என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞானவேல் ராஜா"

    • சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.
    • திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

    சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவாவின் முதல் பாடல் வரும் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு.
    • தங்கலான் வெளியீட்டுக்கு முன் பணம் செலுத்த வேண்டும்.

    இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

    இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. இப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிக்கள் பணம் கொடுத்து வைத்துள்ளனர். இவர் அந்த பணத்தை பலரிடம் கடனாக கொடுத்தார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலனவராக அறிவிக்கப்பட்டார்.

    மேலும், அவர் உயிரிழந்துவிட்டார். இவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்திடன் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த பணத்தை திருப்பி வாங்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அந்த வகையில் அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆன ஞானவேல் ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் கடந்த 2013 ஆம் ஆண்டு ரூ. 10 கோடியே 35 லட்சம் கடன் வாங்யிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி சொத்தாட்சியர் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில் ரூ. 10 கோடியே 35 லட்சம் கடனுக்கு கடந்த 2013 ஆண்டு முதல் 18 சதவீதம் வட்டி, வழக்கறிஞர் கட்டணம் சேர்த்து ரூ. 26 கோடியே 36 லட்சம் வழங்க வேண்டும் என்றும் இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலனவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஜி ஜெயசந்திரன் மற்றும் சிவி கார்த்திகேயன் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அதன் பின் படத்தை வெளியிடலாம்.

    இதே போல் கங்குவா படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் பணம் செலுத்தியது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது.
    • வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வட இந்தியாவில் 3500 மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தை வட இந்தியாவில் ப்ரோமோஷன் பணிக்காக மட்டும் 15 கோடி ரூபாய் செலவளித்துள்ளதாகவும். வட இந்தியாவில் படத்தை திரையிட 7 கோடி ரூபாயும், மொத்தம் 22 கோடி ரூபாய் வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காக செலவு செய்துள்ளோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாகூறியுள்ளார்.

    இந்நிலையில், இன்று மும்பையில் நடைபெற்ற கங்குவா புரமோஷனில் சூர்யா, திஷா பதானி, சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது, ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்து கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து சூர்யா தனது ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் கூட, தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட என்னை போல் குரல் கொடுக்கவில்லை.
    • ஜெய்பீம் படத்தையும் நான் பார்க்கவில்லை.

    சென்னையில் நடைபெற்ற 'காக்கா' படத்தின் நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பேசியதாவது:-

    போன வாரம் கங்குவான்னு ஒரு படம் ரிலீஸ் ஆனது. நான் என்ன தப்பு பண்ணேன் சொல்லுங்க. என்னை எல்லாரும் போட்டு திட்டுறீங்களே. திருக்குறளில் இல்லாத வார்த்தையெல்லாம் இருக்கு. என்னை மட்டும் திட்டுன்னா பரவாயில்லை. மேல் வீட்டுக்காரன், கீழ் வீட்டுக்காரன், பக்கத்து வீட்டுக்காரன், எதிர் வீட்டுக்காரன், இந்த தெரு, அந்த தெரு எல்லா தெருவில் உள்ளவர்களை சேர்த்து ஒரே திட்டுக்கிட்டு இருக்காங்க...

    அந்த படத்தின் மீது படம் பார்த்த உங்கள விட எனக்கு தான் கோபம் அதிகம் வரணும். ஏன் தெரியுமா. அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, சிறுத்தை படம் பண்ணும் போதில் இருந்து எனக்கு அவர தெரியும். என்னை அந்த படத்தில் பயன்படுத்தி இருக்கலாம் இல்ல... எத்தனை தடவை போன் பண்ணி பேசியிருப்பேன். என்னை பயன்படுத்தி இருக்கலாம் இல்ல. ஒரு வேளை கேரக்டர் இல்லாமல் இருந்துக்கலாம். ஓகே.

    அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார், அவர் வந்து செல்லம்.. தங்கம்-ன்னு என்மேல ரொம்ப பாசமாக இருப்பாரு. அவரும் என்னை பயன்படுத்தல. நீங்க பயன்படுத்தாமல் என்னை இருந்தாலும் அந்த படத்திற்கு அவ்வளவு விமர்சனம் வந்த போதும் நான் தான் முதன் முதலாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு தான் ஜோதிகா மேம் குரல் கொடுத்தாங்க. சில தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்தாங்க. ஆனா விதை நான் போட்டது. அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் கூட, தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட என்னை போல் குரல் கொடுக்கவில்லை. உண்மையில் நான் கங்குவா படத்தை பார்க்கவே இல்லை. காரணம் என்னவென்றால் அந்த படத்தை பார்த்தால், அந்த படத்தில் இடம் பெற்று இருக்கும் கதாபாத்திரங்களை பார்க்கும் பொழுது அதிலெல்லாம் நான் நடித்திருக்கலாமே என்று தோன்றும் அதனால் தான் அந்த படத்தை நான் பார்க்கவில்லை. அதேபோல ஜெய்பீம் படத்தையும் நான் பார்க்கவில்லை. ஆகையால் என்னை திட்டாதீர்கள் என்றார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருமான வரித்துறையினர் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • தயாரிப்பாளர்கள் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்ட பலரின் வீட்டில் சோதனை நடைப்பெற்றது.

    சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோரது அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

     

    இந்நிலையில் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளது. 40 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.26 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே தயாரிப்பாளர்கள் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
    • தயாரிப்பாளர்கல் அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரை தொடர்ந்து மேலும் சில தயாரிப்பாளர்கள் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

    திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான படங்களின் வருமானத்தில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் பிரபல தயாரிப்பார்களான அன்புசெழியன், கலைப்புலி எஸ். தாணு ஆகியோரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் காலை முதலே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் லக்‌ஷ்மனன், மன்னார், சத்யஜோதி தியாகராஜன், சீனு உள்ளிட்ட தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ×