என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிகர்தண்டா-2"

    • சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா.
    • இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

     

    ஜிகர்தண்டா

    ஜிகர்தண்டா

    பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி 8 வருடங்கள் நிறைவு செய்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதனை நினைவு கூர்ந்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டிருந்தார். அதன்படி இப்படம் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

     

    இறைவி

    இறைவி

    இந்நிலையில் ஜிகர்தண்டா-2 படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இதற்குமுன்பு இந்த கூட்டணியில் வெளியான இறைவி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா.
    • இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி இருந்தார்.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

     

    பலரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

     

    அதன்படி பல ஆண்டுகளாக எதிர்ப்பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ளார்.

     

    இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளதாக அந்த வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×