search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைத்துனர் கொலை"

    • ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது தம்பி கோபி. கோபியின் மனைவி குமாரி. கோபி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாரி மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது கோபியின் அண்ணன் ராஜுடன் குமாரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதில் உடன்பாடு இல்லாத ராஜு இது தவறான உறவு என கூறி வந்தார். இருப்பினும் ராஜுவின் அறிவுரையை பொருட்படுத்தாத குமாரி கணவர் இல்லாத ஆசையை நிறைவேற்ற கோரி அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.

    ஒரு கட்டத்தில் ராஜு கள்ளத்தொடர்புக்கு மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. தனது ஆசையை நிறைவேற்ற மறுக்கும் மைத்துனரை கொலை செய்ய குமாரி முடிவு செய்தார்.

    இதையடுத்து 2 வாலிபர்களை அழைத்து வந்து தூங்கிக் கொண்டு இருந்த ராஜுவை கல்லால் தாக்கி கொலை செய்தார். பின்னர் வாலிபர்கள் உதவியுடன் ராஜுவின் உடலை பள்ளம் தோண்டி புதைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தார்.

    ராஜு திடீரென காணாமல் போனதால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பஞ்சாயத்து கூட்டி குமாரியிடம் விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த அவர் பஞ்சாயத்தாரரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை கக்கினார்.

    ஆசைக்கு இணங்க மறுத்ததால் மைத்துனரை வாலிபர்கள் உதவியுடன் கல்லால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குமாரியை சராமாரியாக அடித்து உதைத்தனர்.

    பின்னர் கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரியை கைது செய்தனர்.

    மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை இளம்பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவக்குமாருக்கும், சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கம்பம் நகர் தெற்கு போலீசார் சங்கரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் 15வது வார்டு கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். கூலித்தொழிலாளி. இவருக்கு சிவக்குமார் (வயது 25), சங்கர் (22) ஆகிய 2 மகன்களும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

    சங்கீதாவுக்கு மதுரை பேரையூரைச் சேர்ந்த காளிராஜ் (31) என்பவருக்கும் திருமணமாகி தனது மாமனார் வீட்டருகே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. சகோதரர்களான சிவக்குமார் மற்றும் சங்கர் ஆகிய 2 பேரும் டைல்ஸ் கடைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

    இதில் சிவக்குமாருக்கும், சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு வழக்கம் போல் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது வீட்டுக்கு வந்த காளிராஜ் தகராறை விலக்கி சமாதானப்படுத்த முயன்றார்.

    அப்போது தனது கையில் வைத்திருந்த கத்தியால் காளிராஜை எதிர்பாராதவிதமாக சங்கர் குத்தினார். இதில் படுகாயமடைந்த காளிராஜ் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கம்பம் நகர் தெற்கு போலீசார் சங்கரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் பயந்துபோன சங்கர் தனது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரது உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×