என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜி.எம்.குமார்"
- சென்னை, பெங்களூரு, கோவா வழியாக மும்பை சென்று அதன் பின் சென்னை திரும்பினார்
- முதல் படத்தில் நடித்த பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்
சென்னையை சேர்ந்தவர் நடிகர் ஜி.எம்.குமார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தோற்றம் கொண்டவர். 1986-ல் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தில் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து பிட் பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற பல படங்களை இயக்கினார். 1993-ல் 'கேப்டன் மகள்' என்ற படம் மூலம் நடிகரானார். அதன் பின் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தார். மேலும் கொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
பல படங்களை தயாரித்து இயக்கியதால் அதில் தோல்வி ஏற்பட்டு நஷ்டம் அடைந்தார். அதனால் சில வருடம் சினிமா பக்கம் செல்லாமல் இருந்தார். அதன்பின் 'வெயில்' படம் இவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது. முதல் படத்தில் நடித்த நடிகை பல்லவியை அப்போது அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஜி.எம்.குமார் 'எக்ஸ்' இணைய தளத்தில் 'எனது முன்னாள் காதலியை பார்க்க 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் கார் ஓட்டிச் சென்றேன். சென்னை, பெங்களூரு, கோவா மும்பை அதன் பின் சென்னை' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.இது குறித்து இணைய தளத்தில் நெட்டிசன்கள் பலர் பலவித விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
- அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார்.
- பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் 1986-ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
1993-ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக உருவெடுத்தார். 2011-ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இதை தொடர்ந்து மலைக்கோட்டை, மச்சக்காரன், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தாரதப்பட்டை, சரவணன் இருக்க பயமேன், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஜி.எம்.குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் எதார்த்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்த ஜி.எம்.குமார் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்