என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எலக்ட்ரீசியன் கைது"
- போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
- சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ஓசூரில் உள்ள பஸ்டி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படி ஒரு வாலிபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கையில் எடுத்து கொண்டு நடந்து சென்றார்.
அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்தபோது, குடிபோதையில் இருந்த அவர் திடீரென்று கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோலை போலீசார் மீது ஊற்ற முயன்றார்.
அப்போது சுதாரித்து கொண்ட போலீசார் வாலிபரிடம் இருந்து பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனால் அவர் போலீசாரை ஆபாசமாக திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் பாகலூர் கே.கே.நகரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வடிவேல் (வயது35) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வடிவேலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மோட்டார் சைக்கிளை விட்டு சென்றதால் சிக்கினார்
- வாலிபர் ஒருவர் பணம் திருடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கோவை:
ஆனைமலை பொன்னாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 37). இவர் கோட்டூர் அடுத்த எஸ். பொன்னாபுரத்தில் உள்ள மதுைர வீரன் கோவிலில் பூசாரியாக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு காளிமுத்து வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றார். அப்போது கோவில் வழியாக குமார் என்பவர் நடந்த சென்றார். அவர் கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.சந்தேகம் அடைந்த குமார் கோவிலுக்குள் சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் பணம் திருடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே குமார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். ஆனால் அந்த வாலிபர், குமாரை தள்ளிவிட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே வீட்டு விட்டு தப்பி சென்றார்.
பின்னர் இதுகுறித்து குமார் கோவில் பூசாரி காளிமுத்துவிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறினார். அவர் கோவிலுக்கு வந்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் பொள்ளாச்சி கோலார்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் லிங்கு பூபதி (32) என்பவரது மோட்டார் சைக்கிள் என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்தது தெரியவந்து. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கு பூபதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்