என் மலர்
நீங்கள் தேடியது "பகத் ஃபாசில்"
- இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார்.
- அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது இயக்குனர் எஸ்.ஜே சூர்யா என்ற அடையாளத்தை மறைத்துவிட்டு நடிகர் எஸ்.ஜே சூர்யாவாக ஆகிவிட்டார். நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் தனுது அபாரமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைதொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, டான் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார்.
கடந்த ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலில் மாபெரும் உச்சத்தை தொற்றது. தமிழ் மற்றும் தெலுங்குவில் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
வீர தீர சூரன், இந்தியன் 3, ராயன், கேம் சேஞ்சர், எல்.ஐ.சி, சூர்யாஸ் சாட்டர்டே பல சுவாரசிய லைன் அப்ஸ்களை கையில் வைத்துள்ளார் எஸ்.ஜே சூர்யா.
இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விபின் தாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இதற்கு முன் மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படங்களை இயக்கியவர் விபின் தாஸ், இந்த இருப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. பகத் பாசிலின் நடிப்பில் சளைத்தவர் கிடையாது.
பகத் ஃபாசில் சமீபத்தில் நடித்து வெளியான ஆவேசம் திரைப்படம் பார்த்து எஸ்.ஜே சூர்யா அவரின் மிகப்பெரிய ஃபேன் ஆகியதாக கூறியுள்ளார். இந்த உச்சக்கட்ட நடிகர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள ரசிகர்களால் ஃபாஃபா என்று அன்புடன் அழைக்கப்படுபவர் ஃபகத் ஃபாசில். மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் தெலுங்கில் புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் வெளியான வேட்டையன் திரைப்படத்தில் பேட்டரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். படத்தில் தனது நடிப்பு ஆற்றல் மூலம் அசத்தியுள்ளார் குறிப்பாக காமெடி காட்சிகளில் கலக்கியுள்ளார்.
இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் பொகெயின்வில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஃபகத்தின் நெருங்கிய நண்பரான அமல் நீரட் இயக்கியுள்ளார்.இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுடன் , குஞ்சாக்கோ போபன், வீணா நந்த குமார், ஜோதிர்மயி, ஸ்ரீண்டா, முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் தன் நினைவுகளை மறக்கும் ஒரு பெண் அவளுக்கும் காணாமல் போன பெண்களுக்கு உள்ள தொடர்பை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது.
ஆனந்த சந்திரன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுஷின் ஷியாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்நடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
- 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

புஷ்பா
இந்நிலையில், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் உருவாகவுள்ளதாக நடிகர் பகத் ஃபாசில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகத் ஃபாசில் கூறியதாவது, " புஷ்பா படத்தின் கதையை வெப் தொடராக எடுக்கத்தான் இயக்குனர் திட்டமிட்டிருந்தார். பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.

புஷ்பா
முதலில் என்னிடம் கதை சொல்லும் போது 'புஷ்பா 2' எடுக்கும் எண்ணம் இயக்குனர் சுகுமாருக்கு இல்லை. காவல் நிலைய காட்சிகளை படமாக்கிய பின்புதான் அவருக்கு 'புஷ்பா 2' எடுக்கும் எண்ணம் வந்தது.
சமீபத்தில் இயக்குனர் சுகுமாரிடம் பேசியபோது புஷ்பா மூன்றாம் பாகத்திற்கு தயாராக இருங்கள். நிறைய கதைகள் சொல்லவேண்டி இருப்பதால் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று பேசினார்" என பகத் ஃபாசில் கூறியுள்ளார்.
- இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள திரைப்படம் மலையன் குஞ்சு.
- மலையன் குஞ்சு திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.
ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.

மலையன் குஞ்சு
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சஜிமோன் பிரபாகர் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் திரைப்படம் 'மலையன்குஞ்சு'. இப்படத்தில் ரஜிஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு இயக்குனர் மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
பகத் ஃபாசில் அண்ட் ஃபிரண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படதின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.