேஸ்வரர் சிலை தூண்களில் உள்ளது.

    வீரபத்திரரே சரபேஸ்வரர்

    இரணியன் என்ற அரக்கனைத் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்றார்.

    இரணியனின் குடலை மாலையாக்கிக் ரத்தம் குடித்துச் கோபத்தில் ஆரவாரித்தார்.

    அவருடைய கோபத்தைச் சிவபெருமானே தீர்க்க வேண்டும் என்று தேவர்கள் முறையிட, சிவன் தன்சார்பில் வீரபத்திரரை அனுப்பினார்.

    வீரபத்திரர் எட்டுக் கால்களும், இரண்டு பெரிய சிறகுகளும், சிங்க முகமும், நீண்டு வளைந்த மூக்கும் கொண்ட சரபப் பட்சியானார்.

    திருமாலுடன் போரிட்டு வென்றார். திருமாலின் கோபத்தை அடக்கினார் என்கிறது சரப புராணம்.

    இந்த வரலாறு மூலம் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்தது நமது வீரபத்திரர்தான் என்பது தெரியும்.

    நிறைய சிவாலயங்களில் சரபேஸ்வரர் சிலை தூண்களில் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் இந்த வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது.

    • அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர்.
    • இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார்.

    வீரபத்திரர் அவதார கதை-ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன்

    அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார்.

    அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது.

    இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர்.

    வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர்.

    தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள்.

    இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார்.

    அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர்.

    தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.

    அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

    இது தான் வீரபத்திரரின் அவதார கதை.

    இந்த அவதார நிகழ்வு எங்கு நடந்தது?

    அதன் பிறகு வீரபத்திரர் மக்களுக்கு எப்படி அருள் புரிகிறார்?

    வீரபத்திரரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

    அவர் வீற்றுள்ள தலங்கள் எங்கெங்கு உள்ளன?

    என்பன போன்ற தகவல்கள் இந்த பதிவில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தை பிறந்தால் வழி பிறக்கும் வீரபத்திரரை வழிபட்டால் வீரம், விவேகம், வெற்றிகள் தேடி வரும்.

    வீரபத்ர மூர்த்தியார் வீர மனம்கொடுப்பார்

    தீராசெவ் வாய்தோஷம் தீர்த்திடுவார்-ஊரெல்லாம்

    நீர்மழை பெய்வார் நிறைந்திடும் செல்வங்கள்

    ஏர்வளம் காணும் நிலம்!

    ×