என் மலர்
நீங்கள் தேடியது "உதடு"
- பீட்ரூட் உலர்ந்த உதடுகளை பொலிவாக்கக் கூடியது.
- பீட்ரூட் இயற்கையான ‘லிப் பாம்’ ஆகவும் செயல்படக்கூடியது.
உதட்டை அழகுபடுத்துவதற்கு லிப்ஸ்டிக் போன்ற அழகு சாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்றில்லை. உதட்டின் நிறத்திற்கு ஏற்பவே பளிச் வண்ணத்தில் மிளிரும் பீட்ரூட்டும் சிறந்த உதட்டு அலங்கார பொருள்தான். இது சரும பராமரிப்பிலும் முக்கிய இடம் பிடித்துள்ளது. உதடுகளை இளஞ்சிவப்பு நிறத்தில் பொலிவு பெற வைப்பதோடு மென்மைத்தன்மையை தக்க வைக்கக்கூடியது.
சரும பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்கள் முகத்திற்கு விதவிதமான பேஸ் பேக்குகளை பயன்படுத்துவதுண்டு. முகத்திற்கு கொடுக்கும் முக் கியத்துவத்தை உதடுகளுக்கு கொடுக்க தவறிவிடுவார்கள். உதட்டு பராமரிப்புக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்று தெரியாமல் குழம்பவும் செய்வார்கள். அந்த குறையை பீட்ரூட் போக்கிவிடும். உதட்டுக்கு பிரகாசத்தையும், கூடுதல் அழகையும் பெற்று தரும்.
பீட்ரூட்டில் இருக்கும் வைட்டமின் சி சத்து, உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்கக்கூடியது. பீட்ரூட் இளம் சிவப்பு நிறத் தினால் ஆனது. அதே நிறத்தை உதடுகளுக்கும் கொடுக்கக்கூடியது. உதட்டுக்கு இயற்கை மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடியது. பீட்ரூட் உதட்டுக்கு அழகு சேர்ப்பதோடு, உலர்ந்த உதடுகளை பொலிவாக்கக் கூடியது.
உதட்டு வெடிப்புகளையும் போக்கக்கூடியது. தினமும் பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும். மேலும் உதடுகளில் உள்ள வெடிப்புகள், கோடுகளை குறைத்து இளமை பொலிவை தக்க வைக்கும். விரைவில் வயதான தோற்றம் எட்டிப்பார்ப்பதை தள்ளிப்போடும்.
பீட்ரூட்டை நன்றாக மசித்து, அதனுடன் சர்க்கரை கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து தினமும் உதட்டில் தடவி வரலாம். அவ்வாறு செய்யும்போது இறந்த செல்கள் அகற்றப்படும். உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மிளிரும்.
பீட்ரூட் இயற்கையான 'லிப் பாம்' ஆகவும் செயல்படக்கூடியது. ஒரு துண்டு பீட்ரூட்டை அரை மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைத்துவிட்டு, அதனை உதடுகள் மீது தடவினால் போதுமானது. சில நொடிகள் தேய்த்தாலே போதும். உதடுகள் ரோஜா மலர் போல பொலிவுடன் காட்சி அளிக்கும். ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாற்றுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து உதடுகள் மீது தேய்த்து வந்தாலும் உதடுகள் பிரகாசமடையும். பீட்ரூட் மற்றும் எலுமிச்சை இரண்டிலும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உதடுகளை பிரகாசமாக்க உதவுகின்றன.
- சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
- உதட்டின் கருமைக்கு சித்த மருத்துவத்தில் நிரந்தர தீர்வுகள் உள்ளன.
பொதுவாக ஒருவரின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.
அதிக குளிர், அதிக வெப்பம் காரணமாகவும் சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கருத்து, வெடிப்புகளும் ஏற்படும்.
இதனை கவனிக்கமால் விட்டால் இன்னும் கருப்பாக மாற்ற வாய்ப்பு இருக்கும். இதனை எளியமுறையில் கூட நீக்க முடியும்.
தற்போது உதட்டு கருமை நீக்க சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
இதற்கான மருத்துவம்: பீட்ரூட் சாறுடன், சிறிதளவு குங்குமப்பூ கரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு, கருப்பு நீங்கும். பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும். வெண்ணெயுடன், ஆரஞ்சு பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தாலும் வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும். ரோஜா இதழ்களின் சாறு, கேரட் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கருப்பு நீங்கும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499
- இது மிகவும் பொதுவான பிரச்சனையாகும்.
- சில பழக்கவழக்கங்கள் நம் உதடுகளை கருமை மாற்றும்.
பிக்மென்டேஷன் என்பது தோல் தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதில், நமது சருமம் கருமையாகி புள்ளிகள் ஏற்படும் அல்லது கருமையான திட்டுகள் வரும்.
தோல் பிக்மென்டேஷன் போலவே, உதடு பிக்மென்டேஷனும் (lip pigmentation) மிகவும் பொதுவான பிரச்சனையாகும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதில் பாதிக்கப்படலாம். ஹெல்த்லைன் படி, உதடுகள் கருமையாக இருப்பது ஹைப்பர் பிக்மென்டேஷனின் விளைவாக இருக்கலாம். இது மெலனின் அதிகமாக இருப்பதால் ஏற்படும் பொதுவாக பாதிப்பில்லாத நிலை.
மாசு, சூரியக் கதிர்கள் போன்ற பல காரணங்களால் உதடுகள் நிறம் மாறலாம். சில பழக்கவழக்கங்கள் நம் உதடுகளை கருமையாக மாற்றினாலும், பிக்மென்டேஷனை மாற்றுவதற்கான வழிகள் இன்னும் உள்ளன.
லிப் பிக்மென்டேஷன் மிகவும் பொதுவானது, சரியான சிகிச்சைகளைப் பயன்படுத்தி இதை எளிதில் மாற்றியமைக்க முடியும்.
* பகலில் வெளியே செல்லும் முன் உதடுகளில் சன்ஸ்கிரீன் போடவும்.
* உங்கள் உதடுகளை கடிக்கவோ அல்லது நக்கவோ கூடாது, ஏனெனில் இது வீக்கத்தால் தூண்டப்பட்ட ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.
* வாரத்திற்கு இரண்டு முறை கெமிக்கல் பீல் பயன்படுத்தவும்.
* வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை லேசான எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்தவும்.
எந்தவொரு க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யவும், எந்த சிகிச்சையையும் தொடங்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
- பல் மருத்துவமனையின் சிகிச்சை பெறவந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்ப்பாராத விதமாக வெட்டி விட்டார்
- அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது.
தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்தது.
அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.
அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதே மருத்துவமனையால் தனது தோழியும் பாதிக்கப்பட்டதாக x வலைதளப்பக்கத்தில் ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.
அதில். "ஜீப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பல் மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பல் சிகிச்சை பெற்ற ஒருவர் அதிக அளவு மயக்கமருந்து செலுத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் வெளியானது. இதே மருத்துவமனையில்தான் எனது தோழி ஒருவருக்கும் இதற்கு முன்பு இது போன்ற சம்பவம் நடைபெற்றது. பல் மருத்துவமனையின் சிகிச்சை பெற வந்த எனது தோழியின் உதட்டினை பல் மருத்துவர் எதிர்பாராத விதமாக வெட்டி விட்டார்.இது நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது.
இருப்பினும் அதன் வடுக்கள் இன்னும் அவளது உதட்டில் உள்ளது. அவளால் உதட்டை முழுமையாக நீட்டவோ, சிரிக்கவோ முடியாது. அவளது உதட்டின் ஒரு மூலை பகுதி காணாமல் போய் உள்ளது. இதற்காக அவள் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொண்டு வருகிறாள்.மேலும் இதனை சரிசெய்ய வருங்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆகவே மீண்டும், மீண்டும் அலட்சியம் காட்டும் இந்த மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினை அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அந்த மருத்துவமனையில் உரிமத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.
- பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.
நீங்கள் இப்போது தான் மேக்கப் போட கற்றுக் கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த டிப்ஸ்கள் மிக உதவியாக இருக்கும். உங்களை அழகுபடுத்திக் கொள்ள...
நீங்கள் விரும்பும் அழகிய உதடுகள் சில நொடிகளில் இந்த மேக்அப் ட்ரிக் மூலம் பெற்றுவிடலாம்.
* சுத்தமான மாய்ஸ்சுரைஸ் செய்யப்பட்ட முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஃபவுண்டேஷனை பூசவும்.
* சுத்தமான பிரஷ் மூலம் பிளெண்ட் செய்து விடவும்.
* முகத்தில் இருக்கும் மாசுமருக்களை மற்றும் கருவளையத்தை மறைக்க முகத்தில் கன்சீலரை பூசவும்.
* ஐஷாடோவை கண்ணிமைகளில் பூசவும்.
* உங்கள் உதட்டின் இயற்கையான நிறத்தை விட ஒரு ஷேட் அடர்த்தியான நிறத்தில் லிப் பென்சிலை பயன்படுத்தி உதட்டில் கோடை வரையவும். உங்கள் உதட்டின் வெளிப்புற லைனில் லிப் லைனரை பயன்படுத்தவும்.
* அடர்த்தியான சிவப்பு நிற ஷேடை உதட்டில் பயன்படுத்தவும்.
* சிறிது ஹை லைட்டரை உங்கள் உதட்டின் நடுவே பயன்படுத்தவும்.

உதட்டிற்கு மேலும் அழகேற்ற...
* உதட்டில் கொஞ்சம் ஃபவுண் டேஷன் இட்டு, சருமத்துடன் கலக்கச் செய்யுங்கள்.
* உதட்டைச் சுற்றி பவழ லிப் லைனரால் கோடு வரையுங்கள்.
* அதே லைனர் கொண்டு உதட்டின் உள்புறமும் நிரப்புங்கள்.
* உதட்டின் உள்ளே பவழ லிப்ஸ்டிக்கை இடுங்கள்.
* திஷ்யு பேப்பர் கொண்டு துடைத்து, மீண்டும் இடுங்கள். இதன்மூலம் உதட்டுச்சாயம் நீண்ட நேரத்துக்கு இருக்கும்.
மேட் லுக்குக்கு 5வது ஸ்டெப் உடன் நிறுத்தவும். பளபளப்பு லுக்குக்கு கிளியர் கிளாஸ் இட வேண்டும்.
- தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம்.
- உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட ‘லிப் பாம்' பூசவும்.
சுற்றுச்சூழலில் உள்ள மாசு, பருவநிலை மாறுபாடு, ரசாயனங்களின் பயன்பாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் உதடுகள் வறட்சி அடைவது, உதட்டில் தோல் உரிவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். உதடுகள் மென்மையாகவும், பொலிவோடும் இருக்க அவற்றை தினசரி பராமரிப்பது அவசியமாகும். அதற்கான குறிப்புகள் இங்கே...
* உதடுகள் அதிகமாக கருமை அடைவது ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறியாகும். புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் கருமையை போக்க முடியும்.
* உதட்டுச்சாயம் பூசிய பிறகு அடிக்கடி கைகளால் உதடுகளை தொட்டுப்பார்ப்பதை தவிர்க்கவும். உதட்டுச் சாயத்தில் எந்தவிதமான பாதுகாப்பு அம்சங்களும் இருக்காது. நீங்கள் உதடுகளை தொடும்போது கைகளில் உள்ள கிருமிகள் உதடுகளில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும்.
* உதடுகள் வறட்சி அடையும்போது அடிக்கடி நாக்கினால் ஈரப்படுத்துவதைத் தவிர்க்கவும். உமிழ்நீர் உலர்ந்தவுடன் உதடுகள் மேலும் அதிகமாக வறட்சி அடையும். உமிழ்நீரில் உள்ள நொதிகள் உதடுகளின் மென்மையான தோலில் பாதிப்புகளை உண்டாக்கும்.
* தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலை நீரேற்றத்தோடு வைத்திருப்பதோடு, உதடுகளையும் ஆரோக்கியமாக பராமரிக்க உதவும்.
* இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது முழு உடலுக்கும் தேவையான ஓய்வு அளித்து புத்துணர்ச்சியாக்கும். தூங்க செல்வதற்கு முன்பு உதடுகளில் பூசியுள்ள உதட்டுச்சாயத்தை நீக்குவது முக்கியமானது.
* உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க அவற்றில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்கு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மென்மையான லிப் ஸ்கிரப்பர்களை பயன்படுத்துவது நல்லது.
* தோல் உரிவதால் உதடுகளில் உண்டாகும் காயங்களை குணப்படுத்த தேன் மெழுகு உதவும். சிறிதளவு தேன் மெழுகை உதட்டில் சீராக பூசவும். அது உலர்ந்த பின்பு மீண்டும் ஒரு படலமாக தேன் மெழுகை பூசவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து அதைக்கொண்டு உதடுகளை சுத்தமாக துடைக்கவும். தேன் மெழுகில் உள்ள ஊட்டச்சத்துகள் உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைத்து, தோல் உரிவதால் ஏற்பட்ட காயங்களை எளிதில் குணமாக்கும்.
* தினசரி காலை, மாலை இருவேளையும் ரோஜா எண்ணெய்யை உதடுகளில் பூசி வரலாம். இது உதட்டில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்துவதோடு, உதடுகள் விரைவில் வறட்சி அடைவதில் இருந்து பாதுகாக்கும்.
