search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு நெருக்கடி"

    • எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
    • அதிக லாபம் பெறும் எண்ணத்தில் வர்த்தகர்கள் தானியங்களை பதுக்குவதும் நடக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    உலக வானிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்காவிலிருந்து சீனா வரை கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பல நாடுகளில் உணவு உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, தனது உள்நாட்டில் அரிசி விலையேற்றத்தை தவிர்க்க, அனேக வகை அரிசி ரகங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்திருக்கிறது.

    போர் காரணமாக, உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கோதுமை, சோளம் உட்பட தானிய ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் 'கருங்கடல் ஒப்பந்தம்' எனும் உடன்படிக்கையிலிருந்து ரஷியா வெளியேறியது.

    எல் நினோ எனப்படும் பருவகால வானிலை மாற்றங்கள் கடுமையாகியிருக்கிறது. இது இன்னும் தீவிரமடையலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.

    இது ஒரு புறமிருக்க உலகின் பல நிறுவனங்களில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது.

    இது போன்ற காரணங்களால் உணவு பொருட்களின் கையிருப்பு குறைவதும், அவற்றின் விலை பன்மடங்காக அதிகரிப்பதும், அதிக லாபம் பெறும் எண்ணத்தில் வர்த்தகர்கள் தானியங்களை பதுக்குவதும் நடக்கலாம் என்றும், இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் உணவு நெருக்கடியை சந்திக்க நேரும் அபாயம் உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    குறிப்பாக ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் வெப்பத்தால் தொடர் வறட்சி, பெருமழையால் வெள்ளம் என வானிலை மாறுதல்கள் மாறி மாறி நிகழ்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள். ஐரோப்பாவில் பசு மாடுகள் மிக குறைவாக பால் சுரக்கின்றன.

    இவை போன்ற சாதகமற்ற காரணிகள் மாறும் வரை இத்தகைய சூழல் தொடரும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உக்ரைன் மீதான போருக்கு பிறகு புதின் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
    • உலகில் இருந்து ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி சாத்தியமற்றது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. தற்போது வரை அந்த நாடு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷியா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷிய தானிய ஏற்றுமதிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், சர்வதேச உணவு சந்தைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் உணவு நெருக்கடியை தீர்க்க ரஷியா மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீதான போருக்கு பிறகு புதின் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவர் ஈரான் தலைநகர் தெக்ரானுக்கு சென்றார். அங்கு ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பின்னர் புதின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ரஷிய தானிய ஏற்றுமதிக்காக விமான விநியோகம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும்.

    உலக சந்தைகளுக்கு ரஷிய உரங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர். அது போன்று சர்வதேச உணவு சந்தைகளில் நிலைமையை மேம்படுத்த அவர்கள் உண்மையாக விரும்பினால் ரஷிய தானியங்களின் ஏற்றுமதி மீதான தடையை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும்.

    உலகில் இருந்து ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி, சிறிது அளவு கூட சாத்தியமற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×