* சிறிதளவு கோகோ, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உதட்டில் பூசவும். இது கடினமான உதட்டின் தோலை மென்மையாக்கி, உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
* உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும். வெளியில் செல்லும்போது புறஊதாக்கதிர் தாக்கத்தை தடுக்கும் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்ட லிப் மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தவும்.
* உதடுகளின் ஈரப்பதத்தை தக்கவைக்க இயற்கையான பொருட்கள் கொண்டு தயரிக்கப்பட்ட 'லிப் பாம்' பூசவும்.
- பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது.
- வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்லது காய்ந்து போகாது.
நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்லது அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்பநிலை உயர்ந்து விட்டதன் அறிகுறியே இது. ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும்.
வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல வேண்டும். இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள உஷ்ணம் குறையும், உதடுகளும் தானாகவே வறண்டு போகாது, அல்லது காய்ந்து போகாது.
உதடு சொரசொரப்பாக வறட்சியாக இருந்தால், தேனுடன் சர்க்கரையை சேர்த்து லேசாக தேய்த்தால் உதடு மிருதுவாகி விடும். குடை மிளகாய் வாங்கும் போது லேசாக ஆட்டிப்பார்த்து வாங்கவும். விதைகள் உள்ளே உருண்டால், அவை புதியது அல்ல.
தயிருடன் கடலை மாவை சேர்த்து முகத்தில் தடவி வர வெயிலினால் ஏற்படும் கருமை நீங்குவதுடன் எண்ணெய் பிசுபிசுப்பும் நீங்கும். வெறும் புளித்த தயிரை வீணாக்காமல் மஞ்சள் சேர்த்து தடவினால் முகத்தில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். அழுக்குகளும் நீங்கும்.
- இன்று பெண்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் லிப்ஸ்டிக் போடுவார்கள்.
- உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக லிப்ஸ்டிக் உள்ளது.
இன்று பெண்கள் பலரும் தங்கள் உதடுகளை அழகாக வெளிக்காட்ட அன்றாடம் தவறாமல் லிப்ஸ்டிக் போடுவார்கள். லிப்ஸ்டிக்கை போடுவதால் உதடுகள் பொலிவிழந்து போவதோடு, உடலின் உள்ளுறுப்புகளும் பாதிப்படைய ஆரம்பமாகும். அத்தகைய லிப்ஸ்டிக்கை போடுவதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி பார்ப்போம்.
லிப்ஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் * லிப்ஸ்டிக்கில் குரோமியம், காட்மியம் மற்றும் மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால் தினமும் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள உறுப்புகள் பாதித்து கடுமையான நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.
* லிப்ஸ்டிக்கில் காட்மியம் சிறுநீரகத்தில் படிந்து அவை நாளடைவில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். மேலும் ஒரு நாளைக்கு பலமுறை லிப்ஸ்டிக் போட்டுவதினால் வயிற்றில் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.
* லிப்ஸ்டிக்கை அன்றாடம் பயன்படுத்தி வந்தால் உடலில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதோடு, மூளையும் பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு முக்கிய காரணம் லிப்ஸ்டிக்குகளில் நரம்புகளை அழிக்கக்கூடிய ஈயம் அதிகமாக இருப்பதுதான்.
* உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மிக முக்கிய காரணமாக லிப்ஸ்டிக் உள்ளது. மேலும் இதனால் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.
* லிப்ஸ்டிக் தயாரிப்பில் பெட்ரோகெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதால் இவை நாளமில்லா சுரப்பிகளில் சீர்குலைவை ஏற்படுத்தி இனப்பெருக்கம், வளர்ச்சி, புலனாய்வு திறன் போன்றவற்றை அழிக்கும்.
* உடலில் புற்றுநோயைத் தூண்டும் ஃபார்மால்டிஹைடு லிப்ஸ்டிக் அதிக அளவு உள்ளது. மேலும் இதனால் மூச்சுத்திணறல், இருமல், கண்கள் மற்றும் சரும எரிச்சல் போன்ற இதர பக்க விளைவுகளும் ஏற்படும்.
* லிப்ஸ்டிக் உள்ள முக்கிய பொருளான கனிம எண்ணெய் சருமத்துளைகளை அடைக்கும் தன்மை கொண்டது, இதனை தினமும் பயன்படுத்தி வருவதினால் உதடுகளின் இயற்கை அழகு பாதிக்கும்.